Thursday, March 13, 2008

சுகுணா திவாகர் மற்றும் அய்யனார் பிரதிகளினூடாய் அதிகார மய்யங்களை எதிர்த்து எழுதப்படும் பிரதிகளில் கட்டமைக்கப்படும் அதிகாரங்கள்

சுகுணாவின் சமீபத்திய பிரதியொன்றில் அவர் சுட்டியிருந்த பார்ப்பனிய எதிர்ப்பு மிகப்பெரிய இளக்காரத்தையே வரவைத்தது. முதலில் பார்ப்பனியம் என்கிற சொல்லாடல் மூலமாக கட்டமைக்கப்படும் உண்மை என்னவென நோக்குகையில் அஃதொரு அதிகார மய்யத்திற்கான எதிர்ப்பு என்பதுதான் உண்மையான விழைவாய் இருக்கமுடியம்.பார்ப்பனியம் என்ற சொல்லாடல் மீது எனக்கு மிகப்பெரிய மனக்கசப்புகள் இருக்கின்றன.மறைமுகமாக இச்சொல்லாடல் ஒரு குறிப்பிட்ட சாதியைக் கட்டமைப்பதால் இச்சொல்லாடல் ஒற்றைப்பரிமாணத் தன்மைக் கொண்டது என்பதாய் நம்புகிறேன்.நவீன யுகம் சிதைந்து விளிம்பு நிலை கதையாடல்களை பேசத்துவங்கிய காலகட்டத்தில் பார்ப்பனிய எதிர்ப்பென்பது மிகச்சக்தி வாய்ந்த இடது சாரித் தன்மையாய் கோலோச்சியது.அப்போது அவ்வெதிர்ப்புகள் மிகத் தேவையானதுமாய் இருந்தது.ஆனால் பின்நவீன சூழலில் இப்பார்ப்பனீயம் என்கிர சொல்லாடல் விஜயகாந்த படம் பார்த்த இண்டர்வெலில் ஒரு நோஞ்சானைக் குத்துவிடுவது என்பது போன்ற படிமத்தையேக் கட்டமைக்கிறது இப்போதையை தேவை / இப்போதைய சொல்லாடல் அதிகார மய்யத்திற்கெதிரான சிறுகதையாடல்கள் என்பதே சரியான பார்வையாய் இருக்க முடியும்.இன்னமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே முன்னிறுத்தி நமது அதிகாரங்களை நிலைநாட்டிக் கொள்வதென்பது நேர்மையற்றதாய் உண்மைக்குப் புறம்பானதாய் மட்டுமே இருக்க முடியும்..

ஆகவே பார்ப்பனியம் என்பதிலிருந்து நகர்ந்து அதிகார மய்யம் என்கிற பெருங்கதையாடலைக் கைக் கொள்ள வேண்டியது மிக மிக அத்தியாவசியமானதாய் / மிகப்பிரம்மாண்டமானதாய் முன் நிற்கிறது.இந்த அதிகாரமய்யமென்பது நம் எல்லாரிடமும் நமக்கேத் தெரியாது வேரூன்றிக் கிளைத்துப் பரவி தன் நீண்ட பற்களால் கண்ணில் படுபவற்றைக் கிழித்துப் போடுகிறது.இதிலிருந்து நாம் தப்ப முடியாது.விலங்கின் வளர்ந்த நிலையான மனிதனென்பவன் தன்னுடைய இயலபுச் சூழலிலிருந்து வெளிவரல் என்பது மிகப்பெரிய போராட்டமே. நாமெல்லாரும் வளர்ந்த/வளர்ச்சியடைந்த மிருகங்களென்பதால் மிருகங்கள் தனக்கே உரித்தான அதிகாரங்களை தான் அடக்கியாள வேண்டிய போராட்டங்களை முன் நிறுத்துவதால் நாம அனைவரும் அதிகார மய்யத்தின் பிரதிகளே..

தன்னளவில் இதைப் புரிந்து கொள்வதென்பது இயலாத காரியமென்பதால் பிறிதொருவர் சுட்டி புரிந்து கொண்ட அதிகார பிம்பங்களை இங்கே முன் வைக்கிறேன்..சமீபத்தில் நண்பர் ஓவியர் அசோக்குடனான உரையாடல்களின் முடிவில் அவர் வைத்த வாதங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை வரவைத்தது. ஓவியம, பிரதி இவ்விரண்டுக்குமான வேற்றுமைகளை அவர் சொல்லிக்கொண்டிருந்தார். நான் பிரதியை முழுமையாய் புரிந்து கொள்ள பிரத்திக்கான ஓவியங்கள் எந்த அளவு துணையாய் இருக்கிரதென சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கையில் அவர் பிரதிக்கான ஓவியமென்பது கிடையவே கிடையாது.. நீ உன்னுடைய பிரதியை முன்னிருத்தி, அதிகாரத்தைக் கட்டமைத்து உன் பிரதியைப் பிரதானப்படுத்தி அவ்வோயியங்களை பயன்படுத்திக் கொள்கிறாயே தவிர ஓவியமென்பது ஓவியமாகவே இருக்கிறது... அது உனக்கானதில்லை... அது அதற்கானது.. எனச் சொல்லி என்னில் அதிரச்சிகளை உண்டாக்கினார்.நான் என் பிரதிகளை எவரோக்களின் ஓவியங்களினூடாய் காட்சிப்படுத்துகிறேன் இஃதொரு அதிகார மய்யத்தின் மிக ஆணவமான நடவடிக்கையே என்பதை உணர்ந்த கணத்தில் நான் மிகவும் அதிர்ந்து போனேன் என் இதுநாள் வரைக்குமான நிலைப்பாடென்பது சிதைந்து போன சிதைவுகளை உள்ளடக்கிய ஒன்றானதாய் இருந்து வந்திருக்கிறது. மிகக் குறைந்த பட்ச நியாயமென அவ்வோவியம் எங்கிருந்து எடுக்கப்பட்டதென்கிற சுட்டிகளைக் கூட கொடுக்காதிருந்தது என்னை குற்ற உணர்வுகளின் கீழ் தள்ளியது..

நானொரு அதிகாரமய்யப் பிரதி..

சுகுணா தமிழச்சியின் பதிவொன்றின் பின்னூட்டத்தில் என் பின்னூட்டத்திலிருந்த வீரம் என்பதை இவர் அவர்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை என்கிற வாக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பிரச்சினைகளின் அல்லது சர்ச்சைகளின் கரு என்னவென்பதே தெரியாது வீரம் என்றால் என்ன? என்றொரு பின்னூட்டத்தை இட்டிருந்தார் இதில் பல்லிளித்த அதிகார மய்யம் மிகக் கூர்மையான பற்களைக் கொண்டிருந்தது.ஒரு பிரதியினை முழுமாய் வாசிக்காது அதன் எதிர்கருத்துகளை சிதைப்பதென்பது அதிகார மய்யத்தின் செயல்பாடே.. தெரிந்தோ தெரியாமலோ அவர் அதை நிறுவியிருந்தார். அதனோடு மட்டுமில்லாது அவர் சமீபத்தில் எழுதியிருந்த பிரதி நீர்த்துப்போன நோஞ்சானைக் குத்துவிடுகிற செயலாகவே இருந்ததென்பது என் அனுமானமாய் இருக்கிறது.

இனிமேலும் பார்ப்பனீயம, சுரா, சுஜாதா என ஜல்லியடிததுக் கொண்டிருப்பதிலிருந்து மீண்டு அதிகார மய்யம் என்பதினை நோக்கி நகரத் துவங்குவோம. அதற்கு முதலில் நம்மளவில் தூக்கலாய் நிற்கும் அதிகாரத்தினைச் சிதைப்போம்.இப்போதைய வலைச்சூழலில் மிகப்பெரிய அதிகார மய்யமென நான் உணர்வது தமிழச்சி பதிவுகளையும் அதற்கு ஒத்து ஊதும் திராவிட ப்ளா ப்ளாக்களை மாத்திரமே. பார்ப்பனியத்திற்கெதிரான திராவிடமென்பது தன்னளவிள் இன்னொரு பார்ப்பனியமாக வளர்ந்து நிற்பது மிகவும் ஆபத்தானது..

சற்றுத் தாமதமான பின்குறிப்பு: இப்பதிவிற்கு வரும் / வரப்போகும் பார்ப்பனீய சார்பு பின்னூட்டங்களுக்கு : இப்பிரதியில் நான் சொல்லியிருப்பதெல்லாம் / சொல்ல வந்திருப்பதெல்லாம் பார்ப்பனீய எதிர்ப்பு நிலைப்பாடே இஃதொரு ஒற்றைப் பரிமாணமாய் இருப்பதின் அபாயங்களைச் சுட்டியிருக்கிறேனே தவிர சார்பு நிலைப்பாடில்லை.எந்த ஒரு வடிவிலும் அதிகாரத்தினை மகிழச் செய்ய நான் எப்போதுமே விரும்புவதில்லை

40 comments:

Radha Sriram said...

:):)

வவ்வால் said...

அய்யனார்,

//இனிமேலும் பார்ப்பனீயம, சுரா, சுஜாதா என ஜல்லியடிததுக் கொண்டிருப்பதிலிருந்து மீண்டு அதிகார மய்யம் என்பதினை நோக்கி நகரத் துவங்குவோம. அதற்கு முதலில் நம்மளவில் தூக்கலாய் நிற்கும் அதிகாரத்தினைச் சிதைப்போம்.இப்போதைய வலைச்சூழலில் மிகப்பெரிய அதிகார மய்யமென நான் உணர்வது தமிழச்சி பதிவுகளையும் அதற்கு ஒத்து ஊதும் திராவிட ப்ளா ப்ளாக்களை மாத்திரமே. பார்ப்பனியத்திற்கெதிரான திராவிடமென்பது தன்னளவிள் இன்னொரு பார்ப்பனியமாக வளர்ந்து நிற்பது மிகவும் ஆபத்தானது..//

பதிவை விட கடைசி பத்தி அருமை! முழுக்கருத்தும் அதில் இருக்கு(நல்ல படத்தின் கிளைமேக்ஸ் போல)

பி.கு:
சுகுணாவிற்கோ, அல்லது தமிழச்சிக்கோ போதுமான அறிவு வளர்ச்சி(பகுத்தறிவோ, இலக்கிய அறிவோ) இருப்பதாக நான் கருதவில்லை, அவர்களின் புறத்தோற்ற கருத்தாக்கங்களை கணக்கில் கொண்டு நீங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாக படுகிறது!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

////தமிழச்சி பதிவுகளையும் அதற்கு ஒத்து ஊதும் திராவிட ப்ளா ப்ளாக்களை மாத்திரமே. பார்ப்பனியத்திற்கெதிரான திராவிடமென்பது தன்னளவிள் இன்னொரு பார்ப்பனியமாக வளர்ந்து நிற்பது மிகவும் ஆபத்தானது..///

It is 200% true!

Anonymous said...

அய்யனார் தமிழச்சிக்காக நீங்கள் போட்ட கோணார் நோட்டீஸ் நன்றாகவே வேளை செய்திருக்கின்றது. 3 நாட்களாக லக்கியும் தமிழச்சி பக்கம் போய் கும்பவில்லையாக்கும். தமிழச்சியிடம் இருப்பது மேல்மட்டதிமீர். அவருடைய செயல்பாடுகள் அதான் டைப் மேட்டர் பெயருக்காக ஆள்வைத்து செய்கிறாரோ? புகழ்வெறிக்கு அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று தமிழ்மண வாசகர்கள் அறிந்தது தானே! தமிழ்மணத்தில் தொடர்ந்து செயலல்படுவது தமிழ்மணத்திற்கு கேடானது. தமிழச்சி என்றாலே இளித்துக் கொண்டு வருகிறார்களே! அந்த பெண்ணை தமிழ்மணத்தில் இருந்து தூக்காவிட்டால் முடிச்சவுக்குகளும் மொள்ளமாரிகளும் தான் டாப் 10 இல் இருப்பார்கள்.

TBCD said...

அய்யனார்,

நீங்க சொல்லுறது முழுசா விளங்கவில்லை என்றாலும், அந்த கடைசி பத்தி விளங்குது.

பார்ப்பனீய எதிர்ப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட வகுப்பினரைச் சாடுவது என்றிலிருந்து விலகி, அதை பரப்பும், கடைப்பிடிக்கும், அனைத்து தரப்பினரையும் நோக்கி நகர்ந்துக் கொண்டியிருப்பதாக நான் நினைக்கிறேன்.

அப்பறம், இந்த அதிகார மையத்தைப் பற்றி இன்னும் சிறிது விளக்குங்கள்.

பு.த.செ.வி

TBCD said...

தட்டையாக அனைவரும்/திராவிடப் பதிவர்கள் ஆதரிக்கின்றனர் என்றுச் சொல்லுவது தவறு இல்லையா அய்யனார்.

அய்யனார், பதிவு எழுதக் கூடாது என்று நான் சொல்ல முடியும்மா. அதே மாதிரி தானே மற்றவர்களுக்கும்.

அது அவங்க உரிமை. எழுதுறாங்க.பிடிச்சா படிங்க. பிடிக்கவில்லை என்றால் மூடிவிட்டுப் போகலாம்.

சக பயணிகள் என்று நீங்கள் குறிப்பிட்ட சிலரை மட்டும் போடுறீங்க. அதன் அர்த்தம் என்ன..ஏன் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் சக பயணிகள். அப்ப மத்தவங்க. அவங்க உங்களை ஆதரிக்கிறாங்க..நீங்க அவங்களை ஆதரிக்கிறீங்க என்றுக் கொள்ளலாமா.

லக்கிலுக் said...

//இப்போதைய வலைச்சூழலில் மிகப்பெரிய அதிகார மய்யமென நான் உணர்வது தமிழச்சி பதிவுகளையும் அதற்கு ஒத்து ஊதும் திராவிட ப்ளா ப்ளாக்களை மாத்திரமே.//

அய்யனார்!

முழுக்க முழுக்க காமெடிப்பதிவு என்றபோதிலும் இந்தப் பத்தி மிக மிக நகைச்சுவையானது. மேலும் நிறைய நகைச்சுவை சிந்தனைகளை தர வாழ்த்துக்கள்!

பேய்ச்சி said...

அன்பின் அய்யனார்,
எங்களை நாங்களே முதலில் கேள்விக்குட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உங்கள் புரிதல் மகிழ்ச்சியளிக்கிற‌து.

முழுமையான தன்னிலைக் கரைவு என்பது சாத்தியப்படாத வரை அதிகார இயங்குவெளிக்குள் அலைந்துழன்றே தீர வேண்டியிருக்கிறது. 'என்னிடம் சொல்வதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது' என்ற விழைவே மற்றவரை/மற்றமையை செவிசாய்க்க நிர்ப்பந்திக்க வேண்டும் என்ற அதிகாரத் தூண்டல் தானே? மனிதப் புலனுணர்வுக்குட்பட்ட மண்டலங்களுக்குள் 'அதிகாரம் அற்ற வெற்றிடம்' என்று ஒன்றிருப்பது சாத்தியம் என்று தோன்றவில்லை. அதிகாரம் கடவுள்த்தன்மையது; நீக்கமற எங்கும் தன்னை இட்டு நிரப்பியபடியே இருக்கும்... இந்த மாயச்சுழல் விளையாட்டில் ஒவ்வொருவரும் ஒன்றில் அதைப் பிறர்மீது செலுத்துதல் அல்லது அதற்கு ஆட்பட்டு அடிமை நிலை கொள்ளல் என்ற நிலைகளில் அலைக்கழிகிறோம்.. எனவே தான், அடையாளப்படுத்தப்பட்ட அதிகாரங்களுக்கெதிரான முற்போக்குப் போராட்ட வழிமுறைகள் கூட மறு அதிகாரத்தை வழிமொழிகின்றன... முதலாளியத்தின் கொடூரத் திணிப்புக்கெதிராக‌ பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் பரிந்துரைக்கப்படுகிறது.. நாங்கள் அந்த ஒழுங்கமைப்புக்குள் உட்பட்ட தன்னிலைகள்... அதன்வழி கட்டமைக்கப்பட்டது நமது தன்னினைவு... இதைக் கடந்து செல்வது எப்படி? "சும்மா கிடத்தல் சுகம்" என்று கிடந்து விட்டால் என்ன? :-)

"பிரதிக்கான ஓவியங்கள்" பற்றிய உங்கள் உரையாடல் சுவாரசியமானது. முதலில், ஓவியம் என்பதே தன்னளவில் ஒரு பிரதி தானே? அது தனக்கான பிரத்தியேகமான உருவாக்கக் கூறுகளைக் கொண்டது அல்லவா? எழுத்தைப் பிரதானப்படுத்தி அதற்கான 'துணைப்பிரதியாக' ஓவியத்தைக் கருதும் பார்வையை ஆண்மையச் சிந்தனையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது.. எழுத்தாளர், கவிஞர், ஓவியர், தொழிலாளி, முதலாளி, நோயாளி என்ற சொற்களெல்லாம் மூளையில் ஆண் குறித்த நினைவையே முதலில் கிளர்த்துவது போல, பிரதி என்ற சொல்லாலும் 'எழுத்தை'யே நினைவுறும்படி பழக்கப்பட்டிருக்கிறோம். இதுவரை காலமான எமது வரலாற்றில் முனைப்புற்றியங்கும் முதன்மைப் பிரதியாக 'ஆண்'தானே கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறான்? 'பெண்' அந்த ஆண்மையச் சமூகத்தின் அழகியல், ஒழுக்கவியல் முதலானவற்றை சிதைவிலிருந்து பேணிப் பாதுகாக்கும், ஆணைச் சார்ந்தியங்கும் 'துணைப்பிரதி'யாகவே கொள்ளப்படுகிறது. ஆனால், இதன் பின்னாலியங்கும் உளவியல், பெண்மை மீதான அச்சத்துடன் தொடர்பு பட்டதாக எண்ணத் தோன்றுகிறது.

Voice on Wings said...

இப்பதிவின் பல கருத்துகளோடு உடன்பட முடியவில்லை. ஒரு வலைப்பதிவுக்கு மட்டுமே சொந்தமானவர்களை (அவர்களைப் பற்றிய வேறு தகவல்கள் இல்லாத நிலையில்) 'அதிகார மையம்' என்றெல்லாம் சித்தரிப்பது அதிகப்பட்சமாக உள்ளது.

பதிவர் வட்ட தனிநபர் பிரச்சனைகளுக்குள் செல்லாமல் சமூக நோக்கில் பார்த்தாலும் நீங்கள் கூறும் 'நோஞ்சானைக் குத்தும்' உவமை சுரா, சுஜாதா போன்றவர்களுக்குப் பொருந்தி வருமா என்றுத் தெரியவில்லை. பார்ப்பனீயம் vs. திராவிடம் என்று பார்த்தாலும், அரசியல் ரீதியாக கொஞ்சம் அதிகார இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. மற்றபடி, ஆட்சிப் பொறுப்பு, பொருளாதாரம், நீதித்துறை, ஊடகத்துறை போன்ற மற்ற அதிகாரங்கள் இன்னமும் பெரிய அளவில் இடம் மாறவில்லை என்பதே யாதார்த்த நிலை.

Ayyanar Viswanath said...

voice on wings

அதிகார மய்யமென்பதாய் நான் முன் வைத்திருப்பது பிரதிகளை மாத்திரமே இதற்கு பதிவர்களின் பின்புலங்கள் தேவையில்லாதது என்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது..

யதார்த்தம் நிலைநின்ற பிறகே இன்னொரு நிலைக்குத் தாவுவதுதான் நேர்மையானதாய் இருக்கமுடியும் ஆனாலும் சிந்தனைரீதியில நாம் தொடர்ச்சியாய் நம்மை மறுசூழலுக்கு தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பது தேவையானதாகத்தான் எனக்குப் படுகிறது...

மற்ற நண்பர்களுக்கு பதில் விரைவில்...

சாரி லக்கி ரொம்ப சீரியஸ் மூடில் இப்போ இருக்கிறதால உங்க பின்னூட்டத்தை வெளியிட முடியல..கொஞ்சம் இறுக்கம் குறைந்தால் வெளியிட முயற்சிக்கிறேன் ..யாரிடமாவது கோனார் நோட்ஸ் வாங்கியாவது இப்பிரதியை எதற்கும் இன்னொரு முறை படித்துவிடுங்கள்..இல்லை தாவு தீருது என எஸ்கேப் ஆகுங்கள்..:)

Osai Chella said...

உங்களுக்கு பின்னவீனத்துவ மாயை ஒரு பெரிய சுமை! நீங்க எழுதியிருக்கிறது ஒரு விளிம்பு நிலை மனிதனிடம் அப்படியே படிச்சுக் காம்பிங்க! “ஒரு எளவும் புரியல கண்ணு” ந்னு சொல்வானா மாட்டானா? முதலில் விளிம்புகளை நோக்கி அவர்கள் பாசையில் எழுத/நகர வாழ்த்துக்கள்!

அன்புடன்
ஓசை செல்லா

பைபிள் உலகின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது! குரான் இன்னும் அரபியிலேயே வாசிக்கப்படுகிறது! சமஸ்கிருதம் தான் கடவுள் பாசை. கிருத்துவம் உலகின் மிகப்பெரிய மதம்! என்ன பல்பு எரியுதா நண்பா?

லக்கிலுக் said...

//சாரி லக்கி ரொம்ப சீரியஸ் மூடில் இப்போ இருக்கிறதால உங்க பின்னூட்டத்தை வெளியிட முடியல..கொஞ்சம் இறுக்கம் குறைந்தால் வெளியிட முயற்சிக்கிறேன் ..யாரிடமாவது கோனார் நோட்ஸ் வாங்கியாவது இப்பிரதியை எதற்கும் இன்னொரு முறை படித்துவிடுங்கள்..இல்லை தாவு தீருது என எஸ்கேப் ஆகுங்கள்..//

நன்றி அய்யனார். எப்போதும் உங்கள் மீது எனக்கு பெரியதாக மதிப்பு எதுவும் இருந்ததில்லை. இப்போதும் அது உறுதிப்படுகிறது.

கீழ்க்கண்ட பின்னூட்டத்தை வெளியிட்டு, எனது லைட்டான பின்னூட்டத்தை மட்டுறுத்தியிருப்பதின் மூலம் உங்களது உள்மன விகாரம் வெளிப்படுகிறது.

//ஒன்றுக்கும் லாயக்கில்லாத தமிழச்சியை இன்று தமிழ்மணத்தின் நம்பர் ஓன்றாக ஆக்கியது இந்த திராவிடக் குஞ்சுகள் தான். அவர்கள் இருக்கும் திமிரில் தான் தமிழச்சி மிரட்டிக் கொண்டிருக்கிறார். மிக மோசமான மரியாதை குறைவான வார்த்தைகளை கையாளுகிறார். தமிழச்சிக்கு திடீரென இந்த அளவுக்கு தமிழ் எழுத தெரிந்தது எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கின்றது. உண்மையில் சுகுணா திவாகரும், வரவணை, பெட்டீயும் தமிழச்சிக்கு பதிவுகள் எழுதித் தருவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அது உண்மையும் கூட. மிக வசதி படைத்த தமிழச்சியிடம் பணத்திற்காக இவர்கள் அல்லக்கைகளாக இருக்கின்றார்கள். உங்களின் கடைசி பகுதி மிகவும் உண்மையானது. அதிகாரத்தை நசுக்கும் தருணம் இது. முளையிலேயே கிள்ளியெறியாவிட்டால் இங்கேயும் ஆதிக்கம் வந்துவிடும்.//


மேலும், சாதாரண பின்னூட்டங்களை கூட உங்கள் பதிவுகளில் மட்டுறுத்துவதின் மூலம் நீங்கள் மேலும் மேலும் அதிகார மையமாக வலுப்பெருகிறீர்கள் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். உங்களை விட ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு சுகுணா திவாகர் இந்த விஷயத்தில் சிறந்தவர்.

நன்றி!

இப்பின்னூட்டத்தையும் மட்டுறுத்திக் கொள்ளலாம்.

Anonymous said...

///தட்டையாக அனைவரும்/திராவிடப் பதிவர்கள் ஆதரிக்கின்றனர் என்றுச் சொல்லுவது தவறு இல்லையா அய்யனார்.

அய்யனார், பதிவு எழுதக் கூடாது என்று நான் சொல்ல முடியும்மா. அதே மாதிரி தானே மற்றவர்களுக்கும்.

அது அவங்க உரிமை. எழுதுறாங்க.பிடிச்சா படிங்க. பிடிக்கவில்லை என்றால் மூடிவிட்டுப் போகலாம்.

சக பயணிகள் என்று நீங்கள் குறிப்பிட்ட சிலரை மட்டும் போடுறீங்க. அதன் அர்த்தம் என்ன..ஏன் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் சக பயணிகள். அப்ப மத்தவங்க. அவங்க உங்களை ஆதரிக்கிறாங்க..நீங்க அவங்களை ஆதரிக்கிறீங்க என்றுக் கொள்ளலாமா.
//////////////////

Ithu Sooopper!

கிருத்திகா ஸ்ரீதர் said...

மிகச்சரியாக சுட்டிக்காட்டியிருக்கின்றீர்கள். ஒரு மிகப்பெரும் புரிதலை வேண்டி தேங்கி நிற்கும் ஒரு உணர்வை அசைக்க முற்படுகிறது தங்கள் பதிவு. (ஆனால் இது போன்ற அசைவுகளுக்கு ஆட்டம் குடுக்குமா இங்குள்ள அதிகார மையங்கள் என்பது மட்டுமே இப்போதைய மிகப்பெரும் கேள்வி) வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

மிகச்சிறப்பாக உங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள் அய்யனார்.
ஆயினும் நவீன முரண்பாடுகளின் தோற்றப்பிழை என்ற சொல்லாடலுக்கேற்ப அதிகாரமய்யத்தை சாடல் கருத்துக்களின் எதிர்ப்பு உங்களவில் தமிழச்சியின் கருத்துக்களுடனா அல்லது திராவிட குழுக்களுடனா...! மிகைப்படுத்தப்பட்ட நோக்கு விதைபடுவதும் வளர்ந்து மரமாவதும் இப்படிப்பட்ட நீர்களால்தானென்பது தாங்கள் அறியாததல்ல.


அதிகாரமய்யம் என்பது நிலைகொண்டு வெற்றி பெற்ற மோசமான திரைப்படத்தை மட்டுமே ஒத்தது. நமது நாட்டில் இது இயல்பு. இந்த பதிவின் பிரதி சுட்டிக்காட்டும் உண்மை நீ நீயாக இருப்பதில் மகிழ்ச்சி கொள் என்பதாகவே எனக்குப்படுகிறது. மற்றையோரை குற்றம் கூறவோ குறை பார்க்கவோ நாம் ஏதும் விசேஷ கண்ணாடி அணிவதில்லை. ஆயினும் மனவெளிப்பாடுகளின் குரூரதன்மை எழுத்தளவில் நீர்த்துப்போவதும் அதிகாரமையத்தின் வெளிப்பாடே...
காரணம் அதைத்தாண்டி நம்மால் செயலில் இறங்கமுடிவதில்லை என்ற ஆதங்கம் மட்டுமே.

நம் எழுத்துக்களின் வீச்சுக்கள் என்று பாமரனை சென்று சேர்கிறதோ அன்று ஏதாவது ஒரு பிரதி பாமரனையும் குற்றங்கண்டு டிஸ்கோ ஆடசொல்லும்.

பின்னூட்டங்களில் பேய்ச்சியின் கருத்தில் உள்ள உண்மை சிலரக்கு சற்று அதிகமாகவே சுடும்.

வால்பையன் said...

//ஒரு வலைப்பதிவுக்கு மட்டுமே சொந்தமானவர்களை (அவர்களைப் பற்றிய வேறு தகவல்கள் இல்லாத நிலையில்) 'அதிகார மையம்' என்றெல்லாம் சித்தரிப்பது அதிகப்பட்சமாக உள்ளது. //

அது நீங்கள் பார்க்கும் தோணியில் தான் இருக்கிறது.
திரும்ப திரும்ப ஒரே விசயத்தை உணர்ச்சி பெருக்குடன் சொல்வதால் அதை நம்பும் நிலை ஏற்படுகிறது.உளவியல் ரீதியாக அலசி ஆராய வேண்டிய பிரச்சனைகளை கண்ணை மூடி நம்புகிறோம்
தமிழசியால் குற்றம் சாட்டபட்டுள்ளவர்களில் பல பேர் ("பல",அனைவரையும் சொல்லவில்லை) பரிதாபத்துக்குரியவர்கள்.
சிகிச்சை பெற வேண்டிய மன நோயாளிகள். வேறு ஒரு அதிகார மையத்தினால் நசுக்க பட்டு அதன் வெளிப்பாடாக இம்மாதிரியான வேலைகளை செய்கிறார்கள்.
என்னுடைய கருத்தும் இன்று நாம் எதிர்க்க வேண்டியது அதிகார மையத்தை தான்

வால்பையன்

கல்வெட்டு said...

அய்யனார்,


Racism – Racist

Parpanisam – Parpanist



என்ற நோக்கில் சில நொடிகள் சிந்தித்தால் ஒரு வேளை புரியலாம்.

***

//ஆகவே பார்ப்பனியம் என்பதிலிருந்து நகர்ந்து அதிகார மய்யம் என்கிற பெருங்கதையாடலைக் கைக் கொள்ள வேண்டியது மிக மிக அத்தியாவசியமானதாய் / மிகப்பிரம்மாண்டமானதாய் முன் நிற்கிறது.//

:-)))

Racism - மும் உங்கள் விளக்கப்படி தவிர்க்க வேண்டிய சொல் இல்லையா? எல்லாம் அடிப்படையில் அதிகார மய்யங்கள்தான் , இருந்தாலும் எந்த அதிகார மய்யத்தை எதிர்க்கிறோம் என்பதற்கு அந்த அதிகார மய்யத்தை அடையாளப்படுத்த வேண்டியது அவசியம்.

********

பார்ப்பனியம் என்பது வர்ணாசிரம வழி வந்த பிறப்பின் அடிப்படையில் அமைந்த அடக்குமுறை அல்லது பாகுபாடு காட்டும் ஒரு செயல் அல்லது மனிதனை முன் முடிவுகளுடன் அணுக எடுக்கும் ஒரு ஆயுதம்.....இதைச் செய்யும் யாரையும் ( "தேவர்வீட்டு கல்யாண பத்திரிக்கை போல " என்று சொன்ன சுகுணா உட்பட) பார்ப்பனர் என்று சொல்லலாம்.

**

அய்யங்காராக பிறந்ததுக்கு பெருமைப்படுகிறேன் என்றும் அம்பிகள் மட்டுமே பார்க்கில் வெட்டியாக படுக்க மாட்டார்கள் என்றும் கட்டமைக்க விரும்பும் செயல்களை, அதிகார மய்யம் என்று சொல்லிக் கொண்டு எதிர்க்கமுடியும் என்றால், Racism-த்தையும் அதிகார மய்யம் என்றே சொல்லி எதிர்க்கலாம். எதை எதிர்க்கிறோம் என்று தெரியாமல்.....


***

// பார்ப்பனியத்திற்கெதிரான திராவிடமென்பது தன்னளவிள் இன்னொரு பார்ப்பனியமாக வளர்ந்து நிற்பது மிகவும் ஆபத்தானது..//

உண்மைதான்.
அதை ஒடுக்க இன்னொன்று வரலாம்.
முதாலாளித்துவத்தை எதிர்க்க கம்யூனிசம் வந்து பின்னர் அதுவும் ஒரு அதிகார மய்யமாக ஆகியது போல்தான் இதுவும். பின்னாளில் இதை எதிர்த்தும் இன்னொன்று வரலாம்.

***

உங்கள் வழியிலேயே பார்ப்பனீயத்தையும் ஒரு அதிகார மய்யமாகக் கொண்டால், பல அதிகார மய்ய அடையாளங்கள் உள்ள இந்த உலகில் , இதை மட்டும் எப்படி அடையாளப்படுத்தி எதிர்ப்பது?

Voice on Wings சொன்னதுபோல இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்.

நீங்கள் அதற்குள் "பார்ப்பனீயத்தை பத்திரமாக அதிகார மய்ய சரணாலயத்தில், மற்ற ஆதிக்க/அதிகார மிருகங்களுடன் சுதந்திரமாக சுற்றவிட வேண்டும் , இலக்கை நோக்காமல் பொத்தாம் பொதுவாக போராட வேண்டும்" என்று சொல்வது எந்த அளவில் சரி என்று தெரியவில்லை.

இளவெண்ணிலா said...

//ஆகவே பார்ப்பனியம் என்பதிலிருந்து நகர்ந்து அதிகார மய்யம் என்கிற பெருங்கதையாடலைக் கைக் கொள்ள வேண்டியது மிக மிக அத்தியாவசியமானதாய் / மிகப்பிரம்மாண்டமானதாய் முன் நிற்கிறது.இந்த அதிகாரமய்யமென்பது நம் எல்லாரிடமும் நமக்கேத் தெரியாது வேரூன்றிக் கிளைத்துப் பரவி தன் நீண்ட பற்களால் கண்ணில் படுபவற்றைக் கிழித்துப் போடுகிறது.இதிலிருந்து நாம் தப்ப முடியாது.விலங்கின் வளர்ந்த நிலையான மனிதனென்பவன் தன்னுடைய இயலபுச் சூழலிலிருந்து வெளிவரல் என்பது மிகப்பெரிய போராட்டமே. நாமெல்லாரும் வளர்ந்த/வளர்ச்சியடைந்த மிருகங்களென்பதால் மிருகங்கள் தனக்கே உரித்தான அதிகாரங்களை தான் அடக்கியாள வேண்டிய போராட்டங்களை முன் நிறுத்துவதால் நாம அனைவரும் அதிகார மய்யத்தின் பிரதிகளே//

அய்யனார்,
நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இந்தக் காலாவதியான எழுத்து நடையைக் கைவிட வேண்டியது தான்..இந்த நடைக்கு இங்கு அவசியமே இல்லை..தமிழில் தொடர்ந்து இயங்கும் படைப்பாளிகளின் நடையே இதை விட எளிமையாக உள்ளது..இது போன்ற எழுத்து போலித்தனமாகவும், சொல்ல வரும் கருத்தின் வீரியத்தை குறைப்பதாகவும் உள்ளது..

//நான் என் பிரதிகளை எவரோக்களின் ஓவியங்களினூடாய் காட்சிப்படுத்துகிறேன் இஃதொரு அதிகார மய்யத்தின் மிக ஆணவமான நடவடிக்கையே என்பதை உணர்ந்த கணத்தில் நான் மிகவும் அதிர்ந்து போனேன்//

பிரதி ஒரு கலை..ஓவியம் ஒர் கலை..பிரதியை விளக்க ஓவியமும், ஓவியத்தை விளக்க பிரதியும் உதவலாம்..இதை ஆணவம், அதிர்ச்சி அடைந்தேன் என்று விளக்க முற்படுவது...? அவ்வளவு நுணுக்கமும் மென்மையும் உள்ளவரா நீங்கள்? ஆனா இதைவிட அர்த்தமுள்ளதாகவும், ஆழமாகவும் எழுதும் ஜெயமோகன்,வா.மணிகண்டன் போன்றவர்களை சப்பை காரணங்களுக்காக விமர்சிப்பது ஏன்? இது போன்ற கவிதைக்கு மட்டுமே சாத்தியமான விஷயங்களை சீரியசான உரையாடலாக செய்வதைத்தான் அசுரன் போன்றோர் ஒன்பது வாசல்களின் வாயிலாகவும் சிரிக்கின்றனர்.

//இனிமேலும் பார்ப்பனீயம, சுரா, சுஜாதா என ஜல்லியடிததுக் கொண்டிருப்பதிலிருந்து மீண்டு அதிகார மய்யம் என்பதினை நோக்கி நகரத் துவங்குவோம. அதற்கு முதலில் நம்மளவில் தூக்கலாய் நிற்கும் அதிகாரத்தினைச் சிதைப்போம்.//

இது போன்ற வெற்றுக் கோஷங்களின் மதிப்புதான் என்ன? கணினியின் பின்னே பதுங்கி எழுதும் உங்களால் எங்கே நகர்ந்து , எதைச் சிதைக்க முடியும்? தமிழச்சியின் கொள்கைகளை விட்டு விடுவோம்..ஆனால் அவர் நம்பும் விஷயங்களுக்குக்காக அவர் வெளிப்படையாக செயல்படுகிறார்..
உங்களால் முடியுமா?

Anonymous said...

தமிழச்சி தமிழ்மணத்தில் இணைந்து
3 மாதத்தில் தமிழ்மணத்தில் no:1 ஆகவரமுடிந்தது எப்படி?

நான் 4 வருடங்களாக நாகரிகமான முறையில் எழுதிக் கொண்டிருப்பவர்களில் ஒருத்தி! தமிழச்சியோ பெண்ணீயம் பேசுகின்றேன் என்று சொல்லி மிக ஆபாசமான புகைப்படங்களை வெளியிட்டு ஆண்களை தங்கள் பக்கம் திசை திருப்பி வைத்துவிட்டார். ஆபாசத்துடன் கொஞ்சம் ரொவுடித்தனம், கொஞ்சம் பெரியார் இந்த கலவைதான் இன்றைய திமிர் பிடித்த தமிழச்சி கொஞ்சம் பெரியாரையும் எடுத்துக் கொண்டதால் இணையத்தில் முண்ணனியில் இருக்கும் லக்கி, செல்லா, வரவணை பெட,்டீ போன்றவர்களின் ஆதவும் அவருக்கு எளிதில் கிடைத்தது. அவர் புகழ் பெறுவதற்காக தந்திரமாக செயல்படுவதில் மிகச் சிறந்தவர். அதனால் தான் பெரியாரையும் கட்டம் கட்டுகிறார். நினைத்தால் பெண் பதிவரான எனக்கு எப்போதோ .......1 ஆகியிருக்க முடியும். மானம் கெட்ட பொழப்புக்கு தூக்குமாட்டிக் கொண்டு தொங்கிவிடுவேன் என் வளர்ப்பு அப்படிப்பட்டது. அதற்காக என்னை பாப்பாத்தியாக்கி விடாதீர்கள் திராவிடக் குஞ்சுகளே!

பெயரை வெளியிட்டு எழுதவும் இயலாத இந்த வலைச்சூழலில் மனக் குமுறலுடன் ....

Ayyanar Viswanath said...

லக்கி

எங்கே நீங்கள் எனக்கு பெரிய்ய மதிப்பு கொடுத்துவிடுவீர்களோ என பயந்தே போனேன் :))

லக்கிலுக் said...

//லக்கி

எங்கே நீங்கள் எனக்கு பெரிய்ய மதிப்பு கொடுத்துவிடுவீர்களோ என பயந்தே போனேன் //

அய்யோ பாவம் சிரிப்பான் போட்டு அழுவதை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது :-)

Ayyanar Viswanath said...

நீ ஏன் இந்த மொழியில் எழுதுகிறாய்? ஏன் சகபயணி என உன் பக்கத்தில் சிலரை வைத்திருக்கிறாய்?நீ ஏன் விளிம்பு நிலை மொழியை எழுதக்கூடாது?உன்னுடைய உள்மன விகாரம் தெரிந்துவிட்டது என புலம்பும் சக நண்பர்களுக்கு விளக்கம் சொல்ல சலிப்பாய் இருக்கிறது..இருப்பினும்

வேறு வேலை வெட்டி எதுவும் இல்லாததாலும் சுவாரஸ்யமான விசயங்களை செய்ய எதுவும் இல்லாததினாலும் மிகுந்த வார்த்தைகளை இங்கே கொட்டிக்கொண்டிருக்கிறேன் அது சூழலுக்கேற்ப தன் வடிவங்களைப் பெற்றுக் கொள்கிறது மற்றபடி உங்களின் மதிப்பைப் பெறுவதிலோ அல்லது பிநவியாதி / பைத்தியம் / ரொம்ப நல்லவன் / கெட்டவன் / சரக்கில்லாதவன் என அவரவர் விருப்பத்திற்கேற்ப வடிவத்தைக் கொடுத்துக்கொண்டு தாவு தீராதீர்கள்..

நான் எழுதும் பிரதிகள் உங்களை எவ்விதத்திலாவது சங்கடப்படுத்தினால் அல்லது மாற்றுப் பார்வைகளை கொண்டிருந்தால் அது குறித்து மட்டும் பேசுவது இருவருக்குமே வசதியாயிருக்கும்...

-/பெயரிலி. said...

ayyanar, nothing on the post.

On the "big trouser kid on the blog"; just start to ignore him. Do not LOOK at him. He is young, and once he gets the LOOK of a girl, his trouser will not do the "Boyz" act of coming down whenever a female blogger gives him a space and chance for psychopanting. He can do anything to be in the good books/blogs of the Lady. Or, just -for sake of lessening the noise - recognize his existence in the blogdom. Only two reasons that I do not want to tit-for-tat a lot are
1. My time (at least now)
2. I am not a fan of his some of his usual targets either - when it comes for their stands on ilangkai issues.

Anonymous said...

//நீ ஏன் இந்த மொழியில் எழுதுகிறாய்? ஏன் சகபயணி என உன் பக்கத்தில் சிலரை வைத்திருக்கிறாய்?நீ ஏன் விளிம்பு நிலை மொழியை எழுதக்கூடாது?உன்னுடைய உள்மன விகாரம் தெரிந்துவிட்டது என புலம்பும் சக நண்பர்களுக்கு விளக்கம் சொல்ல சலிப்பாய் இருக்கிறது..இருப்பினும்

வேறு வேலை வெட்டி எதுவும் இல்லாததாலும் சுவாரஸ்யமான விசயங்களை செய்ய எதுவும் இல்லாததினாலும் மிகுந்த வார்த்தைகளை இங்கே கொட்டிக்கொண்டிருக்கிறேன் அது சூழலுக்கேற்ப தன் வடிவங்களைப் பெற்றுக் கொள்கிறது மற்றபடி உங்களின் மதிப்பைப் பெறுவதிலோ அல்லது பிநவியாதி / பைத்தியம் / ரொம்ப நல்லவன் / கெட்டவன் / சரக்கில்லாதவன் என அவரவர் விருப்பத்திற்கேற்ப வடிவத்தைக் கொடுத்துக்கொண்டு தாவு தீராதீர்கள்..

நான் எழுதும் பிரதிகள் உங்களை எவ்விதத்திலாவது சங்கடப்படுத்தினால் அல்லது மாற்றுப் பார்வைகளை கொண்டிருந்தால் அது குறித்து மட்டும் பேசுவது இருவருக்குமே வசதியாயிருக்கும்...//

அய்யோ பாவம். ரொம்ப முத்திடிச்சி. டென்ஷன் ஆவாம போயி வேலைய பாரு கண்ணு. நாம் எழுதலைன்னா உலகமே நின்னு போயிடபோவுதா என்ன? அதது அந்தந்த வேளையிலே நடந்துகிட்டு தானிருக்கும்.

கல்வெட்டு said...

இணைக்க மறந்த உரல் இணைப்பு...

// ஜாதிப்புத்தி என்கிற ஒன்றை ஒத்துக்கொண்டால் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு புத்தி இருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டி வரும். வளர்மதி ஜாதிப்புத்தி என்கிற ஒன்று இருப்பதாக நம்புகிறார் // என்று வருந்தும் சுகுணா அதே பதிவில் இப்படியும் சொல்கிறார் // பெயர்களைக் குறிப்பிடத் தொடங்கினால் அதுவே இன்னொரு பதிவாகி விடும் அல்லது தேவர் வீட்டுக் கல்யாணப்பத்திரிகை போல ஆகிவிடுமென்பதால்//

குஜாலக மேலும் படிக்க..... :-)))

லக்கிலுக்கின் டவுசர் - 'கிழியும் ஆனால் கிழியாது'.
http://suguna2896.blogspot.com/2007/09/blog-post_19.html

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இப்பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் மற்றும் சில பதிவுகள் மூலமாக கிண்டல் / பகடி / கும்மி போன்றவற்றால் கூட எப்படிச் சில அதிகார மையங்களைக் கட்டியமைக்கிறார்கள் என்பது புரிகிறது - ((

/பார்ப்பனியம் என்ற சொல்லாடல் மீது எனக்கு மிகப்பெரிய மனக்கசப்புகள் இருக்கின்றன.மறைமுகமாக இச்சொல்லாடல் ஒரு குறிப்பிட்ட சாதியைக் கட்டமைப்பதால் இச்சொல்லாடல் ஒற்றைப்பரிமாணத் தன்மைக் கொண்டது என்பதாய் நம்புகிறேன்/

மறுபடியும் யோசித்துப் பாருங்கள். நீங்கள் சொல்லியுள்ளதன் விபரீதம் புரியுமென நினைக்கிறேன்.

அதிகார மையங்களைச் சிதைத்தாக வேண்டும் என்ற உங்கள் பார்வையோடு ஒத்துப் போகிறேன்.

சிலருக்குக் காலாவதியானதாய்த் தெரியும் உங்கள் நடை எனக்குக் காத்திரமானதாய்த் தெரிகிறது. :)

நிறைய பேச வேண்டியிருக்கிறது அய்யனார். இந்த பரபரப்புகள் அடங்கிய பிறகு நிதானமாய் உரையாடுவோம்.

Anonymous said...

இன்னிக்கான பெரிய காமெடிய இங்கே தமிழச்சி பண்ணிருக்காங்க

http://thamizachi.blogspot.com/2008/03/blog-post_2255.html

நீங்க எழுதுனத செல்லா உங்களுக்கு போட்ட நச் ஷொட்டுன்னு டைட்டிலோட போட்டிருக்க. கொடுமை.

Anonymous said...

//ஆனா இதைவிட அர்த்தமுள்ளதாகவும், ஆழமாகவும் எழுதும் ஜெயமோகன்,வா.மணிகண்டன் போன்றவர்களை//

இளவெண்ணிலா - ஜெயமோகன் சரி; வா.மணிகண்டன் அர்த்தமுள்ளதாகவும் ஆழமாகவும் எழுதுகிறாரா? விடலைப்பருவத்தின் கைகூடாத இச்சைகளை (காதல், காமம், அவன் அவள் நீ நான் எட்செட்ரா) காலச்சுவடு கவிதை உரைநடைக்கு வரித்து வைத்துள்ள அடைப்பலகையில் போட்டு எழுதுவதைத் தவிர வேறொன்றும் பெரிதாகச் செய்ததில்லை என்றுதான் தோன்றுகிறது. வளரும் கவிஞர்கள் ஒவ்வொருவரும் தாண்டி வரும் கட்டம் இது - காலச்சுவடு அடைப்பலகையை தாண்டி வந்தாரென்றால் அவருடைய ஆக்கங்களுக்கு நல்லது. அதற்கு முன்பாகவே ஆழம் அர்த்தம் என்று வளரும் கவிஞரை போட்டு அமுக்கி விடாதீர்கள் :-)

சென்ஷி said...

மீண்டும் பரபரப்பு......

தமிழ்மணத்தில் மீண்டும் அய்யனார்..

பரபரப்பு உடனடி பதிவுகளை காண தமிழச்சி பதிவுக்கு போங்க...

என்னாது.. லிங்க் கொடுக்கணுமா. டேய் எவண்டா அது தமிழச்சி பதிவு லிங்க டிஃபால்ட்டா வச்சில்லாம இருக்கறது....!

கொழுவி said...

டேய் எவண்டா அது தமிழச்சி பதிவு லிங்க டிஃபால்ட்டா வச்சில்லாம இருக்கறது....!//

இந்த தலைப்பில அங்கே ஏதாவது பதிவு வந்தாலும் வரும். நான் இப்பவே படிக்கத் தயாராகிட்டேன்......

சென்ஷி said...

//கொழுவி said...
டேய் எவண்டா அது தமிழச்சி பதிவு லிங்க டிஃபால்ட்டா வச்சில்லாம இருக்கறது....!//

இந்த தலைப்பில அங்கே ஏதாவது பதிவு வந்தாலும் வரும். நான் இப்பவே படிக்கத் தயாராகிட்டேன்......
//

பதிவு தலைப்ப பேடண்ட் வாங்கி வச்சிருக்கோம். இருந்தாலும் முன்னெச்சரிக்கையா பதிவும் போட்டிருக்கோம் :))

http://senshe-kathalan.blogspot.com/2008/03/blog-post_14.html

Anonymous said...

////இன்னிக்கான பெரிய காமெடிய இங்கே தமிழச்சி பண்ணிருக்காங்க

http://thamizachi.blogspot.com/2008/03/blog-post_2255.html

நீங்க எழுதுனத செல்லா உங்களுக்கு போட்ட நச் ஷொட்டுன்னு டைட்டிலோட போட்டிருக்க. கொடுமை./////

யோவ் அனானி

அதுக்கும் கீழே பாருயா லீங்க் இருப்பது தெரியல..

வால்பையன் said...

//அய்யனார்,
நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இந்தக் காலாவதியான எழுத்து நடையைக் கைவிட வேண்டியது தான்..இந்த நடைக்கு இங்கு அவசியமே இல்லை..தமிழில் தொடர்ந்து இயங்கும் படைப்பாளிகளின் நடையே இதை விட எளிமையாக உள்ளது..இது போன்ற எழுத்து போலித்தனமாகவும், சொல்ல வரும் கருத்தின் வீரியத்தை குறைப்பதாகவும் உள்ளது..//

அய்யனார் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் இருந்தாலும் நான் என் கருத்தை சொல்கிறேன்.
இன்று 1330 குரலையும் உங்களால் தமிழ் உரைநடை உடன் இல்லாமல் அர்த்தம் சொல்ல முடியுமா. அதே போல் அந்த காலத்தில் எழுதிய எத்தனையோ புதினங்கள் நேரடியாக அர்த்த படுத்த முடியவில்லை, இன்று தமிழையே ஆசிரியர் வைத்து தான் நாம் படித்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் அன்று வாழ்ந்தவர்களுக்கு அது சாதாரண தமிழ் தான். இன்று நாம் பேசுவது போல். நாளை மாறும் இம்மாதிரியான நவீனத்துவ எழுத்துக்கள் எளினபடும்.
அப்பொழுது நீங்கள் சொல்லும் படைப்பாளிகளின் எளிமையான நடை சலிப்படைய வைக்கும்

வால்பையன்

Anonymous said...

அய்யனார் அவர்களே
நீங்கள் சொல்ல வந்த கருத்து மிக்க சரியே

* பார்பனானியம் என்ற சொல்லே சாதியை வைத்தே சொல்லபடுகிறது.. சாதியை விமர்சித்து பல பதிவுகள் போடும் சுகுணா திவாகர்.. தன் சாதி பெயரை ஒருவர் சொல்லி விட்டான் என்றவுடன் அழுத அவர் இன்று பல பேரை சாதி வைத்து சொல்வதும் சாதி அறிவடிகள் என்று சொல்வதும் நியாயமா?

* தமிழச்சி தொடர்பாக
அவரிடம் எந்தவித சொந்த கருத்தும் இல்லை.கார்திகை மார்கழி மாதங்களல் தமிழ்நாட்டின் தெரு நாய்கள் ஒரு வித உணர்சியோடு ஓலம் இடும். அதை நாம் என்றாவது சட்டை செய்து இருக்கிறோமா?அதை போலத்தான் இவரும் இவரின் அணியும். நல்ல எழுத்தின் சுவை தெரியாமல் சிறுவர்கள் பல்பம் கோவக்காய திருடி சிலேட்டில் அழித்து எழுதும் விதமாய் செயல்படும் இவர்களை விமர்ச்சிது எழுதுவது வீண் வேலை

கடைசியாக அதிகார மையம் மாறி கொண்டே போவும் எதுவும்நிலை இல்லாத இவுலகில் இவரளை சட்டை செய்து பேசுவதே நேர விரயம் ஆகும்

Anonymous said...

ஒப்பு நோக்குக:

உன் கவிதையை நீ எழுது

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.

-சுந்தர ராமசாமி

நீ ஏன் இந்த மொழியில் எழுதுகிறாய்? ஏன் சகபயணி என உன் பக்கத்தில் சிலரை வைத்திருக்கிறாய்?நீ ஏன் விளிம்பு நிலை மொழியை எழுதக்கூடாது?உன்னுடைய உள்மன விகாரம் தெரிந்துவிட்டது என புலம்பும் சக நண்பர்களுக்கு விளக்கம் சொல்ல சலிப்பாய் இருக்கிறது..இருப்பினும்

வேறு வேலை வெட்டி எதுவும் இல்லாததாலும் சுவாரஸ்யமான விசயங்களை செய்ய எதுவும் இல்லாததினாலும் மிகுந்த வார்த்தைகளை இங்கே கொட்டிக்கொண்டிருக்கிறேன் அது சூழலுக்கேற்ப தன் வடிவங்களைப் பெற்றுக் கொள்கிறது மற்றபடி உங்களின் மதிப்பைப் பெறுவதிலோ அல்லது பிநவியாதி / பைத்தியம் / ரொம்ப நல்லவன் / கெட்டவன் / சரக்கில்லாதவன் என அவரவர் விருப்பத்திற்கேற்ப வடிவத்தைக் கொடுத்துக்கொண்டு தாவு தீராதீர்கள்..
-அய்யனார்

கருப்பு said...

பார்ப்பன ஜாதியில் பிறந்தது தவறில்லை. ஆனால் பிறந்த அந்த ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு என் ஜாதி உலகத்தில்ர்ர் உயர்ந்தது என்றும் மற்றவர்களை தாழ்ந்தவர் என்றும் சொல்லி மனு,வேதம் போன்ற புரட்டு புராணங்களை தூக்கிப் பிடித்து மற்றோரை தாழ்த்த நினைப்பது தவறாகும்.

இப்படி ப்ராமணீயத்தை விடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தீவிரவாத பார்ப்பனீயரிடத்தில் ஓசி போண்டாவும், சிக்கன் 65ம் வாங்கித் தின்று விட்டு,

"அவன் எனக்கு நல்ல நண்பன். அவனுக்கும் எனக்கும் கருத்தில் வேறுபாடு உண்டு. ஆனால் நல்ல நண்பன்தான். அவன் பார்ப்பணீயத்தில் பிறந்து இருந்தாலும் நல்ல நண்பர்தான்!"

என்று வாய்கூசாமல் சொல்பவர்களைக் கண்டால் ஓங்கி அறையலாம் போலத் தெரிகின்றது.

முதலில் சொல்லுங்கள். பார்ப்பனரும் பார்ப்பணீயமும் வேறு வேறா? பார்ப்பனீயத்தை பார்ப்பனர் தாங்காமல் திராவிடனா தாங்கிப் பிடிக்கின்றான்?

ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று சொல்லும் இவர்கள், பின்புலத்தில் ஜாதிவெறியொடு சுற்றிக் கொண்டிருப்பதை தகுந்த ஆதாரத்தோடு எடுத்துச் சொன்னால் கெட்டவர்கள் நாம்!

தலித்துகளுக்கு ஆதரவாகப் பேசுவது போல் பாசாங்கு செய்தாலும் உண்மையில் மேல்குடியில் பிறந்த ஜந்துக்கள் இவர்கள். இவர்களின் மேல்மட்ட ஜாதிகள்தான் இன்று பார்ப்புகளுக்கு அடுத்த படியாக தலித்துகளை கொடுமைப்படுத்துகின்றன.

லக்கிலுக் said...

// கல்வெட்டு said...
இணைக்க மறந்த உரல் இணைப்பு...

// ஜாதிப்புத்தி என்கிற ஒன்றை ஒத்துக்கொண்டால் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு புத்தி இருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டி வரும். வளர்மதி ஜாதிப்புத்தி என்கிற ஒன்று இருப்பதாக நம்புகிறார் // என்று வருந்தும் சுகுணா அதே பதிவில் இப்படியும் சொல்கிறார் // பெயர்களைக் குறிப்பிடத் தொடங்கினால் அதுவே இன்னொரு பதிவாகி விடும் அல்லது தேவர் வீட்டுக் கல்யாணப்பத்திரிகை போல ஆகிவிடுமென்பதால்//

குஜாலக மேலும் படிக்க..... :-)))

லக்கிலுக்கின் டவுசர் - 'கிழியும் ஆனால் கிழியாது'.
http://suguna2896.blogspot.com/2007/09/blog-post_19.html
//

தோழர் கல்வெட்டு!

உங்களிடமிருந்து இந்த தட்டையான பின்னூட்டத்தை எதிர்பார்க்கவில்லை :-)

ஒரு சாதிமறுப்பாளன் ஜாதி பெயர் சொல்லாமல் சாதியை மறுப்பது சாத்தியமா? சாதி existing ஆக இருக்கும்வரை சாதி பெயர்களை சொல்லித்தானே சாதியமுறையை மறுக்கமுடியும்?

சாதியமறுப்பாளர்களுக்கு சாதிமுறையும், சாதி பெயர்களும், சாதீய பழக்க வழக்கங்களும் குறித்த எள்ளல் இருப்பது இயல்பானது தான்.

சுகுணாவின் டவுசர் அவுக்க ஆயிரம் காரணங்கள் இருக்கும்போது (அவரது பதிவிலேயே தேடிப்பார்த்தால் கிடைக்கும்), நீங்கள் சொன்ன காரணம் சப்பையாக இருக்கிறது.

லக்கிலுக் said...

//He is young, and once he gets the LOOK of a girl, his trouser will not do the "Boyz" act of coming down whenever a female blogger gives him a space and chance for psychopanting.//

பெயரிலி அண்ணை,

இந்த பொண்ணுங்க மேட்டரு எல்லாம் உங்க வயசுக்கும், பர்சனாலிட்டிக்கும் வேணும்னா எட்டாக்கனியாகவோ, அதிசயமாகவோ இருக்கலாம்.

நாங்கள்லாம் யங் பிளட்டு. 420 பீடா போடறமாதிரி சைக்கிள் கேப்புலே அசால்ட்டா ஒரு ஃபிகரை மடக்கி ஜூட்டு விட்டுட்டு போய்க்கினே இருப்போம்.

உண்மைய சொல்லணும்னா ஃபிகருங்க இப்பவே சலிச்சிடிச்சி :-(

கல்வெட்டு said...

லக்கி,
வளர்மதி - ஜாதிப்புத்தி என்று சுகுணாவை விமர்சித்ததும் (ஜாதிக்கு ஒரு புத்தி) ,சுகுணா - தேவர் வீட்டு கல்யாணப் பத்திரிக்கை என்று சொன்னதும் (ஜாத்திக்கு ஒரு வழக்கம்) ஒன்றா?

நிச்சயம் அனைவரும் ஏதோ ஒரு சமயத்தில் பிறப்பு சார்ந்த முன்முடிவுகளுடன் , பிறர் மீது ஒரு விமர்சனம் வைக்கிறோம். வெளியில் சொல்லாவிட்டாலும் , நம் மனதில் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம் எழுத்து அடங்கும். சுகுணாவும் , வளர்மதியும் அதை பதிவின் வழியாக சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டுமே தவறு அல்லது உங்கள் கருத்துப்படி............ // சாதியமறுப்பாளர்களுக்கு சாதிமுறையும், சாதி பெயர்களும், சாதீய பழக்க வழக்கங்களும் குறித்த எள்ளல் இருப்பது இயல்பானது தான்.// .........என்றால் இரண்டுமே சரி.

***

சுகுணாவையோ அல்லது யாரையுமோ குற்றம் சொல்லவில்லை. அவர் கட்டுரையில் உள்ள முரணைச் சொன்னேன்.

Featured Post

test

 test