Saturday, May 26, 2007

கனவின் வழி தப்புதல் – அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கி யின் தி மிர்ரர்



யாராலும் தொந்தரவிற்க்குட்படாத 110 நிமிடங்கள் உங்களிடம் இருக்கிறதா?ரஷ்ய புதினங்களில் பரிச்சயமுண்டா ?ஏதாவது ஒரு புத்தகம் குப்ரினோ தஸ்தாயெவ்ஸ்கியோ படித்திருந்தால் கூட போதும்.கவிதைகளின் மீது கிறக்கமுண்டா?சர்ரியலிச ஓவியங்களை பார்த்திருக்கிறீர்களா?அகத்தேடலைப்பற்றி ஏதேனும் தெரியுமா ஒரே ஒரு ஓஷோ அல்லது ஜே கே புத்தகம் படித்திருந்தால கூட போதும் இவற்றில் ஏதேனும் ஒரு கேள்விக்கு ஆமெனில் நீங்கள் தவற விடக்கூடாத படம் இது.இதில் எதிலேயும் நீங்கள் இல்லையா தயவு செய்து இப்படத்தை வாங்கி விடாதீர்கள்.பார்க்க முடியாதென்பது தெரிந்த விடயம்தான். ரஷ்ய இயக்குனரான அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் இயக்கத்தில் 1974 ம் ஆண்டு வெளிவந்த படமிது.மூன்று முறை என்னால் அரை மணி நேரத்திற்க்கு மேல் இப்படத்தை தொடர்ச்சியாய் பார்க்கமுடியவில்லை.ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் நேரடித் தொடர்பு இல்லை.குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள் வரவதை பார்த்துக்கொண்டிருப்பது எத்தகைய புதிர் தன்மையை நமக்கு தோற்றுவிக்குமோ அப்படித்தான் இருக்கிறது பாதிப்படம். வரைந்த அக்கோடுகளை ஓவியமாய் காணும்போது மெல்லிய அதிர்வு உள்ளே எழுகிறது. நம் அளவுகோளுக்கேற்ப இந்த அதிர்விருக்கும் என்பதனால்தான் மேற்சொன்ன ஆரம்பத் தகுதிகள்.

இந்த திரைப்படத்தில் காலம் உறைந்த படிமமாக காட்டப்படுகிறது.சம்பவங்கள் அல்லது நிகழ்வுகள் மட்டும் பதிவிக்கப்படுகிறது.காலம் ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை.இத்திரைப்படத்தை மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும் Spanish civil war க்கு முந்திய காலம்,போர்க்காலம் மற்றும் போருக்கு பிந்திய காலம் அதாவது 1930 க்கு முன்.1930 மற்றும் 1965 இக்காலகட்டங்களில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் தனிமை மற்றும் வலிகளை இப்படம் பேசுகிறது.மொத்தம் 12 screen shot களை உள்ளடக்கி இருக்கிறது.மரியா என்ற பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் ஒரு தனிமை வீட்டில் வசிக்கிறாள்.இவளின் துயரங்கள்,பதட்டங்கள் 1930 காலகட்டத்தில் பதிவிக்கப்படுகிறது.நிகழ் காலத்தில் (1960) மரியாவின் மகனான அலேக்ஸேயின் மனைவியான நடாலியாவின் துயரங்கள் பதிவிக்கப்படுகிறது.மரியா வாகவும் நடாலியா வாகவும் நடித்திருப்பது ஒருவர்தான் Margarita Terekhova

ஆரம்பகாட்சியான சிகிச்சைமுறைக்கும் படத்திற்க்கும் என்ன தொடர்பென்பது தெரியவில்லை.ஒரு பெண் மருத்துவர் திக்குவாய் கொண்ட இளஞைனுக்கு காந்த சிகிச்சை முறையில் அல்லது மனோவசிய முறயில் சிகிச்சை அளித்து அவனுக்கு பேச்சை சாத்தியமாக்குகிறாள்.இந்த காட்சி துவங்குவதற்க்கு முன் ஒரு தொலைக்காட்சி நடாலியாவின் மகனான இக்னாட்டினால் உயிர்ப்பிக்கபடுகிறது.எனவே இது தொலைக்காட்சி நிகழ்ச்சியாவுமிருக்கலாம் அல்லது விடுபடலை குறிக்கும் குறியீடாகவும் இருக்கலாம்.



பரந்த வயல் விளிக்கு முன்னால மரக்கட்டையினால் அமைத்திருந்த வேலி ஒன்றின் மீதமர்ந்து சலன்மில்லாது புகைத்து கொண்டிருக்கிறாள் மரியா.தொலைவிலிருந்து வழி தப்பிய மருத்துவனொருவன் டோமோஷினா போக வழி கேட்டபடி அவளிடம் பேச்சு கொடுக்கிறான் அப்பேச்சினூடாய் திருமண மோதிரமில்லாத விரல்களை வைத்து அவள் தன்னுடைய கணவனுடன் வசிக்கவில்லை என்பதை யூகிக்கிறான் தொலைவில் மரத்தில் கட்டப்பட்ட நைலான் ஊஞ்சலில் இரு குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.அவளிடம் சிகெரெட் ஒன்றினை வாங்கிப் புகைத்தபடி அவளமர்ந்திருக்கும் அம் மரக்கட்டையிலான வேலியில் தானும் அமர்கிறான் பாரம் தாங்காத அக்கட்டை உடைந்து இருவரும் கீழே விழுகிறார்கள் பெருங்குரலில் சிரிக்கிறான் பின் அங்கு வளர்ந்திருக்கும் புற்களையும் இயற்கையின் வனப்பையும் சிலாகிக்கிறான் விடைபெற்று செல்லுகையில் விரிந்திருக்கும் வயல் வெளியிலிருந்து காற்று அவன் மீது படர்ந்து புற்களின் தலை வருடியபடி விரைந்து அவள் கேசத்தை அசைக்கிறது.வெகு அற்புதமாக இக்காட்சி படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.



தன் குழந்தைகளுக்கு உணவிட்டு கொண்டிருக்கும் ஒரு சாயந்திர நேரத்தில் பற்றி எரியும் வீட்டினை காண தன் குழைந்தகளுடன் வெளியே செல்கிறாள்.கூரையிலிருந்து மழை நீர் சொட்டிக்கொண்டிருக்க ஒரு வீட்டை பற்றியபடி தீ கொழுந்து விட்டு எரிகிறது.அவள் மெல்ல நடந்து கிணற்றின் மீது தொங்கவிடப்பட்ட வாளியில் தன் முகம் கழுவுகிறாள்.இந்த காட்சி தைல வண்ண ஓவியமொன்றினைப்போல வெகு நாள் மனதில் தங்கியிருந்தது.

ஒரு விநோத கனவு காட்சி நிகழ்காலத்தில் முடிகிறது ஒரு வீட்டில் தொலைபேசி உரையாடல்கள் மட்டும் கேட்கிறது தன் மகன் அலேக்ஸேயிடம் பேசிக் கொணடிருக்கிறாள் மரியா. அவன் காலம் நேரம் எல்லாம் மறந்து மூன்று தினங்களாய் ஒரு வார்த்தைகூட பேசாதிருக்கிறான்.சொற்கள் மிகவும் மந்த தன்மை கொண்டதெனவும் அவற்றை தான் வெறுக்கிறேனவும் சொல்கிறான்.அவளுடன் அச்சகத்தில் பணிபுரிந்த லிசா என்ற பெண்ணின் மரண செய்தியை சொல்லி தொலைபேசியை துண்டிக்கிறாள்.இவன் தன் தாயைவிட தனிமையிலிருக்கிறான்.தன் தாயின் சாயலையொத்த பெண்ணான நடாலியாவை திருமணம் செய்து கொண்டு ஒரு மகனயும் பெற்றுக்கொண்டு இனிமேல் அவளுடன் தொடர்ந்து வாழமுடியாதென சொல்லி அவளை விலகி விட கோருகிறான்.

போர் நிமித்தமாய் சென்ற அவள கணவரின் பிரிவே மரியா வின் துயருக்கான பின்புலமாய் சொல்லப்படுகிறது அவன் உயிருடன் இருப்பதற்க்கான சாத்தியக்கூறுகளை கூட அறிந்து கொள்ள முடியாத மிதமிஞ்சிய தனிமையில் அவள் பெரும் பதட்டம் நிரம்பியவளாகவும் துயரினை சுமந்து அலையும் பெண்ணாகவும் மாறிப்போகிறாள்.இதையொட்டியே அவளின் குழந்தைகளும் தனிமையின் பிடிகளுக்குள் சிக்கி கொள்ளுகிறார்கள்.அந்த துயரும் வெறுமையும் யுகங்களாக பின் தொடர்கிறது.போரின் துயரங்களை வேறு விதமாய் பதிவித்த படமென்று கூட சொல்லலாம்.
இப்படத்தின் கடைசிக்காட்சி அற்புதம் பரந்த வயல் வெளியின் ஒரு முனையில் நடாலியா நின்று கொண்டிருப்பாள் மற்றொரு விளிம்பை நோக்கி மரியா இரண்டு குழந்தைகளுடன் வேகமாய் நடந்து கொண்டிருப்பாள்.வெகு நேரத்திற்க்குப் பின் இசையொலியுடன் படம் முடியும்.

படத்தின் பின்னணியில் பயன்படுத்திருக்கும் கவிதைகளை எழுதியிருப்பது Arseny Tarkovsky அனைத்து கவிதைகளும் அவரது குரலிலேயே பதிவிக்கப்பட்டிருக்கிறது.குறிப்பாய் இந்தக் கவிதையை சொல்லலாம்

There is no death.
We're all immortal.
All is immortal.
Fear not death at seventeen,
Nor at seventy . . .

இருப்பினும் எதையும் நேரடியாக சொல்லாது இயல்பாகவே ஒரு பன்முகத் தன்மையை இத்திரைப்படம் சுமந்திருப்பதால் பார்ப்பவர்களின் கோணத்திற்க்கேற்ப இப்படத்தை அணுகலாம்.ஒருவேளை சித்தார்த்,மதி,டிசே,தான்யா மற்றும் எனக்கு தெரியாத வலையுலக அறிவுஜீவிகள் பலர் இப்படத்தை வேறு விதமாகவும் அணுககூடும்.அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் இன்னொரு படமான solaris ஐயும் இரண்டு முறைக்கு மேல் பார்க்க முயன்று தவித்துப்போனேன்.நிச்சயம் ஒரு நள்ளிரவில் பார்த்துவிடுவேன் :)

16 comments:

ALIF AHAMED said...

நீங்க சொன்னா சரிதான்

ஆனா இத பாக்குர அளவுக்கு பொறுமைதான்(அறிவு)இல்லை

:)

கண்மணி/kanmani said...

என் ஸ்டூடண்ட்டா இருந்துகிட்டு எப்பிடி இம்புட்டு அறிவாளிக்கிறே அப்பூ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஒன்னும் புரியல சாமி..:)

கண்மணி/kanmani said...

படம் எங்கனயோ பார்த்திருக்கேன்.ஓ அய்யனாரு சிலை தானே பொருத்தமாயிருக்கு.ஆனா பயமாயிருக்கு:))

தருமி said...

எழுத்திலேயே இவ்வளவு கனம் .. :(

Jazeela said...

ரொம்ப பொறுமத்தான் போங்க.

இளங்கோ-டிசே said...

அய்யனார், இவ்வாறான ஒரு மனோநிலையில் (விருப்பு/விரும்பின்மைக்கு அப்பால் என்று சொல்லலாமா?) அகிரா குரோசாவின் Dreams பார்த்தது நினைவுக்கு வருகின்றது. சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படத்தை 'பகலில்' பார்க்கவேண்டும் :-).

Anonymous said...

சின்ன சின்ன ஆசை
அய்ஸ் பதிவில் கும்மி அடிக்க ஆசை


இங்க கும்மி நடக்க அனுமதி தருவீங்களா

அல்லது

கும்மி பதிவு போடவும்

சனி,ஞாயிறு எனக்கு ஓகே

:)

MR.X

Ayyanar Viswanath said...

மின்னல்.. கும்மி அடிக்க கூப்பிடுறேன் யா பொறு ..இப்ப மைஃப்ரண்ட் பதவிய நீ எடுத்துக்கிட்டியா எப்பவும் முதல் பின்னூட்டாம்!!

Ayyanar Viswanath said...

டீச்சர் ஹி..ஹி..நான் எப்பவும் உங்க ஸ்டூடண்ட் தான் இது சும்மா லுலுலூஊ
இந்த படம் சித்தன்ன வாசலில் வைத்திருக்க அய்யனார் சிலை. ரொம்ப கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடிச்சேன்

Ayyanar Viswanath said...

தருமி ஐயா நன்றி

நிஜம்தான் ஜெஸிலா நிறையவே பொறுமை எங்கிட்ட :)

Ayyanar Viswanath said...

டிசே நேரமிருந்தா இந்த படம் பார்த்திட்டு எழுதுங்க.கண்டிப்பா ஒரு புது அனுபவம் தரும்.ட்ரீம்ஸ் இன்னும் பாக்கல :(

செல்வநாயகி said...

நீங்கள் எழுதியிருக்கும் விதம் படத்தைப் பார்த்தே ஆகவேண்டுமெனத் தூண்டுகிறது. திரைப்படங்களை அறிமுகப்படுத்துவதில் உங்களின் ஒரு புதிய பரிமாணத்தைப் பார்க்கிறேன். நன்றி இப்பணிக்கு. பார்த்துவிடுவோம் படத்தை:))

Ayyanar Viswanath said...

தவறாம பாருங்க செல்வநாயகி :)

காத்திருக்க வச்சி எழுதறதுன்னு முடிவோட இருக்கிங்களா?

மஞ்சூர் ராசா said...

அடர்கானகத்திலிருந்து வலைப்பதிய வந்திருப்பதால் தான் இப்படியா?

அது சரி அடர்கானகம் என்றால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் விளக்கலாமே....

பின்குறிப்பு: கனவின் வழி தப்புதல் பற்றி பிறிதொருநாள் சவகாசமாய்....

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அய்யனார்,

நல்லா எழுதியிருக்கீங்க. சொலாரிஸ் பார்த்துப் பிடித்துப்போன பிறகு தேடிப்பிடித்துப் பார்த்த படம். சொலாரிஸ் பார்த்தபடியால், ஆசுவாசமான ஒரு பொழுதில்தான் பார்த்தேன். நீங்கள் சொல்லியிருப்பதைப்போல மனதில் தங்கிவிட்ட காட்சிகள் அநேகம். மற்றும்படிக்கு தர்க்கோயெவ்ஸ்கியின் படங்களைப்பற்றியெல்லாம் கதைக்கக்கூடிய அளவுக்கு வரவில்லையென்று நினைக்கிறேன். நீங்க பேர்ப்பட்டியலெல்லாம் போட்டு மானத்தை வாங்குறீங்களே.. ;)

-மதி

Ayyanar Viswanath said...

மதி
தர்த்தாயெவ்ஸ்கி எப்பவுமே மனசுக்குள்ள ஒரு அதிர்வ ஏற்படுத்துறார் இல்ல ..இந்த ஒளியும் இருளும் மழையும் தீயும் னு இரு வேறு எதிர்களை ஒரே காட்சியில் எப்படி படம் பிடிக்கிறார் னு ஆச்சர்யமா இருக்கு..சோலாரிஸ் வெயில் மழைக் காட்சிகள் எல்லாம் ஏதோ பெயிண்டிங்க் பார்க்கிற உணர்வைத்தான் தந்தது.இவரோட வேறு படம் ஏதாவது பார்த்திருக்கிங்களா?

Featured Post

test

 test