Saturday, August 18, 2007

டோன்ட் இமேஜின் திங்க்ஸ் பேபி!



தேவதைகளின் இறக்கைகளைப் பிய்த்தெறிந்துவிட்டு
மரங்களே இல்லாத நேர்கோட்டுச் சாலையொன்றில்
தகிக்கும் உச்சி வெயிலில்
விரல்கோர்த்தபடி
செருப்பணியாத பாதங்களோடு நடந்துகொண்டிருந்த
பின் மதிய கனவொன்றை
உனது சன்னமான அழுகை கலைத்துப்போனது.

நானுதிர்த்த ஒற்றைச்சொல்லை கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு
அதன்வேர்களைத் துழாவியதில் கண்டெடுத்த
முன் எப்போதோ உதிர்த்த சொற்களையும் துணைக்கழைத்தபடி
புனைந்து கொண்ட உன் தனிமை உலகின் மூலையில்
கால்கள் குறுக்கியமர்ந்தபடி விசும்பிக்கொண்டிருந்தாய்.

தமிழ்சினிமாக்களை விடாது பார்த்தோ
தமிழ்தொலைகாட்சி அலைவரிசைகளை மாற்றி மாற்றிப் பார்த்தோ
மாதமொருமுறை மாதமிருமுறை
வாரமொருமுறை வாரமிருமுறை
தினசரி ஒன்று தினசரி இரண்டென பரப்பை நிறைக்கும்
தமிழ் பத்திரிக்கைகளை/நாவல்களைப் படித்தோ தொலையாதே என்றால்
நீ கேட்பதாய் இல்லை

என் மீதான வெறுப்புகள் அதிகமாகும் கணங்களில்
உன் அறைமுழுக்க நிறைத்து வைத்திருக்கும்
என் கவிதைகளைப் கிழித்துப்போடு
என் புகைப்படத்தின் மீது நின்றபடி மூத்திரம்பெய்
என்னைக் காதலித்த உன் முகத்தினை கண்ணாடியில் பார்த்தபடி
காறி உமிழ்ந்துகொள்
அப்போதுமடங்காத ஆத்திரமெனில் குளியலறையை தாழிட்டுக்கொண்டு புகைத்தபடி சுயமைதுனம் கொள்

ஒருபோதும் விசும்பாதே

டோண்ட் இமேஜின் திங்க்ஸ் பேபி!

9 comments:

குசும்பன் said...

"தமிழ்சினிமாக்களை விடாது பார்த்தோ
தமிழ்தொலைகாட்சி அலைவரிசைகளை மாற்றி மாற்றிப் பார்த்தோ
மாதமொருமுறை மாதமிருமுறை
வாரமொருமுறை வாரமிருமுறை
தினசரி ஒன்று தினசரி இரண்டென பரப்பை நிறைக்கும்
தமிழ் பத்திரிக்கைகளை/நாவல்களைப் படித்தோ தொலையாதே என்றால்
நீ கேட்பதாய் இல்லை"

முதலில் கேபிளை கட் செஞ்சிடுங்க அய்யனார், பிறகு புக் சர்குலேசனையும் நிறுத்திவிடுங்க:)))

காலையில் கூட பூரி சாப்பிடும் வரை நல்லாதானே இருந்தீங்க ஏன் இப்படி ஒரு கோபம்.

கண்மணி/kanmani said...

சில சமயங்களில் அதீத கற்பனைகளும் ,கற்பித்துக் கொள்ளப்படும் ஞாயங்களும் பொய்த்துப் போகும் போது எல்லாமே தப்பாகத்தான் தெரியும்.
வார்த்தைகள் இடறும்போது புரிதல் காயப்பட்டு வலி மட்டுமே மிஞ்சும்.
கற்பனையாயினும் கவிதைகளின் கனம் அதிகம்.அருமை.

Jazeela said...

விசும்புறதுக்கு படங்களும், தொலைக்காட்சியும், தொடரும், சஞ்சிகையும் தேவையில்லை உங்க ஆக்கங்களை வாசித்தாலே போதுமானது :-)))

//என் கவிதைகளைப் கிழித்துப்போடு// Don't waste paper - Environment Dept.
//என் புகைப்படத்தின் மீது// திருஷ்டிக்காக மாட்டிவச்சிருப்பாங்க அதுல போயா? :-))
//டோண்ட் இமேஜின் திங்க்ஸ் பேபி! // பேபி இமேஜின் பண்ணுதோ இல்லையோ நீங்க ரொம்பத்தான் பில்டப் தரீங்க :-)

கோபிநாத் said...

அட போய்யா நீங்களும்...............ம்

கதிர் said...

யோவ் வர வர உன்னோட இம்சை பெரிய இம்சையா இருக்கேய்யா...

நீதான் கொட்டாவி விட்டாலும் கவுஜ எழுதற, திரும்பி படுத்தாலும் கவுஜ எழுதற, ஏன் அண்ணாந்து பாத்தா கூட கவுஜ எழுதற...

ஏன் இப்படி கொலவெறி?

இந்த கவுஜய எழுதினதுக்கு நாலு வார்த்தை திட்டி இருக்கலாம்.

இராம்/Raam said...

அய்ஸ்,

ஒன்னும் சொல்லமுடியலை....... கவிதை படிச்சு முடித்ததும் வாசித்ததுக்குண்டான வெறுமை படர்ந்தது.....

Ayyanar Viswanath said...

யோவ் குசும்பா அடங்க மாட்டியா நீ

நன்றி டீச்சர்

Ayyanar Viswanath said...

ஜெஸிலா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கோபி / தம்பி ..போய் வேலய பாருங்கலே

நன்றி ராம்

கோபிநாத் said...

\\ தம்பி said...
யோவ் வர வர உன்னோட இம்சை பெரிய இம்சையா இருக்கேய்யா...

நீதான் கொட்டாவி விட்டாலும் கவுஜ எழுதற, திரும்பி படுத்தாலும் கவுஜ எழுதற, ஏன் அண்ணாந்து பாத்தா கூட கவுஜ எழுதற...

ஏன் இப்படி கொலவெறி?

இந்த கவுஜய எழுதினதுக்கு நாலு வார்த்தை திட்டி இருக்கலாம்.\\

தம்பி அப்ப அய்ஸ் எழுதியது கவிதை இல்லையா கவுஜயா !!!! ;)

Featured Post

test

 test