Sunday, June 10, 2007

தொடர்பற்று போவதின் இரகசியங்கள்




பொங்குதல் என்றோ
நிரம்பி வழிதலென்றோ
அடைப்பின் பீறிட்டெழுதலென்றோ
இக்கணங்களை வரையறுக்கலாம்...

ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட
பொய்கள் தானெனினும்
உடைந்த குரலும்
நெகிழ்ந்த மனதும்
வெம்மைக்கென ஏங்கும் உடலும்
மீண்டுமொரு ஆழக்கீறலுக்கு ஆயத்தமாகும்
இருள் கவிழ்ந்து வரும் மாலையில்
இரத்தச் சிவப்பில் உதட்டுக்கு சாயம் பூசும்
வேசியின் துயரங்களோடு....

வெகு நேர்த்தியான அணுகுமுறைகளின் முடிவில்
சரிபார்க்கப்பட்ட ஒத்திகைகளின் துணைகொண்டு
புதைந்து போகும் ரகசியமென உறுதி செய்து கொண்டபின்
பரஸ்பரம் ஆடைகளை அவிழ்த்துக் களிப்படையலாம்....

நகுலனையும் சிங்காரத்தையும்
சில்வியாவையும் கல்யாணியையும்
துணைக்கழைத்த நம் இலக்கிய ஆர்வம்
எத்தனையாவது முறையாகவோ
தற்கொலை செய்து கொண்டது....

இத்துக்கத்தை கொண்டாடும் பொருட்டு
சிலகாலம் தொடர்பில்லாதிருப்போம்.

13 comments:

காயத்ரி சித்தார்த் said...

//ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட
பொய்கள் தானெனினும்
உடைந்த குரலும்
நெகிழ்ந்த மனதும்
வெம்மைக்கென ஏங்கும் உடலும்
மீண்டுமொரு ஆழக்கீறலுக்கு ஆயத்தமாகும்//

இப்போதெல்லாம் உங்கள் கவிதைகள் எனக்கும் கூட புரிகின்றன அய்யனார்..!

Anonymous said...

இத்துக்கத்தை கொண்டாடும் பொருட்டு
சிலகாலம் தொடர்பில்லாதிருப்போம்.

athee

MR.x

மஞ்சூர் ராசா said...

இந்த கவிதையை படிக்கையிலும் இன்னொரு கவிதையின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை....

Ayyanar Viswanath said...

புரிஞ்சா சந்தோஷம் காயத்ரி :)

அறிமுகமே இன்னும் இல்லையே மிஸ்டர் x

அப்படியா மஞ்சூர் :(

Anonymous said...

ஏலேய் புரியுற மாதிரி கவிஜ எழுதுலேய்

Anonymous said...

இந்த பக்கமே இனிமேல் நான் வர மாட்டேன்.கவிதை எல்லாம் simple ஆ எழுதனும்.இல்லையென்றால் எனக்குப் புரியாது,

ALIF AHAMED said...

துர்கா|†hµrgåh said...
இந்த பக்கமே இனிமேல் நான் வர மாட்டேன்.கவிதை எல்லாம் simple ஆ எழுதனும்.இல்லையென்றால் எனக்குப் புரியாது,
///

அய்யனாரின் இலக்கியங்களை கவிதைகள் என முடிவெடுக்க சொன்னது எது...?

புரியாத மாதிரி எழுதி அதற்க்கு விளக்க உரை ரெண்டு முனு போடனும்
அதுதானே நடைமுறை...:)

நந்தா said...

//ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட
பொய்கள் தானெனினும்
உடைந்த குரலும்
நெகிழ்ந்த மனதும்
வெம்மைக்கென ஏங்கும் உடலும்
மீண்டுமொரு ஆழக்கீறலுக்கு ஆயத்தமாகும்
இருள் கவிழ்ந்து வரும் மாலையில்
இரத்தச் சிவப்பில் உதட்டுக்கு சாயம் பூசும்
வேசியின் துயரங்களோடு....//

அய்யனார் கையை கொடுங்க. இந்த வரிகளுக்காகவே உங்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

Ayyanar Viswanath said...

துர்க்கா

என்னலா என்ன உன் அட்டகாசம் :)

மின்னலு ரொம்ப சரி

Ayyanar Viswanath said...

அன்பிற்க்கு நன்றிகள் நந்தா

மிதக்கும்வெளி said...

நிறைவாய் இல்லை.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அய்யனார்,

இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி இருக்கலாமோ? தெரியல.

-மதி

Ayyanar Viswanath said...

மிதக்கும் வெளி மற்றும் மதி

எனக்குகூட பதிவிட்ட பின்பு ஏதோ குறைந்தார்ப்போல்தான் தோன்றியது
என்னமோ :)

Featured Post

test

 test