Tuesday, December 18, 2007

வலைப்பதிவு விருதுகள் - வடிகட்டின அபத்தம்

மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப் போல கம்பீரம் வீசுகிறது...
சுகிர்தராணி
சங்கமம் என்றொரு புதிய பக்கம் சிறந்த வலைப்பூக்களைத் தேர்வு செய்ய வந்திருக்கிறது 17 பேர் அடங்கிய நடுவர் குழுவின் பெயர்களையும் வெளியிட்டிருக்கிறது.போட்டிகளை அதிகமாக்குதல், பிளவுகளைக் கொண்டுவருதல், வியாபாரமாக்குதல் போன்ற அதிகார மய்யங்களின் துவக்கங்கள் இவ்விதமான பாகுபாடுகளின் அடிப்படையிலிருந்துதான் துவங்குகிறது. மோகன்தாஸ் கேட்பது போன்று சிறந்தது தாழ்ந்தது என்பதை சொல்ல இவர்கள் யார்?எதை நிரூபிக்க அல்லது யாரிடம் பெயர் வாங்க இங்கே எழுதுகிறோம்?ஆயிரம் பதிவர்களில் ஐந்து பதிவர்கள்தான் சிறந்தவர் என்பதை நிரூபிப்பதன் மூலமாக இவர்கள் அடையப்போவது என்ன?முதலில் வலைப்பூ என்பதென்ன?என்றெல்லாம் கோபமான சிந்தனைகள் எழ இந்த அறிவிப்புகள் தூண்டுதலாய் இருக்கிறது.

வலைப்பூ என்பது நமக்கு ஒரு வடிகால் நம் சிந்தனைகளை எழுத்துக்களாக்கிப் பார்க்குமொரு இடம். இதில் என் சிந்தனை சிறந்ததென்றோ அடுத்தவர் சிந்தனை தாழ்ந்தது என்றோ எதுவுமில்லை.புதியவர்களை ஊக்குவிப்பது என்ற பெயரில் கிளம்பி வந்திருக்கும் இந்த பூதம் 5 ஐ திருப்தி படுத்திவிட்டு 995ஐ நோகடிக்கும் ஒரு முயற்சியே.வலைப்பூ போட்டிகளுக்கு அப்பாற்பட்டது. இது போன்ற முயற்சிகள் எழுதிக்கொண்டிருப்பவர்களை ஊக்குவிக்கும் என எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?

நம் சூழலில் விருதுகள் என்பது இதுவரை ஒற்றைப்பரிமாணத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளது. எது சிறந்தது என்பதை தீர்மானிக்கும் தகுதி நம் சூழலில் எவருக்கும் இல்லை அல்லது அப்படித் தகுதியுள்ளோர் எவரும் முன்வருவதில்லை. இலக்கியம், கலை, சினிமா, அரசியல் என எவ்வித வடிவமாயிருந்தாலும் அதில் சிறந்தவர் என நாம் எப்போது ஒத்துக்கொள்ளுகிறோமென்றால் சம்பந்தபட்டவர் இறந்தபிறகுதான்.இதற்கான அடிப்படைக் காரணம் தேர்வுக் குழு என குழுமும் ஒருசிலரின் குறுகிய பார்வையே.இந்த ஒரு சில மாகாத்மாக்கள் கூடி அவரவர் அறிவுக்கு ஏற்றார்போல சிலதை அடையாளப்படுத்திவிடுவதே நம் வழக்கமாய் இருந்துவருகிறது.இதற்கான உதாரணங்களை நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காதென்றே நினைக்கிறேன்.(வைரமுத்துவிலிருந்து பேரரசு வரைக்குமாய் இதுவரை தரப்பட்ட விருதுகளில் எங்கிருக்கிறது செறிவு?)

சங்கமம் என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் நுட்பங்களை புரிந்துகொள்ளமுடியாமல் இல்லை.பிரதிகளின் ஊடாய் இழையோடியிருக்கும் அரசியலின் தடம் பற்ற துணிபவன் இன்றைய வாசகன். எனவே சங்கமத்திற்கு பின்னாலிருக்கும் திரட்டியினுக்கான தன்முனைப்புகளை இனம் காண்பது எளிதே. தமிழ்வெளி போன்றோ மாற்று போன்றோ தமிழில் திரட்டிகள் பெருகுவது வரவேற்கத்தக்க ஒன்றே புதிய திரட்டி என்கிற நேரடி அறிமுகத்தோடு வருவதற்கு பதிலாய் இதுபோன்ற வலைப்பதிவு விளையாட்டுக்களில் ஈடுபடுவது தேவையற்றது.

பரிந்துரைகள் மூலமாக தேர்வு செய்யப்போகிறோம் என்றோ.. புதுவித திட்டங்களை அறிமுகப்படுத்தி பதிவர்களிடமிருந்து பதிவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்றோ உங்களின் விளக்கங்கள் இருக்குமானால் அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பதிவர்களை காயப்படுத்தும் ஒரு முயற்சியே.
என்னளவில் இந்த ஆண்டின் சிறந்த வலைப்பூ என்னுடையது. என்னைப்போன்றே இந்த வருடம் எழுத வந்திருக்கும் மற்றவர்களுக்கும் அவரவர் வலைப்பூ சிறந்தது.இதில் நீங்கள் வந்து சொல்ல எதுவுமேயில்லை.ஊக்குவிக்க விரும்பினால் போட்டிகளை நடத்துங்கள் பரிசுகளை கொடுங்கள் விருப்பமுள்ளவர் கலந்துகொண்டு வெற்றிபெறட்டும் தகுதிகளை வளர்த்துக்கொள்ளட்டும்.வெகுசன அரசியல் சாக்கடைகள் எதுவும் கலந்திடாது வலைப்பூக்கள் அதனதன் சுதந்திரத்தில் சந்தோஷமாய் இயங்குகிறது உங்களின் சொந்த நலனுக்காக/அடையாளத்துக்காக இதில் வேட்டு வைக்காதீர்கள் நண்பர்களே...

கடைசிக் குறிப்பாய் என் வலைப்பூவினை யாரும் பரிந்துரைக்க வேண்டாம் என நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

37 comments:

Mohandoss said...

அய்யனார்,

'நச்'சுன்னு இருக்கு!

Unknown said...

அய்யனார்,
(1) //பரிந்துரைகள் மூலமாக தேர்வு செய்யப்போகிறோம் என்றோ.. புதுவித திட்டங்களை அறிமுகப்படுத்தி பதிவர்களிடமிருந்து பதிவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்றோ உங்களின் விளக்கங்கள் இருக்குமானால் அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பதிவர்களை காயப்படுத்தும் ஒரு முயற்சியே...அவரவர் வலைப்பூ சிறந்தது.இதில் நீங்கள் வந்து சொல்ல எதுவுமேயில்லை//

(2) // ஊக்குவிக்க விரும்பினால் போட்டிகளை நடத்துங்கள் பரிசுகளை கொடுங்கள் விருப்பமுள்ளவர் கலந்துகொண்டு வெற்றிபெறட்டும் தகுதிகளை வளர்த்துக்கொள்ளட்டும்.//

***
எதை ஊக்குவிக்க, எந்த போட்டிகளை நடத்தச் சொல்கிறீர்கள்?

இப்போது நடப்பதே ஒரு போட்டிதானே? போட்டிக்கென்று எழுதாமல் முன்னரே எழுதியிருந்த ஒன்றின் அடிப்படையில் பதிவு/பதிவர் பரிந்துரைக்கப்படுகிறார் என்றே எண்ணுகிறேன்.

எந்தவிதமான போட்டி என்றாலும் கலந்து கொண்டவர்களின் படைப்பு/கருத்து/எழுத்து அவரவர்களுக்குச் சிறந்த ஒன்றுதானே?

அதில் மட்டும் எப்படி நீங்கள் "ஊக்குவிக்கச்" சொல்கிறீர்கள் ? ,அதுவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பதிவர்களை காயப்படுத்தும் ஒரு முயற்சிதானே?

***

கூட்டம் என்று சேர்ந்துவிட்டால் அதில் குழுத்தன்மை வந்துவிடும்.கூட்டம் சேர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.குழுத்தன்மை வந்தும் பல வருடம் ஆகிவிட்டது. இது போல் நிறைய போட்டிகள்,சிறந்த பதிவு,பதிவர்,கதை,கவிதை,குப்பை,சக்கை,மொக்கை ......என்றும் வந்துவிட்டது.

என்ன சொல்ல வருகிறீர்கள்?

அ. எந்தவிதமான போட்டியும் கூடாதா?
ஆ. அல்லது நீங்கள் சொல்லும் "/ஊக்குவிக்க விரும்பினால் போட்டிகளை நடத்துங்கள் பரிசுகளை கொடுங்கள் விருப்பமுள்ளவர் கலந்துகொண்டு வெற்றிபெறட்டும் தகுதிகளை வளர்த்துக்கொள்ளட்டும்/" வகைப் போட்டிகள் மட்டும் நடத்தலாமா? (அது மட்டும் என்ன வகைப் போட்டி? எனக்குத்தான் புரியவில்லையா?)

***
இதற்குப்பதில் பி.ந புனைவோ அல்லது பத்மப்பிரியாவும்+நானும் வகைப் படமோ போட்டு இருக்கலாம். :-))

ஆடுமாடு said...

அய்யனார் நான் கூட அவசரபட்டு வரவேற்க துணிந்துவிட்டேன். உங்கள் விளக்கம் சரியானதுதான். இது அரசியலையே உருவாக்கும். தெளிவான விளக்கம். நன்றி

Anonymous said...

If you provide weblogs, also known as blogs, to BlogKut, you hereby grant to BlogKut a nonexclusive worldwide royalty-free license and right to use, market, license, publish, reproduce, copy, distribute, sublicense and display such Blog and to use excerpts thereof in any manner on the Web Site. You agree that third parties may link to your Blogs and use, in any manner or medium, excerpts from your Blogs.

KARTHIK said...

//1.நான் வலையில் படித்த முதல் வலைப்பூ http://angumingum.wordpress.com/
சித்தார்தினுடையது.ஆழமான
பார்வை,நிதானமான எழுத்து பன்முகத் தன்மை என அடித்து ஆடும் சித்தார்த் 2005 ன்
இறுதியிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.சம தளத்திலிருந்து அறிவு சார்ந்த
செறிவான ஒன்றை நோக்கி விழைய இவரது வலைப்பூ மிகவும் உதவியாய் இருக்கும்

2.http://umakathir.blogspot.com/ தம்பி யின் வலைப்பூ ஏகப்பட்ட மனிதர்களை
இவன் பக்கத்தில் பார்க்கலாம்.எப்போதும் மனிதர்களை பற்றித்தான்
பேசிக்கொண்டிருப்பான்.தான் சந்தித்த வியந்த கிண்டலடித்த மனிதர்களின்
தொகுப்புதான் இவன் வலைப்பூ..சமீபமாய் ஒரு எலக்கியவவதி ஆவதற்கான முயற்சிகளும்
நன்றாக வந்திருப்பதாகவே உணர்கிறேன்..
//
இது நேனைவிருக்கும்
பண்புடனில் 29 NOV இல் தங்கள் பரிந்துரைத்த வலைப்பூகள்

TBCD said...

உங்களுக்குப் புரிந்ததை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்..

இது புதிது அல்லவே, போன முறை சர்வேசன் நடத்தினாரே..

ஏற்கனவே நிறுவப்பட்ட திரட்டி என்றால் பரவாயில்லை என்கிறீர்களா..

தமிழ்மணம் விருதுகளுக்கும், இதே தான் பதிலா....

நிசமாவே புரியல்ல.தயவு செய்து விளக்கவும்.

(லக்கிக்கு- போய்யா..போய் போட்டுக்க..ஏபிசிடி சொன்னான்னு.. :)) ))

thiru said...

//தமிழ்வெளி போன்றோ மாற்று போன்றோ தமிழில் திரட்டிகள் பெருகுவது வரவேற்கத்தக்க ஒன்றே புதிய திரட்டி என்கிற நேரடி அறிமுகத்தோடு வருவதற்கு பதிலாய் இதுபோன்ற வலைப்பதிவு விளையாட்டுக்களில் ஈடுபடுவது தேவையற்றது.//

இப்படியும் நுண்ணரசியலா?

கோபிநாத் said...

பதிவு எண் 4 ;))

லக்கிலுக் said...

//என்னளவில் இந்த ஆண்டின் சிறந்த வலைப்பூ என்னுடையது. //

உங்களுக்கு விருது கிடைக்க வாழ்த்துக்கள்! :-)))))

Anonymous said...

//கடைசிக் குறிப்பாய் என் வலைப்பூவினை யாரும் பரிந்துரைக்க வேண்டாம் என நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். //

ஹி ஹி... திஸ் இஸ் டூ மச் Buddy.

ILA (a) இளா said...

//போட்டிகளை அதிகமாக்குதல், பிளவுகளைக் கொண்டுவருதல், வியாபாரமாக்குதல் போன்ற அதிகார மய்யங்களின் துவக்கங்கள் இவ்விதமான பாகுபாடுகளின் அடிப்படையிலிருந்துதான் துவங்குகிறது.//

இதுக்கு மட்டுமே விளக்கம் சொல்றேங்க, தனிப்பதிவாவும் போடுறேன். சங்கமம் ஒன்னும் திரட்டியா கொண்டுவர எண்ணம் இது வரைக்கும் எங்களுக்கு இல்லை. விருதுகள் தரதுன்னு முடிவு பண்ணி 1 மாசமா அதுக்கான வேலை செய்துட்டு இருந்தோம். நாங்க அறிவிச்ச முதல் அறிவிப்பு இது. தேதியா சரியா எல்லா இடத்திலேயும் பார்த்துட்டு சொல்லுங்க. (http://bloggingintamil.blogspot.com/2007/12/tamil-blog-awards-2007.html). அதுவுமில்லாம பரிசுத்தொகைய ஒரு நலிந்த கலைஞருக்கு தரதாவும் முடிவு செஞ்சு அதுக்காகவே இயங்கிகிட்டு இருக்கிற சில அமைப்புகளை பார்த்தோம். அது ஒரு பக்கம் போய்ட்டே இருக்க போட்டிக்கான அறிவிப்பு வெளியிட்டோம். தமிழ்ல அசைக்க முடியாத இடத்துல இருக்கிற தமிழ்மணத்து மேலையும், காசி அண்ணா மேலையும் எனக்கு மதிப்பும் மரியாதையும் என்னைக்கும் உண்டு. நீங்க சொன்னதுல ஒரு சின்ன திருத்தம். திரட்டிக்காக விருது நடத்தல. விருதுக்காகதான் திரட்டி வெச்சோம். ஒரு தனி இடம் இருந்தா ஒரு அங்கீகாரம் கிடைக்குமேன்னு. முதல்ல இரண்டே இரண்டே பதிவுகள் மட்டும்தான் திரட்டிச்சு சங்கமம். இன்னும் பின்னூட்டங்கள் இரண்டு படிவுகளுக்கு மட்டும்தான் திரட்டுது.(தொழில் நுட்பம் ஈர வெங்காயம்னு பேச மக்கள் ஆரம்பிச்சா(http://blogkut.com பார்க்கச் சொல்லுங்க).
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒரு திரட்டியா உருவாக்கிருவீங்க போல இருக்கே.

PS: இதுல வியாபாரம் எங்கே வந்துச்சுன்னு நீங்கதான் சொல்லனும்.

வசந்தன்(Vasanthan) said...

தற்போது வலைப்பதிவுகளோடு அதிக நேரம் செலவிடுவதில்லையென்பதால் இந்த விருதுக்கூத்து எப்போது தொடங்கியது, அதில் என்ன சிக்கல் என்பவை தொடர்பில் முழுமையான அறிவில்லை.
உங்கள் எதிர்ப்புகளில் சில நியாயங்கள் இருப்பதாக நினைக்கிறேன்.
ஆனால் தற்போது பார்த்தளவில் அனேகம்பேர் இந்த விருது வழங்கலை எதிர்த்து எழுதிக்கொண்டிருப்பது தெரிகிறது.
அவற்றில் பெரும்பாலானவை கும்பலில் கோவிந்தாவாக வெளிப்படும் கருத்துக்களென்பதே எனது எண்ணம். விருதை ஆதரித்து ஒரு போக்கு இருந்திருந்தால் இவற்றில் பெரும்பாலானவர்கள் அதையாதரித்து இடுகை எழுதியிருப்பார்கள். யாரோ காரசாரமாக எதர்த்தெழுதத் தொடங்கியதன் பின்னணியில் அதைத்தொடர்ந்து தாங்களும் ஏதாவது எழுதியாகவேண்டுமென எழுதுபவர்கள் பலர். (இது தமிழ்வலைப்பதிவுலகில் காலகாலமாக நிலவிவரும் ஒரு நடைமுறைதான். வேண்டுமானால் கடந்த சிலநாட்களில் விருது வழங்குவதை எதிர்த்து வெளிவந்த இடுகைகளை வாசித்துப் பாருங்கள். அடிப்படைத் தர்க்கமேதுமற்ற இடுகைகள் பல.)

நிற்க,
நீங்களாவது (சங்கமம் குழுவை மட்டுமன்றி) விருது வழங்கும் நடைமுறையை பொதுவாகவே கேள்விக்குட்படுத்துகிறீர்கள். பலர் இதைமட்டும் குறிவைத்துத் தாக்குகிறார்கள்.
வலைப்பதிவுகளுக்கு விருது வழங்குவது இதுதான் முதுன்முறையன்று. இதற்குமுன் வலைப்பதிவு விருதுகளை எதிர்த்து காரசாரமாக யாரும் பிரச்சினை பண்ணியதாக நினைவில்லை. அப்படி வந்தவைகூட, போட்டியில் அதிக தமிழர்கள் கலந்துகொள்ளவில்லையென்ற குறையைத்தான் (முக்கியமானவர் தருமி) சொன்னதாக ஞாபகம். மற்றும்படி அனைவரும் விருது வழங்குவதை ஏற்றுக்கொண்டனர். விருதில் வெற்றிபெற்றவர்களை வாழ்த்தி ஒரு கிழமை வாழ்த்துப் பதிவுகளெழுதிக் கொண்டாடினர்.

சரி, அவை குறிப்பிட்ட நடுவர்களன்றி, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்ற வாதத்தை வைக்கலாம். ஆனால் வாக்குப்போட்டவர்களின் எண்ணிக்கை அண்ணளவாக இருநூறு என்றுதான் ஞாபகம். (போட்டி நடைபெறப்போவது தங்களுக்குத் தெரியாது, சரியான முறையில் விளம்பரப்படுத்தப்படவில்லையென்ற குறைகள் பலரால் வைக்கப்பட்டன). அங்கே இருநூறு பேரால் தெரிவு செய்யப்பட்டது போன்று, இங்கே பதினேழு பேரால் தெரிவுசெய்யப்படப் போகிறார்கள்.

விருது வழங்குவது பதிவர்களிடையே சண்டையை மூட்டிவிடுமென்ற வாதம் ஏன் வந்ததென்று தெரியவில்லை. விருது வழங்குவது பதிவர்களிடையே சண்டையை மூட்டிவிடுமென்ற வாதம் ஏன் வந்ததென்று தெரியவில்லை. இதே கோணத்தில் ஆழப்போனால் தமிழ்மணத்திரட்டியில் நட்சத்திரக் குத்துக்கள் வந்தது, பின்னூட்டங்கள் திரட்டப்பட்டது என 'பதிவர்களிடையே சண்டையை மூட்டும்' சமாச்சாரங்கள் பலவற்றைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். அப்படி பல சண்டைகள் வலைப்பதிவுலகில் நடந்துள்ளன. ஒரு கட்டத்தில் பின்னூட்டத் திரட்டிச் சேவையை நிறுத்திவிடுவதென்று தமிழ்மணம் முடிவெடுத்து, அதற்கான அறிவிப்பும் வெளியாகியது. அண்மையிற்கூட நாற்பதுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெறும் இடுகைகள் திரட்டப்படாவென திரட்டி அறிவித்து பெரிய கலவரமே நடந்து முடிந்தது. அதற்கு முன்பு பின்னூட்ட மட்டுறுத்தலை திரட்டி கட்டாயப்படுத்தியபோது, சில பதிவர்களை திரட்டியை விட்டு நீக்கியபோது என வலைப்பதிவுலகம் கொந்தளித்த பல சம்பவங்களுள்ளன.
எல்லாம் கடந்துதான் தமிழ்வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு கடந்து வந்தவர்கள் கேவலம் ஒரு விருதுக்காக தங்களுக்குள் சண்டை போடுவார்களென்பதோ அப்படிச் சண்டைபோடுவது எப்போதும் நடக்காதது என்பதோ அபத்தமென்றே படுகிறது.

தமிழ் வலைப்பதிவுலகம் என்பது எல்லோரையும் சேர்த்தது. சில்லறை விசயத்துக்கு வருடக்கணக்கில் சண்டை பிடிப்பவர்களும் இருக்கிறார்கள். மிகப்பெரிய விசயத்தைக்கூட அன்றோடே முடித்துவிட்டுப் போய்விடும் பதிவர்களும் இருக்கிறார்கள். மொக்கை, கும்மியுட்பட ஒருவகைப்பதிவுகளும் மிகவும் காத்திரமான படைப்புக்களும் ஒரேநேரத்தில் தமிழ்மணத்தில் வருகின்றன. ஒருவரிடமிருந்தேகூட அவை வருகின்றன. இந்த விருதைப் பிரச்சினையாக்குபவர்கள் இருப்பார்கள் என்பதைப்போல அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்பவர்களும், ஏன் அதையொரு பொருட்டாகக்கூட கவனிக்காதவர்களும் இருக்கிறார்கள்.

எனவே விருது கொடுப்பவர்கள் கொடுக்கட்டும், பங்குபற்றுபவர்கள் பங்குபற்றட்டும், வெல்பவர்கள் வெல்லட்டும். இவற்றில் நொட்டை பிடித்துக்கொண்டிருப்பது தேவையற்றது.
நீங்கள் கலந்துகொள்ளவில்லையென்பதைப் போலவே நிறையப்பேர் கலந்துகொள்ளப்போவதில்லை. நானும்தான். இதுவரை எந்தப்போட்டியிலும் கலந்துகொண்டதில்லை. போட்டியென்ன? ஆறு போட, எட்டுப்போட, நாலுபோட என வந்த அழைப்புக்களைக்கூட ஏற்றுக்கொண்டதில்லை. (ஒரேயொரு தடவைமட்டும் - அதுவும் வேறோர் பிரச்சினையைத் திசைதிருப்ப எழுதினேன்). அந்த அழைப்புக்கள்கூட வலைப்பதிவர்களிடையே சண்டையை, பிரச்சினையை மூட்டும் வல்லமை வாய்ந்தவை. பதிவர்களின் வாசிப்பு, அவர்கள் வைத்திருக்கும் புத்தகங்கள் பற்றிய (புத்தக மீம் என்று நினைக்கிறேன். பிரகாஷரால் தொடக்கப்பட்டது) அழைப்பு பதிவர்களிடையே தாழ்வுமன்பபான்மை ஏற்படுத்துகிறது, அது தவிர்க்கப்பட வேண்டியது என சுந்தரமூர்த்தி இடுகையெழுதினார், பலர் அக்கருத்தை ஆமோதித்தனர். பலர் புழுகிக்கொள்ள வேண்டி நேர்ந்த அந்த அவல நிலையை இந்த விருது ஒருபோதும் ஏற்படுத்திவிடாது என நினைக்கிறேன்.

மேலும் ஏதுமிருந்தால் ஒரு பதிவாக எழுதிவிடுகிறேன். உங்கள் புண்ணியத்தில் எனது வலைப்பதிவில் ஓரிடுகை வந்ததாகப் போயிற்று.

வசந்தன்(Vasanthan) said...

சரி. ஒரு கேள்வி.
இரண்டு நடுவர்களை மட்டும்கொண்ட புகைப்படப் போட்டி எந்தவிதத்தில் சரியென்று நினைக்கிறீர்கள்?
பதினேழு நடுவர்களைக் கொண்ட (ஒப்பீட்டளவில் சரியான முடிவு வருவதற்கு அதிக சாத்தியமுள்ள) சங்கமம் விருது எப்படி தவறென்று கருதுகிறீர்கள்?
புகைப்படப் போட்டி முடிவால் பதிவர்களிடையே சண்டை மூண்டதா?

*** கவனிக்க: புகைப்படப் போட்டி தவறென்று நான் சொல்லவில்லை. ஐயனால் சொல்லிய கருத்துக்கள் எவ்விதத்தில் புகைப்படப் போட்டிக்குப் பொருந்தாமற்போகுமென்ற கேள்வி எனக்குள் எழுகிறது. பொருந்தினால் அப்போட்டியை எதித்து ஏன் பிரச்சினைகள் எழவில்லையென்ற கேள்வியும் வருகிறது. உண்மையிலேயே விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

Jazeela said...

//என்னளவில் இந்த ஆண்டின் சிறந்த வலைப்பூ என்னுடையது.// இதுல சந்தேகமுண்டா என்ன? இதே இடத்திலேயே அய்யனார் வலைப்பூவை பரிந்துரைக்கிறேன். இதே இடத்தில் பரிசும் :-) சரிதானே அய்யா.

போட்டு தாளிச்சிட்டீங்க.

கண்மணி/kanmani said...

//ஆயிரம் பதிவர்களில் ஐந்து பதிவர்கள்தான் சிறந்தவர் என்பதை நிரூபிப்பதன் மூலமாக இவர்கள் அடையப்போவது என்ன?//

சரியான கேள்வி

//வலைப்பூ என்பது நமக்கு ஒரு வடிகால் நம் சிந்தனைகளை எழுத்துக்களாக்கிப் பார்க்குமொரு இடம். இதில் என் சிந்தனை சிறந்ததென்றோ அடுத்தவர் சிந்தனை தாழ்ந்தது என்றோ எதுவுமில்லை//

சரியாகச் சொன்னீர்கள் அய்யனார்.
வலைப்பூ நம் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் ஒரு தளம்.இது ஒன்றும் வரலாறோ அறிவியல் கோட்பாடுகளோ கொண்டு எதிர்காலத் தலைமுறைக்கு பாடம் புகட்டப் போவதில்லை.எனினும் பிறர் பார்க்க நேரும் என்பதால் கண்ணியம் காத்து நம்முடைய 'சிறப்பானதை'த் தருகிறோம்.
வலைப் பூ என்பது ஒரு அங்கீகரிக்கப் பட்ட திறந்த நாட்குறிப்பு போன்றது.படித்து ரசிக்கலாம்.பரிசு கொடுத்து பாகுபடுத்த தேவையில்லை.
தான் யாரென்று சொல்லிக் கொள்ள முடியாதவர்கள் எப்படி ஒரு போட்டி நடத்தலாம்.எந்த அடிப்படையில் 17 நடுவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.அவர்களுக்காவது இவர்களைத் தெரியுமா?
சர்வேசன்,பபாச,வவாச கூட போட்டி வைக்கின்றனர்.அது குறிப்பிட்ட தலைப்புகளில் கதை ஓவியம் புகைப்படம் என்று பொதுவான தலைப்புகளைக் கொண்டது.இப்படி ஒட்டு மொத்தமாக ஒரு தனிப்பட்ட வலைப் பூ அல்லது பதிவர் என்ற பாகுபாடு இல்லையே.
நீங்கள் கேட்பது போல் இதன் தேவையோ நோக்கமோ என்ன?யாருக்கு எது பிடிக்கிறதோ அதை நாமே தேர்ந்தெடுத்துப் படிக்கப் போகிறோம்.இதில் போட்டி ஏன்?

ஜமாலன் said...

#மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப் போல கம்பீரம் வீசுகிறது...
சுகிர்தராணி#

இந்த அற்புதமான கவிதை வரிகளை எதற்கு இங்கு மேற்கோள் காடடியுள்ளீர்கள் என்று புரியவில்லை. மற்றபடி பதிவு போட்டி போன்ற பெரிய விடயங்கள் பற்றி கருத்து சொல்லும் அளவிற்கு மூத்த பதிவர் அல்ல நான்.

Ayyanar Viswanath said...

பின்னூட்டங்களின் காத்திருப்புகளுக்காக வருந்துகிறேன்.தொடர்ச்சியாய் நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாகிப் போய்விட்டதால் ஊர் சுற்றப் போய்விட்டேன்.பதில்கள் விரைவில்

Ayyanar Viswanath said...

பலூன் மாமா

போட்டிகள் என்பது என்னளவில் வலைப்பூக்களுக்கு அபத்தமானது.நம்முடைய படைப்புகளை நிரூபிக்க நாமாக விரும்பி ஒரு பிரதியை அனுப்பும்போது அதன் வெற்றி தோல்வி நம்மை சார்ந்தே அமைகிறது.போட்டிகள் படைப்பு சார்ந்து அமைவதற்கும் வலைப்பூ சார்ந்து அமைவதற்கும் வேறுபாடுகள் இருக்கிறது.இது ஒட்டுமொத்தமாக தனிப்பட்ட ஒருவரை நிரூபிக்க/நிராகரிக்க ஏதுவாய் இருப்பதால் என்னால் இதனுடன் ஒத்துப்போகமுடியவில்லை.இரண்டாவது சிறந்த வலைப்பூவினை தேர்ந்து எடுக்கும் தகுதி.ஒரு வலைப்பூவினை கொண்டாட/நிராகரிக்க குறைந்தபட்சம் அந்த வலைப்பூவினை படித்து புரிந்து கொள்ளும் அடிப்படை அறிவாவது சமபந்தப்பட்டவர்களுக்கு இருக்க வேண்டும்.நடுவர் குழுவில் அந்த தகுதி யார்யார்க்கு இருக்கிறது என்பது நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பது இல்லை (கவனிக்க குறைந்த பட்சம் வாசித்துப் புரிந்துகொள்ளும் திறனாவது) மூன்றாவது திடுமென முளைத்த சங்கமம் எனும் பக்கம் யாரோ ஒருவர் எந்தப் பதிவும் எழுதிடாதவர் விருது கொடுக்கிரேன் எனக் கிளம்பி வருவது எதற்காக என யோசிக்க வைத்தது.இதற்குப் பின்னால் இளா மற்றும் நாங்க (யார் அந்த நாங்க என்றும் தெரியவில்லை)இருந்தால் அதை ஏன் அவர் முதலில் தெளிவுபடுத்தியிருக்க கூடாது?

*********

பிந புனைவு ஓகே.... + க்குதான் வழிய காணோம் :)

Ayyanar Viswanath said...

பண்புடனுக்கும் வலைப்பூ விருதுகளுக்கும் முடிச்சி போட்டு குழம்பிக் கொள்ள வேண்டாம் கார்த்திக். அந்தப் பரிந்துரைகள் நண்பர்களுக்குள்ளான பகிர்வுகள் அந்தக் குழுமத்தில் இருக்கும் வலை நண்பர்களுக்கு மட்டும்தான் அந்த தேர்வுகள்.பொதுப்பரப்பிற்கு அல்ல.மேலும் அக்குழுமத்தில் எது சிறந்தது என்பதை தீர்மானிக்கும் நபர்களுக்கும் பஞ்சமில்லை.

ILA (a) இளா said...

//இளா மற்றும் நாங்க (யார் அந்த நாங்க என்றும் தெரியவில்லை)//
17 பேருங்க.

Ayyanar Viswanath said...

தமிழ்மண விருதுகள் பற்றி இன்னும் முழுசாய் எதுவும் தெரியாததால் (தேர்வுக் குழு தேர்வு முறை ) இப்போதைக்கு சொல்ல எதுவுமில்லை டிபிசிடி மேலும் இஃதொரு நாட்டாமை வேலையாய் மாறும் அபாயத்தையும் கொண்டிருப்பதால் எதிர்வரும் நாட்களில் தவிர்க்க முயல்கிறேன்....

Ayyanar Viswanath said...

திரு கோபி நன்றி

எனக்கு விருது கிடைக்க வாழ்த்தியிருக்கும் லக்கிக்கு அன்பும் நன்றியும் ..விருதை சரக்கு பாட்டில்களாக அனுப்ப பரிந்துரை செய்தால் உங்களுக்கும் பங்கு :)

Ayyanar Viswanath said...

ஆடுமாடு ஜெஸிலா கண்மணி நன்றி

இளா
/இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒரு திரட்டியா உருவாக்கிருவீங்க போல இருக்கே./

திரட்டியாக வந்தாலும் அதில் எந்த தவறுமில்லை ஏற்கனவே சொன்னது போல் திரட்டிகள் பெருகுவது வளர்ச்சியே..நீங்கள் திடுமென வலைப்பூ பிதாகமகராக அவதாரம் எடுத்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது..எனினும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

Ayyanar Viswanath said...

வசந்தன்

சமூகம் சீர்குலைய சாதி/மேல்தட்டு/கீழ்தட்டு போன்ற பிரிவினைகள் அடிப்படை காரணங்களாய் உருவாக அதிகார மய்யங்களால் உருவாக்கப்பட்ட தகுதி மற்றும் மதிப்பீடுகள் இவைகளே காரணங்களாய் இருந்திருக்க முடியும். நாம் நமது பால்யத்திலிருந்தே தவறான ஒரு வாழ்க்கைமுறைக்கு தயார் செய்யப்படுகிறோம். அடிப்படை கல்விமுறையில் திணிக்கப்பட்டிருக்கும் மதிப்பெண்கள், ரேங்குகள், நீ முதல், அவன் கடைசி போன்ற பாகுபாடுகள் உளவியல் ரீதியிலாக நம்மைச்சீர்குலைக்கிறது.மதிப்பெண்களுக்கான படிப்புகள்தாம் நமது அடிப்படை அறிவாய் இருந்துவந்திருக்கிறது.தேவைகளுக்கான விழைவுகள் மட்டுமே வாழ்க்கையாகிவிட்டதால் அடுத்தவர்களின் மதிப்பீடுகள் மட்டுமே நம் ஒட்டுமொத்த வாழ்க்கையின் பயனா கி விட்டது.சுயத் தன்மை தனித்தன்மை போன்றவைகளை நாம் ஒட்டுமொத்தமாக இழக்க இதுபோன்ற லேபிள்தாரர்களே காரணமாய் இருக்க முடியும்.வெகுசனம் என்ற ஒற்றை சொல்கொண்டு தனித்தன்மைகளை முற்றிலுமாய் அழித்துவிடுகிறோம்.இதுபோன்ற ஒரு குறியீடாகத்தான் என்னால் இந்த வலைப்பூ விருதுகளை அணுக முடிகிறது.போட்டி சார்ந்த வாழ்விலிருந்து வழுவி விருப்பம் சார்ந்த செயல்களின் வெளிப்பாடுகள் என்பதாகவே வலைப்பூக்கள் எனக்கு தோன்றிவந்திருக்கிறது.இதையும் போட்டி சார்ந்த ஒன்றாக மாற்றத் துணியும்போது வெகுண்டெழுந்த கோபங்களின் வெளிப்பாடே என் முந்தைய பதிவு.

மற்றபடி பிற போட்டிகள் விமர்சனம் குறித்து சொல்ல இப்போது எதுவும் இல்லை ஒரு பின்னிரவை வீணாக்கி கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் என் புத்திக்கு எட்டுகிறது..நீண்ட பகிர்வுகளுக்கு நன்றி

வசந்தன்(Vasanthan) said...

ஐயானார்,
உங்கள் தர்க்கத்தில் எனக்கு ஓரளவு உடன்பாடே.
மதிப்பெண்களுக்கான படிப்பு தொடக்கம் நிறைய விடயங்களைப் பேசுகிறீர்கள். சரிதான். ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் மிக விரிந்த தளத்தில் யோசிக்கிறீர்கள்.

அந்த அடிப்படையில் அணுகினால், நான் எனது முதற்பின்னூட்டத்திற் சொன்னதுபோல், இடுகைக்கான நட்சத்திரக்குத்துக்கள், வாரமொரு நட்சத்திரத் தெரிவு (அதுகூட எல்லோரையும் சம அளவில் வைத்துத் தெரிவதில்லையென்ற குற்றச்சாட்டு சிலரிடமுண்டு), பின்னூட்டங்களின் எண்ணிக்கைத் திரட்டி என்பவை தொடக்கம் பிற போட்டிகள், விருதுகள் என்று கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியவை ஏராளமுள்ளன.
அவையெவற்றுக்கும் எழாத கோபம் சங்கமம் விருதுக்கு மட்டும் எழுந்ததேன் என்பதே என் குழப்பம். அதன்காரணத்தாலேயே மற்ற விருதுகள், போட்டிகள் தொடர்பில் உங்கள் கருத்தைக் கேட்டேன்.

இத்தனைபேர் சங்கமம் விருதை எதிர்த்தெழுதியபோதும் உங்களிடம் மட்டுமே இதைக் கேட்கிறேன் என்பதற்கும் காரணமுண்டு.

சரி, நேரத்தை வீணாக்காமல் முடிப்போம்.

;-)

Unknown said...

அய்யனார்,
பதிலுக்கு நன்றி!
.
//போட்டிகள் படைப்பு சார்ந்து அமைவதற்கும் வலைப்பூ சார்ந்து அமைவதற்கும் வேறுபாடுகள் இருக்கிறது.//

இதை ஒத்துக் கொள்கிறேன்.

அதே சமயம், நீங்களும் ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

உங்களின் வலைப்பதிவின் இடது புறம் உங்களுக்கு பிடித்த சில வலைப்பதிவுகளை "சக பயணிகள்" என்ற குறியீட்டில் வகைப்படுத்து உள்ளீர்கள். அது போல் முக்காலே மூணுவீசம்பேர் அப்படித்தான் தங்களுக்கு பிடித்த சில வலைப்பதிவுகளை கட்டம் காட்டிக் காண்பித்து உள்ளனர்.

கேள்வி:
உங்களின் "சக பயணிகள்" அவர்களின் படைப்பு சார்ந்ததா அல்லது பெரும்பாலான அவர்களின் படைப்புகளின் அடிப்படையில் அமைந்த வலைப்பதிவு சார்ந்து அமைந்ததா?

(நீங்கள் சொன்னது உங்களுக்காக மற்றொரு முறை::

//போட்டிகள் படைப்பு சார்ந்து அமைவதற்கும் வலைப்பூ சார்ந்து அமைவதற்கும் வேறுபாடுகள் இருக்கிறது.//

//ஒட்டுமொத்தமாக தனிப்பட்ட ஒருவரை நிரூபிக்க/நிராகரிக்க ஏதுவாய் இருப்பதால் என்னால் இதனுடன் ஒத்துப்போகமுடியவில்லை.//

நீங்கள் ஒரு சிலரை உங்களின் "சக பயணியாக" கட்டம் கட்டிக் கொள்வது , மற்ற அனைவரையுமே நிராகரிக்கும் செயலா?

இல்லையல்லவா, அது போலவே போட்டிகள் நிர்வாகக் குழுவின் /தேர்வுக் குழுவின் விருப்பமாக/தேர்வாக இருந்துவிட்டுப் போகிறது.

உங்களின் "சக பயணிகள்" என்ன விளக்கம் வைத்து உள்ளீர்களோ அதை அப்படியே மற்ரவர்களின் குழுப்போட்டிக்கும் பொருத்திப் பாருங்கள்.

ஒரே வித்தியாசம் அங்கே ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.


***

திரட்டிகளின் பற்றியோ அல்லது அதன் பின்னனியில் யார் உள்ளார்கள் என்பது தெரியாது.

எந்த ஒரு குழுவும் அல்லது தனிமனிதனும் அவன் விரும்பும் போட்டி (அல்லது அது போன்ற ஒன்றை) அறிவிக்க பத்திரிக்கை/இணையம்/வாழும்,பங்கு கொள்ளும் நாடுகளின் சட்டங்களைத் தாண்டி வேறு எதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது இல்லை.

ஒருகாலத்தில் தமிழமணம் எப்படி "ஸ்டாரை" அடையாளம் காண்கிறது என்று அடிதடி வந்தது. விளக்கம் சொல்லியே அவர்களும் ஓய்ந்து போனார்கள். அதுபோலத்தான் எல்லாம்.

********

க.கே.கோ.கீ காலேஜ்
கும்மிடிபூண்டி
மாயவரம்
இந்தியா
பெங்களூர்
அமெரிக்கா
ரஷ்யா
....

எல்லா இடங்களிலும்தான் அழகிப்போட்டி என்ற ஒன்று, பல உப்புமா சங்கங்களாலும் , பெரிய கார்ப்போரேட் நிறுவனங்களாலும் நடத்தப்படுகிறது.

இது மற்ற பெண்களை இழிவுபடுத்துகிறது என்று இதற்கெல்லாம் வருத்தப்பட்டு கொண்டுஇருந்தால் என்ன ஆவது.

உங்களுக்கு பிடிக்காவிட்டால் நீங்கள் ஜட்டியுடன் வலம் வரும் நங்கையை பார்க்காமல் கண்டனம் தெரிவிக்கலாமே தவிர ,ஜட்டியைக் காட்டி உலக அழகியாகும் ஆர்வம் உள்ளவர்களை தடுத்து நிறுத்த தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஏன் என்றால் உலக அழகிகளின் ஜட்டி-பிரா அணிவகுப்பினை இரசிக்க ஆள் உள்ளார்கள். :-)))

***

Anonymous said...

ஐயனார்,

இந்த பிரச்சினை பற்றின எதிர்ப்புகளில் உங்களின் பதிவு நல்ல அகலமான பார்வையை முன் வைக்கிறது.பின்னூட்டங்கள் உங்களின் பரவலான சிந்தனையை பேசுகிறது..

வாழ்த்துக்கள்

-ஆதிரை

ஹரன்பிரசன்னா said...

//போட்டிகள் படைப்பு சார்ந்து அமைவதற்கும் வலைப்பூ சார்ந்து அமைவதற்கும் வேறுபாடுகள் இருக்கிறது.//

இது மிக முக்கியமானது. ஒரு சிறந்த வலைப்பதிவு என்று ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நிச்சயம் அபத்தமே. இதையே பிரிவுகளை படைப்பு சார்ந்து உருவாக்கி, ஒவ்வொரு பிரிவுக்கும் படைப்புகளின் சுட்டியைக் கேட்டு, போட்டியை படைப்புகள் சார்ந்ததாக மாற்றியிருந்திருக்கலாம். மற்றபடி சங்கமம் தேன்கூடு தமிழ்மணம் என யார் போட்டி நடத்தினாலும் எனக்கு கவலையுமில்லை, பிரச்சினையுமில்லை. பொதுவாக வலைப்பதிவுக்கு பரிசு என்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை.

அதேசமயம் சங்கமம் எப்படி நடத்தலாம் என்ற கேள்வியையும் நான் ஏற்கவில்லை. யார் வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளட்டும். எனது யோசனை, அதன் செயல்முறையில்தான்.

அதேபோல் நடுவர்கள்... இவர்கள் ஒரு வலைப்பதிவைத் தேர்ந்தெடுத்தால் அப்பதிவு பாராட்டப்படுகிறதா திட்டப்படுகிறதா என்பதைப் பற்றித் தனிப்பதிவு எழுதி விளக்கமளிப்பார்கள் என நம்புகிறேன்.

Ayyanar Viswanath said...

வசந்தன் ,

தமிழ்மண நட்சத்திர தேர்வுகள் குறித்தெல்லாம் இப்போது கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றுதான் தோன்றுகிறது.புதிதாய் ஒன்று முளைக்கும்போது ஆரம்பத்திலேயே கேட்கப்படும் இதுபோன்ற கேள்விகள் மாற்று சிந்தனைகளை மாற்று கருத்துக்களை இன்னொரு பார்வையை பொதுப் புத்திக்கு உணர்த்தும் அல்லது ஒரு உறுத்தலையாவது ஏற்படுத்தும் குறைந்த பட்சம் தகுதியில்லாதவைகள் தகுதியைப் பற்றி கவலையாவது படும்..அந்த அடிப்படையிலேயே கேள்விகள் எழுப்பப்படுகின்றன..

/சரி, நேரத்தை வீணாக்காமல் முடிப்போம்/

அப்படியே :)

Ayyanar Viswanath said...

பலூன் மாமா,

வித்தியாசங்களின் அரசியலைப் பற்றி உங்களிடம் எதுவும் விளக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்
சக பயணிகளுக்கும் விருதுகளுக்கு முள்ள வித்தியாசம் மிகப்பெரிது.ஒன்றுடன் ஒன்று சம்பந்தமே இல்லாதது..இதைக்காட்டி அதை நிரூபிக்கப் பார்ப்பது லாஜிக்கலா படுதே தவிர உணர்வுபூர்வமானது இல்லை..நாம் வலைப்பூக்களில் கணித சூத்திரங்களை எழுதிக்கொண்டிருக்கவில்லை அவரவர் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றையும் மிகப் பரந்த மனதோடு ஏற்றுக்கொள்வது (அதனால் என்ன? எல்லாரும் இப்படித்தான்..)
சில வயதிற்கு மேல் சாத்தியப்படலாம் இப்போது முடியவில்லை :)

ஆனால் இந்த கேள்விகளால் ஒரே ஒரு பயன்.. நாடு காட்டும் feedjet ல் எப்போதும் அமெரிக்க கொடியே.. பாவம் மக்கள்!! விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு படிக்கிறார்கள் போல :))

Ayyanar Viswanath said...

ஜமாலன்

கவிதை எவ்வித கட்டுக்குள்ளும் அடங்காத இயல்பை வன்மமாய் ஆணித்தரமாய் பேசுவதால் அதை பயன்படுத்தி உள்ளேன் ..

(நீ யார் எனக்கு விருதுகொடுக்க என்கிற த்வனி வருதா இல்லையா?..

என் நிர்வாணம்/ அழிக்கப்படாத காடு / என் வலைப்பூ )

Ayyanar Viswanath said...

ஆதிரை மற்றும் பிரசன்னா கருத்துகளுக்கு நன்றி..

வவ்வால் said...

ஆஹா ,அய்யனார், மற்றும் கல்வெட்டு, ரெண்டு பேரும் சூப்பரா போட்டு தாக்குறிங்களே,

எல்லாம் சரியா சொல்றாப்போல ஒரு பிரம்மை வருது! :-))

ஆனால் என்னோட நிதர்சனம், யார் என்ன வேண்டுமானாலும் செய்துக்கோங்க, கொடுப்பவர்கள் கொடுக்கட்டும், வாங்குகிறவர்கள் வாங்கிக்கொள்ளட்டும், ஆனால் பின்னாளில் தாங்கள் தான் சரித்திரம், பூகோளம் படைத்ததாக சொல்லிக்கொண்டு திரியக்கூடாது! :-))

ஏன் இதை சொல்கிறேன் என்றால் நான் தான் வலைப்பதிவில் முதலில் படம் காட்டினேன், வீடியோ காட்டினேன் என்று பல முதல்வர்கள் வராங்க :-))

Sanjai Gandhi said...

சரியாக எழுதி இருக்கிறீர்கள்.. நானும் உங்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். :-)

//விருப்பமுள்ளவர் கலந்துகொண்டு வெற்றிபெறட்டும்//

நானும் நேற்று இத வலியுறுத்தி தான் பதிவு போட்டேன்.. :)
( குசும்பன் பதிவுல அவர் சமயல நீங்க சாப்டதா சொல்லி இருந்தார்.. அய்யோ பாவம் இப்போ எப்டி இருப்பிங்களோனு பாக்க வந்தேன்.. கொஞ்சம் காரமாவே இருக்கிங்க போல..)

Unknown said...

அய்யனார்,
விருது,பரிசு போன்றவை ஒரு அங்கீகாரம்.
*என்னளவில்* ஒரு குழு ஒருவரை அங்கீகாரம் செய்வதும் , ஒரு தனி நபர் சிலரை அங்கீகாரம் செய்வதும் (பரிசு/விருது/சக பயணி/ நண்பர்.. என்று எந்த முறையிலாவது இருக்கலாம்) அவர்களுக்கு என்று உள்ள சில விருப்பு/வெறுப்பு/ஆசை/ஒத்த கருத்து/ etc., என்ற சில அளவுகோலின்படிதான். அந்த அளவுகோல்கள் சர்சேதச அங்கீகாரம் பெற்றவையாக இருக்காது.

குழுவானால் அந்தக் குழுவின் அங்கீகாரம், தனி நபரானால் அந்த தனிநபரின் விருப்பு/வெறுப்பு/ஆசை போன்றவற்றின் அடிப்படையில் அமைந்த ஒன்று.

இவையெல்லாவற்றிலும் அங்கீகாரம் என்பதுதான் உயிர்நாடி.

Ayyanar Viswanath said...

வவ்வால் பொடியன் அங்கிள் மற்றும் பலூன் மாமா நன்றிகள்

Anonymous said...

top [url=http://www.c-online-casino.co.uk/]www.c-online-casino.co.uk[/url] hinder the latest [url=http://www.casinolasvegass.com/]free casino[/url] free no consign hand-out at the leading [url=http://www.baywatchcasino.com/]no deposit tip
[/url].

Featured Post

test

 test