Tuesday, April 28, 2009

கிம் கி டுக் கின் The Isle : நீர் மோகினி



The Isle (2000)




இத் திரைப்படத்தின் கடைசிக் காட்சி இப்படி இருக்கும்

நதியிலிருந்து ஒருவன் வெளிப்படுவான்.அடர்த்தியாய் உயரமாய் வளர்ந்திருக்கும் பசும் புற்களினுள் நுழைந்து காணாமல் போவான்.நதியும்,பசும்புற்களும் அவனுமாய் அவளின் யோனிக்குள் உள்ளடங்கி இருப்பதாய் காட்சி அவளின் உடலில் சுருங்கும். நீரில் மூழ்கியிருக்கும் அவளது வெற்றுடலின் யோனிக்குள் இன்னொரு நதியும்,நெடிதுயர்ந்த பசும்புற்களும்,அவளின் காதலனும் பத்திரமாய் இருப்பதாக இந்த திரைப்படம் முடியும்.புனைவுகள் தொடும் உயர் எல்லைகள் பார்வையாளனுக்கு / வாசகனுக்கு பெரும் கிளர்வுகளைத் தருவதாய் இருக்கின்றன.திரையில் இப்புனைவின் உச்சம் வந்து போவது இரண்டு நிமிடத்திற்கும் வெகு குறைவானதே.ஆனால் அந்தக் காட்சி ஏற்படுத்திய தாக்கம் அல்லது ஆச்சர்யம் இன்னமும் நீடித்திருக்கிறது.ஒரு திரைப்படத்தை ஒரே காட்சியின் மூலம் இன்னொரு தளத்திற்கு நகர்த்துவது என்பது அசாத்தியமானது.



கொரிய இயக்குனரான கிம்கிம்கிடுக்கின் திரைப்படங்கள் பெரும்பாலும் கனவுத் தன்மையை ஒட்டியவை.தியானத்திற்கு நிகரானவை.இவரது திரைப்படங்களின் ஒவ்வொரு காட்சியும் புதிர்,தியானம்,அமைதி மூன்றும் கலந்த கலவையை கண்முன் கொண்டுவரும்.இயற்கையை அதன் அழகோடும்,கம்பீரத்தோடும்,சாந்தத்தோடும் இவரால் திரையில் கொண்டு வர முடிகிறது. Spring Summer fall Winter and spring திரைப்படம் இயற்கையை அதன் தூரிகை கொண்டே திரையில் வரைந்த உணர்வைத்தான் தந்தது.இவரது இன்னொரு திரைப்படமான 3 iron இன்னொரு உச்சத்தை தொட்டிருக்கும்.காதல்,மனிதம்,வினோதம் இதனோடு myth ஐயும் வெகு ஆழமாக இவரால் திரையில் கலக்க முடிகிறது.

The isle (தீவு) என்கிற இந்தத் திரைப்படம் உலகின் பார்க்கவே முடியாத குரூரமான முதல் பத்து படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது.இந்தப் பட்டியல்கள் மீதெல்லாம் எனக்கு பெரும்பாலும் நம்பிக்கை இருப்பதில்லை.சில காட்சிகள் பார்க்க கடுமையாய் இருந்தாலும் என்னால் அதை குரூரமாகவெல்லாம் அணுகமுடியவில்லை.ஒரு காட்சியில் மீன் பிடிக்க உதவும் கொக்கிகளை hee-jin னின் காதலன் முழுங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பான்.அவள் ஒரு கொறடாவைக் கொண்டு அவன் தொண்டையினுள் சிக்கி இருக்கும் கொக்கிகளை வெளியில் எடுப்பாள்.இன்னொரு காட்சியில் அவன் பிரிவினை தாங்க முடியாது மீன் கொக்கிகளை அவள் தன் யோனிக்குள் செலுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயலுவள் அதை அவளின் காதலன் கொறடாவைக் கொண்டு எடுப்பான்.படம் முழுவதும் நீரால் நிறைந்திருப்பதால்,அவள் எப்போது வேண்டுமானாலும் நீரிலிருந்து தோன்றுவாள் என்றுமாய் படம் நகர்வதால் நான் இருவரையும் மீனாகக் கருதிக் கொண்டேன்.மீனின் உடலுக்குள் சிக்கிய கொக்கியை விடுவிப்பது குரூரமாகுமா என்ன?

கிம் கி டுக்கின் பிரதான பாத்திரங்கள் பெரும்பாலும் பேசுவதில்லை.(3 iron இல் இருவருமே பேசுவதில்லை)இத்திரைப்படத்தின் கதாநாயகியும் பேசுவதில்லை.உணர்வுகளை உடல்/செயல் மூலமாக கடத்துவதையே கிம் கி டுக் விரும்புவார் போலும்.


நமது சூழலில் மோகினி,யட்சி,நீலி என பல்வேறு பெயர்களில் காடுகளில் எப்போதும் வசிக்கும் பெண்ணைப் பற்றியக் கதைகள் உலவுவது உண்டு.கிட்டத் தட்ட அதே குணாதிசியங்களுடனான பெண்தான் இக்கதையின் நாயகி.நமது சூழல் வனமென்றால் இங்கே நீர்.ஏரியில் மிதக்கும் வீடுகளைக் கொண்ட ஒரு சுற்றுலா இடத்தில் இக்கதை நிகழ்கிறது.படகில் அவ்வீடுகளுக்கு மனிதர்களையும்,உணவுகளையும்,இன்பத்தையும் கொண்டு செல்வது இப்பெண்ணின் தினசரியாய் இருக்கிறது.மனைவியைக் கொன்றுவிட்டு அங்கே பதுங்கி இருக்கும் hyun-shik ன் மேல் இவள் காதல் வயப்படுகிறாள்.இருவருக்கும் இடையூறுகளாக குறுக்கிடும் காவலர்கள்,பாலியல் தொழிலாளி,மற்றும் அவளின் முதலாளி போன்றவர்களை இருவரும் கடந்து வருகிறார்கள்.இருப்பினும் விடாது துரத்தும் பிரச்சினைகளிலிருந்து தப்பித்து தீவில் தொலைந்து போகிறார்கள் அல்லது தீவாய் மாறுகிறார்கள்.அவனையும் அத் தீவினையும் தனது யோனிக்குள் மறைத்துக் கொண்டு அவள் நதியினில் மிதந்து கொண்டிருக்கிறாள்.


கிழக்காசிய படங்களின் மீது மேற்கத்தியர்களுக்கு எப்போதும் ஒரு இளக்காரமான பார்வை இருக்கிறது.கிம் கி டுக் கின் திரைப்படங்கள் பிராணி வதையை பிரதானப்படுத்துகிறது என்கிற ரீதியிலான அமெரிக்கர்களின் விமர்சனங்கள் மொன்னை வாதத்தின் உச்சம்.உலகின் எல்லாப் பாகத்திலிருந்தும் எடுக்கப்படும் திரைப்படங்கள் அமெரிக்காவினையே அடியொற்றி இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் அளவுகோல்களாக இருக்கக் கூடும்.கொரியர்கள் மாமிசங்களை பச்சையாக உண்பது வழக்கம்.அவர்களின் திரைப்படங்களில் அவர்களின் உணவுப் பழக்கத்தைக் காண்பிப்பது பிராணி வதையாகுமா? Imdb யில் இன்னொரு பிரகஸ்பதி இத்திரைப்படக் கதாநாயகி வாய்பேசமுடியதவள் என்பதாய் ஒரு விமரிசனத்தை எழுதியிருக்கிறார்.நமது சாரு imdb மற்றும் wikipedia வில் தரப்பட்ட தப்பும் தவறுமான தகவல்களை அப்படியே தனது விமர்சனமாக்கி இருக்கிறார்.

ஒரு படைப்பை கண்டடைய சிறந்த விமர்சகன் அவசியம்தானென்றாலும் உன்னதங்களை எந்தச் சிறந்த விமர்சகனாலும் இருட்டடிப்பு செய்துவிட முடியாது என்பதற்கு கொரியத் திரைப்படங்கள் சிறந்த உதாரணம்.சமீப காலமாய் கொரியத் திரைப்படங்களின் மீதும் கிழக்காசியத் திரைப்படங்களின் மீதும் உலகின் கவனம் திரும்புவதையும் நல்ல மாற்றாக நாம் அணுகலாம்.

24 comments:

சென்ஷி said...

//சமீப காலமாய் கொரியத் திரைப்படங்களின் மீதும் கிழக்காசியத் திரைப்படங்களின் மீதும் உலகின் கவனம் திரும்புவதையும் நல்ல மாற்றாக நாம் அணுகலாம்.//

ஆமாம்ண்ணே... இந்தியாவுல இருக்குற தமிழன் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கூட ஆஸ்கார் கிடைச்சுடுச்சுண்ணே!

Cable சங்கர் said...

அருமையான விமர்சனம். அய்யனாரே..

வால்பையன் said...

சமீபத்தில் தான் அவரின் the bow படம் பார்த்தேன்!
ஒருவித அமானுஷ்ய தன்மை அவரது படத்தில் நிறைந்திருக்கிறது!

தீபன் said...

விமர்சனம் நல்லா இருக்கு,
எங்க இருந்து இந்த படத்த எடுக்கிறது...
any download link...

anujanya said...

படம் பார்ப்பேனா என்று தெரியவில்லை. நீங்க எழுதியது ரொம்ப நல்லா இருக்கு.

நீங்கள் அவர்களை மீன்களைப் பார்த்தது ஒரு குறியீடு. இன்னொரு தளத்தில் நாம் அனைவருமே ஒரு விதத்தில் மீன்கள் தாமோ? யாரோ விரிக்கும் வலையிலும், தூண்டிலிலும் சிக்கி, தொங்குகிறோமா!

மோகினி, யட்சி, நீலி என்று எழுத ஆரம்பித்ததும், சரி ஜெமோவும் வருவார்னு பார்த்தேன். நன்றி! இந்த முறை சாரு போலும் :)

அனுஜன்யா

குசும்பன் said...

//.நதியும்,பசும்புற்களும் அவனுமாய் அவளின் யோனிக்குள் உள்ளடங்கி இருப்பதாய் காட்சி அவளின் உடலில் சுருங்கும்.//

புல்லுமேய போன ஆட்டுக்குட்டி????எங்கன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க அய்ஸ்!

MSK / Saravana said...

பகிர்வுக்கு நன்றி தல. கண்டிப்பா பார்க்கிறேன்.

MSK / Saravana said...

நான் பார்த்த ஒரு கொரிய திரைபடத்தை பற்றி எழுதி இருக்கிறேன். நேரமிருந்தால் இத்திரைப்படத்தை பாருங்கள்.

http://msk-cinema.blogspot.com/2009/04/old-boy-2003-korean-incest-is-sintaboo.html

KARTHIK said...

// மீனின் உடலுக்குள் சிக்கிய கொக்கியை விடுவிப்பது குரூரமாகுமா என்ன?//

பெரும்பாலும் இவரோட மத்த படங்கள் பாத்திருக்கேன் ஆனா இந்தப்பட்ம் மட்டும் இன்னும் பாக்கலை காரணம் இந்த கொடுமையான காட்சிகள் தான்.ஆனா உங்க விமர்சனம் படம் பாக்கும் ஆவல தூண்டுதுங்க.

இவரோட டைம் பாருங்க அப்படியே வித்தியாசமா எடுத்திருப்பாரு.இந்தப்படத்துல மட்டும் எல்லாரும் தேவைக்கு அதிகமாவே பேசுவாங்க.இவர் படம் தானான்னு ஆச்சர்யம் வரும் அளவுக்கு இருக்கு.

குப்பன்.யாஹூ said...

Thanks for sharing. Nice review.
I am wodnering how u r able to get these films cd's in middle east arab countries.

Unknown said...

Spring, Summer Fall Winter and Spring, Time and 3Iron ஆகிய படங்களை பார்த்திருக்கிறேன் அய்யனார். எனக்கு மூன்றுமே மிகப் பிடித்த படங்கள். Isle ‏இன்னும் பார்க்கவில்லை. டிவிடி கேட்ட போது உன்னால் பார்க்க முடியாது என்று நண்பர்கள் கூறினார்கள். சாரு விமர்சனம் வாசித்ததும் அவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று புரிகிறது. மீண்டும் அய்யனாரின் விமர்சனம் வாசிக்க குழப்பம்தான். ஆனால் காட்சிரீதியான அதிர்ச்சிகளை திரையில் பார்க்கும் போது மனம் பதறும் எனக்கு. மகாநதியை எத்தனை முறை பார்த்தாலும் என் கண்கள் கலங்கிவிடும். அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒரு உணர்வு மெலெழும்பி மனதை பிசையும். அன்றிரவு தூக்கம் அவ்வள்வுதான். அஞ்சலியும் அத்தகைய ஒரு படம். ‘புதுப்பேட்டை’ ‘வெயில்’ போன்ற படங்களில் கத்தியும் ரத்தமும் என்னை வெகுவாய் பாதித்தது. ஆனால் அதையும் மீறி அதை நான் பார்க்கவே செய்கிறேன். எனக்கு ஒரு கெட்ட பழக்கம் எல்லாவற்றையும் அதீதமாக கற்பனை செய்து உள்ளூர சந்தோஷமாகவோ துக்கமாகவோ இருப்பேன். அந்த உணர்வலைகள்தான் கவிதையையோ கதையோ எழுதத் தூண்டும் காரணியாக இருக்கிறது. மிதமாக இருந்தால் ஒரு போதும் எழுதமுடிவதில்லை. மிகப் பெரிய சோம்பேறித்தனம் வந்து தின்றுவிடும். ஐல் பற்றிய எழுதிய அய்ஸுக்கு நன்றி. உன்னைத் தவிர எல்லாரும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டார்கள். ISD போட்டு திட்டுகிறேன்...வெயிட்...

ரௌத்ரன் said...

பக்கா விமர்சனம் அய்யனார்.சமீபத்தில் தான் கதிர் இப்படத்தை தந்தார்.இரண்டே இரண்டு காட்சிகளை தவிர கண்ணெடுக்க முடியாது இருந்தது... வழக்கம் போல கிளைமாக்ஸ் கவிதையாக இருந்தது ;)

சாரு குறிப்பிடும் படங்களை அவசியம் தேடி எடுப்பதுண்டு.படம் குறித்த விமரிசனங்களை கண்டு கொள்வதில்லை.எஸ்.ராவும் அப்படியே.. உலக சினிமா என்று ஒன்று இருப்பதையே சாருவை வாசித்து தான் அறிந்து கொண்டேன்.ஆதலால் :)

http://www.sensesofcinema.com/

Ayyanar Viswanath said...

ஆமாம் சென்ஷி..

நன்றி சங்கர்

நான் இன்னும் பாக்கல அருண்

ஷான் லிங்க் என்னிடம் இல்லை நண்பர்களிடம் வாங்கி அனுப்புகிறேன்

அனுஜன்யா என் நோக்கம் ஜெமோவோ சாருவோ அல்ல..வேறொரு கோணம்தாம் :)

குசும்பர்ர்ர்ர்ர்...

Ayyanar Viswanath said...

நன்றி சரவணக்குமார்..old boy பார்த்ததுதான் பகிர்வுக்கு நன்றி..

கார்த்திக் ஒரு படம் விடுரதில்ல போல :)

குப்பன் பெரும்பாலும் இந்தியாவில இருந்தே வாங்கிட்டு வந்துடுவேன் இல்லனா நெட்ல டவுண்லோட் பண்ணிதர எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கு..இந்த படத்தை நான் ஆதவன் கொடுத்தார்..

ரெளத்ரன்
சாருவோட அந்த விமர்சனம் கொஞ்சம் ஏமாற்றமாதான் இருந்தது..எனக்கும் சாரு வோட அறிமுகங்கள் நிறைய உதவி இருக்கிறதுங்கிறதால பிரதானப்படுத்த விரும்பல..

Ayyanar Viswanath said...

உமாசக்தி,
பிறந்த நாள் வாழ்த்தும் நன்றியும் :)

வால்பையன் said...

//நான் இன்னும் பாக்கல அருண் //

தல இணையத்தை பொறுத்தவரை வால் என்று கூப்பிடுவதையே மகிழ்வாகவும், அடையாளமாகுவும் கருதுகிறேன்!

time கூட பார்த்து விட்டேன்!
கலக்கியிருக்கார் உணர்வு(உணர்ச்சியல்ல) விளையாட்டில்.

☀நான் ஆதவன்☀ said...

நீங்கள் பார்த்தது முற்றிலும் வித்தியாசமான கோணம் அய்யனார். என்னால் இதைப் பார்த்த போது அருவெருப்பு எதுவும் தோன்றவில்லையென்றாலும் எந்த வித ஈர்ப்பும் தோன்றவில்லை :(

கோபிநாத் said...

ரைட்டு...நம்ம கையில தான் இருக்கு பார்த்துடுறேன் ;)

கோபிநாத் said...

\\உன்னைத் தவிர எல்லாரும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டார்கள். ISD போட்டு திட்டுகிறேன்...வெயிட்...
\\

ஆகா..எம்புட்டு பாசக்காரங்க நீங்க ;)

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உமாஷக்தி ;)

Anonymous said...

கிம்மின் பெரும்பாலான படங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் ஆழமானவை. தமிழ் சினிமாவின் சங்கர் வகையராக்களுக்கு இது தான் சினிமா என்று ஒரு வகுப்பெடுக்கலாம். இவரது படங்கள் எல்லாவற்றையும் நம்மூர் பப் விரோதிகள், போலி ஒழுக்கவாதிகளுக்கு கண்ணில் கிளிப் மாட்டி, கட்டி வைத்து பார்க்க வைக்க வேண்டும், பிறகு மக்களே உலகம் எங்க போய்கிட்டு இருக்கு நீங்க ஏண்டா பின்னாடி போரீங்க,னு கேட்கணும்.
-மயில் ராவணன்.

Ayyanar Viswanath said...

சரிங்க வால் :)

நான் ஆதவன்,கோபி மற்றும் மயில் ராவணன் பகிர்வுகளுக்கு நன்றி

தமிழன்-கறுப்பி... said...

அழகான விமர்சனம் அய்யனார்
பகிர்வுக்கு நன்றி..!

நட்புடன் ஜமால் said...

3 Iron மட்டும் பார்த்து இருக்கிறேன்

அதிலிருந்தே இன்னும் வெளியேறி வரவில்லை ...

தாங்கள் சொல்லியிருக்கும் படம் அவசியம் பார்க்க வேண்டும் ...

மீனாக நீங்கள் கற்பனை செய்து கொண்டீர்கள் என்று சொல்லியிருப்பது மிக அழகாக உள்ளது, நான் இந்த படத்தை பார்க்கையில் உங்கள் விமர்சண பாதிப்பு நிச்சியம் இருக்கும் ...

நன்றி.

Anonymous said...

THE ISLE.
We know who you work with.
We know who you are.
You are DDEN 93 with ROOTY 009.
That is to say you are with CONYANDO YAN.
And you are the DSDEN of DASSAULT- DISNEY.
THE ISLE.
Like HYDRA.
Like LOUISIANA - BAZZELECO.
" BLOPE- FLOPME- FORRE".
It's all the same.
THE ISLE is for PEDOPHILES and ZETAS WASHINGTON.
And they got it all from " THENDO".
Know why?
RUSH- RUNTAR.
He gave away READOCA.
PEDOPHILES in the SHYPE of SCHAR.
His name?
" DWASS".

Featured Post

test

 test