Tuesday, February 27, 2007

வசீகரமற்ற கவிதை

வசீகரமற்ற கவிதை

சுயம்
தனி அடையளத்திற்கான
விழைதலின் பொருட்டு
தேர்ந்தெடுக்கிறது
இருப்பதிலேயே கடினமான
ஒரு சொல்லை....

மறுதலிக்கப்பட்ட
சொற்கள்
முடிவற்ற வெளியில்
பயணிக்கின்றன
மற்றுமொரு கவிஞனின்
இருப்பிடம் தேடியபடி..

இருப்பு குறித்த
அவஸ்தைகள்
எதுவமற்ற கவிஞன்
சூல் கொண்ட மேகத்தை
கலைக்கும் புயலைப்போல
தேர்ந்தெடுத்த சொற்களைக்கூட
இரக்கமற்ற பேனாவைக்கொண்டு
அழிக்கிறான்....

வசீகரமிழந்த சொற்கள்
மெல்ல உதிர்க்கின்றன
கவிதைக்கான வேட்கையையும்
இருத்தலின் நம்பகத்தன்மையையும்...

முடிவற்ற வெளியிலிருந்து
எழும் விசும்பல்கள்
ஏதேனும் ஒரு சுயத்தை
அசைக்கும் சிறுபொழுதில்
எழுதப்படுகிறது
வசீகரமற்ற
தட்டையான
ஒரு கவிதை......

5 comments:

மஞ்சூர் ராசா said...

நன்றாக இருக்கிறது இந்த கவிதை. ஆனாலும் யாரோ ஒருவருடைய நடையை நினைவுப்படுத்துவதை சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

-ganeshkj said...

அருமையான கவிதை. இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று யோசித்தேன் :)
//
மறுதலிக்கப்பட்ட
சொற்கள்
முடிவற்ற வெளியில்
பயணிக்கின்றன
மற்றுமொரு கவிஞனின்
இருப்பிடம் தேடியபடி.. //

amazing !!

யாழினி அத்தன் said...

உங்க கவிதைகள் ஒரு கவிஞனின் தெறித்தல்களா இருக்கு. matured ஆகவும் இருக்கிறது. தமிழ்மணத்தில் நல்ல கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு உங்கள் கவிதைகள் நல்ல எடுத்துக் காட்டு. கொஞ்சம் abstract level-ஐ குறைச்சுக்கலாமோன்னு தோணுது. ஆனா அது என் அபிப்ராயம்தான். உங்க்ளுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்யுங்க.

Ayyanar Viswanath said...

நன்றி கணேஷ்


உங்கள் கருத்துக்கு நன்றி யாழினி அத்தன் :)

உங்கள் பெயர் தனி வசீகரம் ..:)

காயத்ரி சித்தார்த் said...

//மறுதலிக்கப்பட்ட
சொற்கள்
முடிவற்ற வெளியில்
பயணிக்கின்றன
மற்றுமொரு கவிஞனின்
இருப்பிடம் தேடியபடி..
//

கவிதை எழுதும்போது நிராகரிக்கப்படும் சொற்கள் என்னவாகும்னு நானும் கூட யோசிச்சிருக்கேன். என் கேள்விக்கு இந்த பதில் அழகா பொருந்துது!

Featured Post

test

 test