Wednesday, April 18, 2007

மணலில் புதையும் சொற்கள்



மரங்கள் அடர்ந்த
என் சொந்த வீட்டின்
இருப்பில்
மிகுந்ததே இல்லை
சொற்கள்

பறவைகள் துயிலெழுப்பும்
என் பழைய விடியல்களில்
எழுதப்பட்டதேயில்லை
எந்த ஒரு சொல்லும்

மலையேறி வழிதப்பி
காடலைந்து
மலையருவியின்
ஓடைத்தடம்பிடித்து
வீடடையும்
எந்த ஒரு நாளிலும்
எழுதப்பட்டதே இல்லை
ஒரு வரிகூட

பச்சை தொலைந்து
பறவைகள் இறந்த
இச்சாம்பல் வெளியை
நிரப்புகிறது
வெற்றுச் சொற்கள்

மணல் மூடிய
இந்நிகழ் வெளியில்
மிகுந்த சொற்களை
ஆழப்புதைத்து
பிரசவிக்க வேண்டும்
ஒரு நல்ல கவிதையை…



16 comments:

Anonymous said...

good one...

தமிழ்நதி said...

"பச்சை தொலைந்து
பறவைகள் இறந்த
இச்சாம்பல் வெளியை..."

பாலைவெளி வாழ்வை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் அய்யனார். 'பிரசவிக்க வேண்டும் ஒரு நல்ல கவிதையை'அப்படியானால் இது...?

சென்ஷி said...

அய்யனார்... கலக்கிட்டீங்க..

ஆனாலும் உங்க எல்லா கவிதையிலும் ஒரு அமானுஷ்யம் தெரியுது (எனக்கு மட்டும்தான் அப்படியா..!)

சீக்கிரமா எல்லா கவிதையையும் தொகுத்து ஒரு புக் போடுங்க.

சென்ஷி

Ayyanar Viswanath said...

நன்றி அனானி

தமிழ்நதி!
நல்ல கவிதை அப்படிங்கிறது முடிவற்றது ..அடைய முடியாத ஒரு இலக்கு


சென்ஷி ..சரியா உள்வாங்கி இருக்கிங்க நன்றி

புத்தகம் ..விரைவில்...;)

சென்ஷி said...

//புத்தகம் ..விரைவில்...;)//

அப்போ வாழ்த்துக்கள் முதலில்..

சென்ஷி

Jazeela said...

நல்ல கவிதை.

//பச்சை தொலைந்து
பறவைகள் இறந்த
இச்சாம்பல் வெளியை
நிரப்புகிறது
வெற்றுச் சொற்கள்
//
சென்னையில் காணாத பசுமையை இங்கு நான் காண்பதாக உணர்கிறேன். இங்கு விதவிதமான பறவைகளை கோடையில்லாத மற்ற மாதங்களில் பார்த்திருக்கிறேன். இன்னும் கேட்டால் சாம்பல் வெளிக் காணக் கிடைக்கவில்லை எனக்கு ;-). அதனால் வெளிநாட்டு தனிமை வாழ்க்கையை உணர்த்த வேறு வார்த்தைகள் உபயோகித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பொதுப்படையாக பார்த்தால் சரி ஆனால் இடத்தை நன்றாக தெரிந்ததால் இந்த விளக்கம். படித்துவிட்டு பாலைவெளி வாழ்க்கை இப்படித்தான் போலன்னு நினச்சிடக்கூடாதுன்னுதான் இந்த விளக்கம். //நிரப்புகிறது
வெற்றுச் சொற்கள்// நிரப்பவில்லை அலங்கரிக்கிறது தமிழ் சொற்கள் ;-)
//பிரசவிக்க வேண்டும்
ஒரு நல்ல கவிதையை// பிரசவீயுங்க ஒரு கவிதை தொகுப்பை விரைவில்.

Ayyanar Viswanath said...

நன்றி ஜெஸிலா

:)

காட்டாறு said...

//மிகுந்த சொற்களை
ஆழப்புதைத்து
பிரசவிக்க வேண்டும்
ஒரு நல்ல கவிதையை…
//

மெளனத்திற்கு ஈடான கவிதை கொடுக்க முடியுமா உங்களால். ;-)

Ayyanar Viswanath said...

கண்டிப்பா முடியாதுங்க
:)

ஆனா உள்ள ஒரு அதிர்வை ஏற்படுத்தனும்
அதான் கவிதை அதுக்கான போராட்டம்தான் இதெல்லாம்

-ganeshkj said...

இக்கவிதையை படித்தபோது நல்ல ஒரு கவிதையை படித்த மகிழ்ச்சி ஏற்பட்டது. கவிதைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் களம் ஆச்சரியமடைய வைக்கிறது.

செல்வநாயகி said...

நல்ல கவிதை.

கண்மணி/kanmani said...

சாரி அய்யனார் இதை எல்லாம் புரிஞ்சிக்கிற அளவு நமக்கு மேல்மாடி சரக்கு இல்லை.ஆனா கவிதை நன்றாக இருக்கிறது

MyFriend said...

இது நீங்க சொந்தமாக எழுதியதா??

//மணல் மூடிய
இந்நிகழ் வெளியில்
மிகுந்த சொற்களை
ஆழப்புதைத்து
பிரசவிக்க வேண்டும்
ஒரு நல்ல கவிதையை…//

சூப்பர்.. ;-)

Ayyanar Viswanath said...

கணேஷ்

புதிதான ஒரு களம் இருக்கமுடியுமான்னு எனக்கு தெரியல,ஆனா புதிதான பார்வை சாத்தியம்..மிகவும் நன்றி :)

செல்வநாயகி

பணிச்சுமையா? சமீபமா எந்த புதிய பதிவும் வரல..நிறைய எழுதுங்க செல்வா உங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கறோம் ..;)

கண்மணி

இருந்தாலும் தன்னடக்கம் இவ்வளவு இருக்க கூடாதுங்க உங்களுக்கு
கிடேசன் பார்க் ஒட்டி ஒரு ரசிகர் மன்றம் திறந்திருக்கோம் உங்கள் எழுத்துக்குன்னா நம்ப மாட்டேங்கிறிங்க :(

அனு
நான் தான் எழுதினேன் நம்புங்க
:)

Unknown said...

ayyanar,

pinnetinga.

காயத்ரி சித்தார்த் said...

ஹ்ம்ம்! ஒன்னுமே சொல்ல தோணல. :)

Featured Post

test

 test