Saturday, January 19, 2008

திரும்புதல் அல்லது புதைவிலிருந்து மீண்டெழுதல்

Volver (2006) aka Coming back
சம கால இயக்குநரான Pedro Almodóvar ன் திரைப்படங்கள் பரவலாய் கவனப்படுத்தப்படுகிறது. பெரிய யுக்திகளோ, தொழில்நுட்ப மிரட்டல்களோ எதுவும் இல்லாது சம தளங்களில் இயங்குகிறது இவரது உலகம். அன்பு,உறவுச் சிக்கல்கள், மறைக்கப்பட்ட குரூரங்கள் என இவர் வெளிக் கொணரும் படைப்புகள் அவர் வாழ்ந்த, வசித்த, சந்திக்க நேர்ந்தவைகளின் வெளிப்பாடாய் உண்மையின் பிரதிபலிப்பாய் இருக்கிறது.முப்பத்தி ஏழு விருதுகளை குவித்திருக்கும் Pedro Almodóvar ன் இந்தத் திரைப்படம் மிகுந்த மன உளைச்சல்களை ஏற்படுத்திப் போனது.

ஸ்பெயின் தேசத்து கிராம வாழ்வு குறிப்பாய் பெண்களின் உலகம் சார்ந்த களத்தில் இத்திரைப்படம் இயங்குகிறது.மேலும் சூரைக்காற்று, தீவிபத்துக்கள், ஆண்களின் வன்முறை,உறவு ரீதியிலான நம்பிக்கைத் துரோகங்கள் இவைகளால் அலைக்கழிக்கப்படும் பெண்களின் வாழ்வைப் பேசுகிறது.பிரதான கதாபாத்திரமான Raimunda(Penélope Cruz) அவளின் தாயார் மற்றும் மகள் என மூன்று காலகட்டத்துப் பெண்களின் வாழ்வியல் ரீதியிலான போராட்டங்கள் / சிதைவுகள் என்கிற முறையில் இத்திரைப்படத்தை அணுகலாம்.மூன்று காலகட்டத்திலும் பெண்களின் வெளிப்புறத் தோற்றங்கள் மற்றும் வாழ்வு முறைகள்தான் வித்தியாசப்படுகின்றதே தவிர உளவியல் ரீதியாக அவர்கள் சந்திக்க நேரிடும் பிரச்சினைகளில் எவ்வித மாற்றமுமில்லை.ஒரு நாவலை வாசிக்கும் சரளமான நடையும்,சின்ன சின்னப் புதிர்களும்,மிக அதிர்ச்சியான புதிர்களின் பின்னாலிருக்கும் உண்மைகளும், படம் முழுதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் பார்வையாளனை கண்களை எடுக்க விடாமல் ஒன்றிப்போகச் செய்துவிடுகிறது.

Irene (Carmen Maura) - தாய்
கிராமங்களில் பேசப்படும் / நம்பப்படும் ஆவிக் கதைகளை பெண் தனது பழிவாங்கலுக்காய் அல்லது மிகப் பிடித்தமான இருப்பிற்கான விழைவுகளுக்காய் பயன்படுத்திக் கொள்ளும் நுட்பங்கள் உலகெங்கிலும் நடைமுறையிலிருக்கும் வாழ்வியல் ரீதியான அவலம்தான். இதை நகைச்சுவையோடு சொல்லியிருப்பது மிகவும் புதிதான கதை சொல்லும் முறை.ஒரு தீ விபத்தில் raimunda வின் தாயும் தந்தையும் இறந்து போனதாயும் அவளின் தாயின் ஆவி தனியே வசிக்கும் அத்தையினைப் பார்த்துக்கொள்வதாயும் கதைகள் சொல்லப்படுகிறது. ஆனால் அவளின் தாய் பக்கத்து வீட்டுக்காரியோடு படுக்கையிலிருந்த தனது கணவனை எரித்துவிட்டு தன் வயதான அத்தையோடு எவருக்கும் தெரியாமல் வசிக்க ஆரம்பிக்கிறாள்.அத்தை இறந்ததும் கணவனை பிரிந்து தனியே வாழும் தன் இரண்டாவது மகளிடம் சென்றுவிடுகிறாள்.எல்லாருக்கும் உண்மை தெரிந்ததும்,சுமுகமானதும் வயதான தனிமையில் நோயின் துணையோடு வாடும் தன் பக்கத்து வீட்டுக்காரியைப் பார்த்துக்கொள்ளச் சென்றுவிடுகிறாள்.ஒருவகையில் அவளது அம்மாவைக் கொன்றதிற்கு பிரதிபலனாயுமிருக்கும் எனச் சொல்லியபடி தன் மகள்களிடமிருந்து பிரிந்து போகிறாள்.


Raimunda(Penélope Cruz) -மகள்
penelope cruz எனக்கு மிகவும் பிடித்த நடிகை.இந்தப் பெயரை கேட்டதும் அடர்சிவப்பு நிற நீளமான மிளகாய் கண்முன் வருவது எதனால் எனத் தெரியவில்லை.நான் பார்த்திருந்த இவரின் பிற திரைப்படங்களில் இவர் அணியும் பெரும்பாலான உடைகளின் வண்ணம் சிவப்பு என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.இந்தக் கதாபாத்திரம் சந்திக்க நேரிடும் அலைவுகள் மிகவும் குருரமானது.ஒரு குரூரமான உண்மை படத்தின் கடைசியில் சொல்லப்படுகிறது.அந்த நொடியில் ஏற்பட்ட அதிர்ச்சி விவரிக்க முடியாதது.அதே போன்றொரு நிலை தனது மகளுக்கும் ஏற்படுவதும் அந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதும் தன் வாழ்வியல் நிலையிலிருந்து மீண்டெழுவதுமான சுலபத்தில் மறக்க இயலாத கதாபாத்திரம்.

மகளாக நடித்திருக்கும் Paula ((Yohana Cobo ) பற்றியும் சொல்லிவிட்டால் பார்க்கும்போது நீங்கள் சந்திக்க நேரிடும் அதிர்ச்சிகள் குறையுமென்பதால் அவைகளைத் தவிர்க்கிறேன்.தங்கையாக நடித்திருக்கும் Sole (Lola Dueñas) கேன்சர் நோய்க்கு உள்ளாகும் பக்கத்து வீட்டுப்பெண் Agustina(Blanca Portillo) என முற்றிலும் பெண்களாலான திரைப்படம்.வாழ்வினை எவ்வித மிகைப்படுத்தலும் இல்லாமல் பதிவிப்பது வழக்கமானதுதான் என்றாலும் குரூரங்களை அதன் தீவிரத் தன்மை குறையாது மிக மெல்லிதாய் சொல்லும் முறை மிகப் புதிது.

படத்தில் வரும் ஒரு உணர்ச்சிகரமான பாடல்..

10 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

éépenelope cruz எனக்கு மிகவும் பிடித்த நடிகை.இந்தப் பெயரை கேட்டதும் அடர்சிவப்பு நிற நீளமான மிளகாய் கண்முன் வருவது எதனால் எனத் தெரியவில்லை.éé

Maybe that could be because you either saw a movie titled woman on top. or watched a trailer where penelope cruz (acting as a brazilian chef) bites on a red chilli. a precursor to manirathnamès pachchai niramae picturization (i think). ;)

speaking of chillies. i vaguely remember a movie with smitha patil & nashrudhin shah and chillies. do you which movie that isÉ

(on ubuntu now and yet to figure out tamil (and french) typing...)

abt the movie. a cute fluffy piece from almodovar. enjoyable. i liked the extra features where almodovar talks quite a bit about his personal life.

-Mathy

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

when i said fluffy. i meant for almodovar. compared to earlier movies, he kept a decidedly èfunè air.

-Mathy

ஆடுமாடு said...

அய்யனார் நல்ல விமர்சனம்.

Pedro Almodovar ன் Mala education Lo (தலைப்பு இதுதான் என நினைக்கிறேன்) படத்தைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிடுகிற விஷயங்கள் இதிலும் இருக்கிறது.

நன்றி.

Ayyanar Viswanath said...

மதி vennila sky படமும் கூட காரணமா இருக்கலாம்..(fully red costumes).. மணிரத்னம் இங்கிருந்து கூட அடிச்சிருக்கலாம் யார் கண்டா? ஆனா ஷாலினி கடித்த மிளகாயும் நல்லாத்தானிருந்தது :) ஷாலினி ஜோதிகா ன்னு இரண்டு சொல்லிக்கும்படியான நடிகைகளை நாம் இழந்தது எத்தன பெரிய்ய ஆணாதிக்கம் மதி.. இதை ஏன் பெண்ணியவியாதிகள் வன்மையா கண்டிக்கலைன்னு தெரியல :))

Ayyanar Viswanath said...

ஆடுமாடு

படத்தின் பேர் சரிதான் Mala education Lo aka Bad education நான் அந்த படம் இன்னும் பாக்கலைங்க..தேடிப்பிடிச்சி பார்க்கனும்

கோபிநாத் said...

\\இந்தப் பெயரை கேட்டதும் அடர்சிவப்பு நிற நீளமான மிளகாய் கண்முன் வருவது எதனால் எனத் தெரியவில்லை.நான் பார்த்திருந்த இவரின் பிற திரைப்படங்களில் இவர் அணியும் பெரும்பாலான உடைகளின் வண்ணம் சிவப்பு என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்\\

சேம் பிளட் அய்ஸ் ;))

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் விமர்ச்சனம் அருமை. என் டிவிடி கடைக்காரரிடம் கேட்டு பார்க்கிறேன். இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். நீங்கள் "Talk to Her" என்ற திரைப்படத்தை பார்த்து இருக்கிறீர்களா..

Anonymous said...

nazruthin shaw smitapatil- film is 'mirch masala'

Anonymous said...

the film of smita patil is 'mirch masala'

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

anony 1 & anony 2:

many thanks. i remember few scenes from that movie. will search for the movie.
thanks.

-Mathy

Featured Post

test

 test