Thursday, August 27, 2009

சில திரைப்படக் குறிப்புகள்

கடந்த ஒரு மாதத்தில் நிறைய திரைப்படங்களைப் பார்க்க முடிந்தது. டோரண்ட் உதவியுடன் பல வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்த சில முக்கியமான படங்களையும் பார்த்தேன். கிம் கி டுக் ன் நான்கு படங்களை ஒரே நாளில் பார்த்தேன்.The bow,The coast guard,Breath ,மற்றும் dream. நான்குமே வெவ்வேறு உணர்வுகளை தந்துவிட்டுப் போனது. இதுவரையில் பார்த்த கிம் கி டுக் ன் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமாக The isle ஐ சொல்லலாம். The bow திரைப்படத்தையும் இதன் தொடர்ச்சியாகத்தான் என்னால் அணுக முடிகிறது. சாத்தியம் சாத்தியமற்றவை என்கிற இரு வேறு கூறுகளை கிம் கி டுக் சுலபமாய் கடந்து போகிறார். மாயா யதார்த்த அல்லது முற்றிலுமான மாயத் தன்மை கொண்ட நிகழ்வுகளை வெகு சுலபமாய் திரைப்படங்களில் நிகழ்த்திக் காட்டுகிறார்.அதீத fantasy லேசான அலுப்பை வரவழைக்கிறதென்றாலும் மயக்கத்தையும் கிளர்ச்சியையும் இவரது படங்கள் தரத் தவறுவதில்லை.

The bow திரைப்படத்தின் களமும் மிகப் பரந்த நீர்வெளியாக இருக்கிறது. இதில் இசை இன்னொரு முக்கிய அங்கம். மயக்கம் தரக்கூடிய ஒரு இசை படம் முழுவதும் கசிந்து வேறொரு மனநிலைக்கு பார்வையாளனை நகர்த்துகிறது. நீரின் மீது ஊஞ்சலாடும் பெண், அவளின் களங்கமில்லா இளமை என திரைப்படம் நம்மை நிலத்திலிருந்து நீரினுக்கு அழைத்துப் போகிறது. இத்திரைப்படத்தில் கடைசிக் காட்சியை பார்வையாளன் தத்தம் கற்பனைக்கு ஏற்ப புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சிறு வயதிலிருந்து ஒரு பெண்ணை வளர்த்து அவளின் பதினேழாவது வயதில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் அறுபது வயது ஆண், சிறு இடைஞ்சலுக்குப் பிறகு அவளைப் பாரம்பரிய முறையோடு தனிப்படகில் திருமணம் செய்து கொள்கிறார். சம்பிரதாய உணவு முடிந்ததும் நீரில் பாய்கிறார்.பின்பு அரூப வடிவில் அவளுடன் கலவி காணாமல் போகிறார். கால்களுக்கிடையில் இரத்தம் இழந்து மீளும் அப்பெண்ணை அவளின் காதலன் எதிர்கொள்வதோடு படம் முடிகிறது. இந்த அறுபது வயது நாயகன் உருவமற்ற தன்மையை அடையவே ஒரு பெண்ணை பதினேழு வயது வரை வளர்த்து மணந்து கொள்கிறான். பின் உருவமற்ற வடிவம் கொண்டு அவளைப் புணர்ந்து பிரபஞ்சத்தோடு கலப்பதாக நான் புரிந்து கொண்டேன். தேவதைக் கதைகளில் வரும் புனைவுச் சாத்தியமாகத்தான் இத்திரைப்படத்தை நான் புரிந்து கொண்டேன்.

The coast guard கரையோரக் காவல்படை வீரன் ஒருவன் வாழ்வில் நிகழும் சம்பவங்களை யதார்த்தமாகவும் லேசான புதிர்தன்மையினோடும் பதிவு செய்திருக்கிறது. காவல் அதிகாரிகள் தங்களைக் காத்துக் கொள்ள அப்பாவிகளின் மீது நிகழ்த்தும் வன்முறைகளை மிக குரூரத்தோடு முன் வைக்கிறது. கண்ணெதிரில் காதலன் உடல் சிதறிப் போனதைக் கண்டு மனம் பிறழும் நாயகி, அவசரப்பட்டுக் கொன்று விட்டோமே என மன உளைச்சலுக்கு உள்ளாகும் காவல் வீரன்,மனம் பிறழ்ந்த பெண்ணை பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரிகள் என பல்வேறு பாத்திரங்கள் முன் வைப்பது சக மனிதன் மீது நிகழ்த்தும் வன்முறைகளை மட்டுமே.

Breath திரைப்படம் அடிக்கடி தற்கொலைக்கு முயலும் சிறைக் கைதி ஒருவனைப் பற்றிப் பேசுகிறது. அவனை வந்து சந்திக்கும் ஒரு பெண் (yeon), அவனை மகிழ்விக்க அவள் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே இதற்காக இது என்கிற காரணங்கள் இல்லாமலே நிகழ்கின்றன. பின்பு அப்பெண் தனக்கு துரோகமிழைக்கும் கணவனைப் பழிவாங்கும் பொருட்டே இவனைச் சந்திக்கிறாளென சொல்லப்படுகிறது. கிம் கி டுக் கின் மிக வித்தியாசமான படமாக இதைச் சொல்லலாம். சந்தேகம்,துரோகம்,ஈகோ என உலகின் எல்லா பாகத்து கணவன் மனைவி உறவுகளுக்கிருக்கும் பிரச்சினைகளையும் இப்படம் தொட்டிருக்கிறது.ஒரே விநோதம் அல்லது புதிர்தன்மை சிறைக் கைதியை மிக மகிழ்வாக வைத்திருக்கும் அப்பெண்ணின் நடவடிக்கைகள்தாம்.அவனை தன் பழைய காதலனாக நினைத்துக் கொள்வதும், அவன் வாழும் அச்சிறை சூழலுக்கு வசந்தகால, பனிக்கால உள்கட்ட அமைப்புகளை செய்து கொடுப்பதுமாய் அவளது நாட்கள் நகர்கின்றன. அவனும் மெல்ல அப்பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். மேலும் அக் கைதியின் உடனிருக்கும் சக சிறைவாசி ஒருவனுக்கு இவனின் காதல் பிடிக்காமல் போகிறது. சிறைக் காட்சிகளில் இவரது வழக்கமான குரூரம் தெறிக்கிறது.

இதுவரை நான் பார்த்திருந்த இவரது படங்களில் சிறைக் காட்சிகள் பொது அம்சமாக இருக்கின்றன. இவரின் பெரும்பாலான பிரதான பாத்திரங்கள் சிறையிலிருக்கிறார்கள். அல்லது சிறையிலிருந்து தப்பித்தவர்களாக இருக்கின்றனர். சிறை கிம்கிடுக்கை ஏதோ ஒரு வகையில் பாதித்திருக்கலாம். எட்டுத் திரைப்படங்களுக்குப் பிறகு கிம் கி டுக் எனக்கு அலுத்துப் போனார். அவரின் மிகச் சிறந்த படம் என எவராவது பரிந்துரைத்தால் மீதிப் படங்களைப் பார்த்துக் கொள்ளலாம் அதுவரை குட் பை கிம் கி டுக் என இரான் சினிமா பக்கம் ஒதுங்கியாயிற்று.

இரானிய திரைப்படங்கள் எளிமையானவை, மிகுந்த உணர்வுப் பூர்வமானவை. பார்வையாளனை மிகச் சுலபமாய் நெகிழ்வுத் தன்மைக்குத் தள்ளிவிடுபவை. மஜித் மஜிதி, அப்பாஸ் கிராஸ்தமி, மக்பல்ஃப் , ஜாபர் போன்றோர் தொடர்ச்சியாய் தமது சிறப்பான பங்களிப்பை இரானிய சினிமாக்களில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். Dariush_Mehrjui, யின் இயக்கத்தில் 1969 இல் வெளிவந்த The cow என்கிற கறுப்பு வெள்ளைத் திரைப்படம் இரானிய சினிமாவில் மிக முக்கியமானது. ஒரு பசுவின் மீது மனிதனுக்கிருக்கும் காதலை, பெருமையை, அப்பசுவே தன்னுடைய உலகமாக நினைத்து வாழும் எளிமையான கிராமத்து மனிதனின் வாழ்வை, இப்படம் பேசுகிறது. கிராமத்து மனிதர்களிடமிருக்கும் , ஒற்றுமை, அன்பு, அறியாமை, உதவும் குணம், கோபம் என எல்லா உணர்வுகளையும் இத் திரைப்படம் துல்லியமாய் பார்வையாளனிடத்தில் சேர்க்கிறது. இத் திரைப்படம் வந்த காலகட்டம் மிகவும் வியப்பிற்குறியதாய் இருந்தது. கறுப்பு வெள்ளையில் இத்தனை துல்லியமாய், ஒரு உணர்வு ரீதியிலான படத்தை எப்படி உருவாக்க முடிந்தது என வியந்து கொண்டிருந்தேன். இது தவிர்த்து அப்பாஸின் taste of cherry யையும் the white balloon ஐயும் பார்க்க முடிந்தது.

ஈரான் ஈராக் கூட்டுத் தயாரிப்பில் வந்த Turtles can fly படத்தையும் சென்ற வார மதியத்தில் பார்த்தேன். ஈழநாதன் ஒருமுறை பின்னூட்டமொன்றில் இத்திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்டது நினைவில் வந்தது. அமரிக்க ஈராக் போர்தான் இத்திரைப்படத்தின் களம். போரில் அலைக்கழிக்கப்படும் சிறுவர்கள் / பதின்மர்களின் உலகத்தில் நிகழும் குரூரங்களை பதிவு செய்திருக்கும் படமிது. ஒரு சிறுமியின் தற்கொலையிலிருந்து துவங்கும் இப்படத்தைப் பார்த்து முடித்த பின்பு மிகுந்த அலைக்கழிப்பிற்குள்ளானேன். நிம்மதியின்மையும் கசப்புணர்வும் அந்த மாலையில் துவங்கி இரவு முழுவதும் தங்கியிருந்தது. இவளது மொழியில் சொல்லப் போனால் அன்று குடிப்பதற்கு அத்திரைப்படம் ஒரு காரணமாய் இருந்தது. ஆனால் இத்திரைபடம் ஒரு பக்க சார்பானது என்பதாய் விமர்கர்களால் விமர்சிக்கப் படுகிறது. சதாமின் வீழ்ச்சியைக் கொண்டாடுவதாகவும் அமெரிக்க அழித்தொழிப்பை ஆதரிப்பதாகவும் இருக்கிறது என்பதான கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் இத்திரைப்படம் பார்த்து முடித்ததும் புஷ்ஷின் முகத்தில் காறி உமிழத்தான் எனக்குத் தோன்றியது.

ஸ்டேன்லி குப்ரிக்கின் மொத்த படங்களில் Lolita மட்டும் பார்க்காமல் இருந்தது. விளாடிமிர் நபக்கோவ் எழுதி மிகவும் புகழ்பெற்ற லோலிட்டா நாவலை குப்ரிக் 1962 ல் திரைப்படமாக்கி இருப்பார். நாவலை ஏற்கனவே படித்திருந்ததால் திரையில் என்னால் ஏமாறவே முடிந்தது. நாவலாய் படிக்கும் போது இருந்த கிளர்ச்சியும், காமமும் படத்தில் முழுமையாய் என்னால் உணரமுடியவில்லை. ஸ்டேன்லி குப்ரிக்கின் படங்களில் இயல்பாய் இருக்கும் அதீதத்தை இதில் பார்க்கமுடியவில்லை. படு யோக்கியமாய் படமாக்கி இருந்த குப்ரிக்கின் மீது லேசான கோபமும் எழுந்தது.ஆனால் இத்திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் மிகச் சிறந்த மாற்றுப் படமாக இருந்திருக்கலாம்.

சென்ற வார வெள்ளிக்கிழமைக் காலையை அமரோஸ் பெர்ரோஸ் படம் அழகாக்கியது. தூங்கி எழுந்தவுடன் இத்திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன் இரண்டரை மணி நேரங்கள் ஓடும் இத்திரைப்படம் இன்னும் சிறிது நேரம் நீடிக்காதா என்ற ஏக்கத்தை வரவழைத்துவிட்டுப் போனது. மணியின் ஆயுத எழுத்து படத்திற்கான ’இன்ஸ்பிரேசன்’ இத்திரைப்படம்தான். கோலிவுட்காரர்களின் ’இன்ஸ்பிரேசன்’ ஸ்பானிஷ் மொழி வரை விரவியிருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சிதான். பாபேல்,21 கிராம்ஸ் படங்களை இயக்கிய Alejandro González Iñárritu வின் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த படமிது. மோட்டர் சைக்கிள் டைரீஸ் படத்தில் இளமைக் கால சேகுராவாக நடித்திருந்த Gael García Bernal இதில் ஆக்டோவியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரை விட el chivo கதாபாத்திரமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு சாலை விபத்திலிருந்து மூன்று கதைகளாக விரியும் இத் திரைப்பட யுக்தி வெகுவான எடிட்டிங் உழைப்பைக் கொண்டிருக்கிறது. நாய்ச் சண்டை காட்சிகளை படமாக்கி இருந்த விதமும் அழுக்கு மண்டிய ஒரு பொந்தில் பல நாய்களோடு வசிக்கும் el chivo கதாபாத்திரம் தந்த உணர்வும் புதுவிதமானது.இத் திரைப்படத்தைப் பற்றி விரிவாக பகிரும் எண்ணமிருப்பதால் இக்குறிப்புகளோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஆந்த்ரே தர்க்கோயெவ்ஸ்கியின் ஸ்டாக்கர், பாசோலினியின் அராபியன் நைட்ஸ், கீஸ்லோவெஸ்கியின் The Decalogue வரிசைகளில் கடைசி மூன்றையும் பார்த்து முடிக்க முடிந்தது அவை குறித்துப் பின்பு.

31 comments:

butterfly Surya said...

அருமையான குறிப்புகள்.

அனைத்தும் பார்க்க வேண்டிய படங்கள் தான். The Cow தவிர மற்றவையெல்லாம் பார்த்திருக்கிறேன்.

தங்கள் பதிவை படித்து கொண்டிருக்கும் போதே அனைத்தும் காட்சிகளாய் மனதில் ஒடுகின்றன.

கிம் கி டக் பற்றி சில குறிப்புகள்
http://butterflysurya.blogspot.com/search/label/Kim%20Ki-duk

பகிர்தலுக்கு நன்றி நண்பா...

வாழ்த்துகள்.

கலையரசன் said...

நல்லாயிருக்கு தலைவா..

ஒரு மாதமா பார்த்த படங்களை, ஓரே பதிவில் இறக்கி வைத்ததுபோல் உள்ளது! இரண்டாய் பிரித்து எழுதியிருக்கலாமோ? இருந்தாலும்.. படங்கள் பற்றி உங்களது 4 வரி விமர்சணம் என்னை வெகுவாய் கவர்ந்தது! அந்த படங்களை பற்றி விரிவாய் எழுதியிருந்தலும் இந்த அளவிற்கு வருமா என்பது சந்தேகமே..

டோரண்ட் உதவியுடன் படங்களை டவுன்லோட் செய்வது ஆபத்து. மேல்வேர் வைரஸ் கண்டிப்பாக உங்கள் சிஸ்டத்தில் இறங்கி, சிஸ்டத்தில் Speedடை குறைக்கும். அதனால் நீங்கள் ரேப்பிட் ஷேர் அக்கொளண்ட் வாங்குவது உத்தமம்.. 120 திர்கம்ஸ் வரும் 3 மாதத்திற்க்கு!!

ரௌத்ரன் said...

தொடர்ந்து வெகு அற்புதமான படங்களாக பார்த்து தள்ளியிருக்கிறீர்கள்.கிம்-கி-டுக் ன் மூன்று படங்கள் தவிர்த்து பிறவற்றை பார்த்திருக்கிறேன்...

ஒரே இயக்குனரின் படங்களை தொடர்ந்து பார்க்கும் போது அலுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான்.

turtles can fly ம் பார்த்திருக்கிறேன்.shell சிதறி கிடக்கும் பகுதி..அவற்றை சேகரிக்கும் சிறுவர்கள்.கைகளற்ற அந்த பாத்திரம்.எப்படியோ கட்டவிழ்த்து கொண்டு வெளியே உலவும் அந்த குழந்தை...நாட்டாமையாக வலம் வரும் அந்த ஆண்டெனா சிறுவன்...மலை உச்சியில் விழியெங்கும் துயரம் தேங்கி வெளியில் தன்னை விடுவித்து கொள்ளும் அந்த சிறுமி...ஊனமுற்ற அந்த சிறுவன் எல்லாம் மனசுக்குள் ஓடுகிறது அய்யனார்...இடைவெளியின்றி நானும் படங்கள் பார்த்தது நினைவு வருகிறது...

அம்ரோஸ் ஃபெரோஸ் ஒரு அற்புதமான மேஜிக்..கோலிவுட் காரர்கள் கொஞ்ச நஞ்சமா தழுவி இருக்கிறார்கள் ;)

பாசோலினி எல்லாம் இனிமேல் தான்...கைநிறைய படங்கள் இருந்தும் பார்க்க முடியாத சூழலில் இருக்குமெனக்கு பொறாமையை கிளப்புகிறது உங்கள் பதிவு :)

Venkatesh Kumaravel said...

உங்கள் பதிவு வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறது. என்னால் ஒரு நாளைக்கு ஒரு படத்திற்கு மேல் பார்க்க முடியாது. அதனாலேயே தொலைக்காட்சியில் விளம்பரக்களிம்புகளோடு பார்ப்பது. உலக சினிமா வேறு களம் என்பதாலும், அதன் அடர்த்தியாலும், அதே ரெஸ்ட்ரிக்ஷன் தான் நாளொன்றுக்கு ஒரு படம். இதில் க்யூப்ரிக் ரசிகன் நான், இன்னும் லோலிட்டா பார்க்கவில்லை. காவ் பல நாள் கிடப்பில் இருக்கிறது. கிம் கி டுக்கின் மீது பெரிய ஆர்வம் ஏற்படவில்லை.

அமோரஸ் பெர்ரோஸ் என்றதும் நினைவிற்கு வந்தது, நேற்று எழுதிய கதைக்கு அமோரஸ் பெர்ரோஸ் தான் இன்ஸ்பிரேஷன். http://bit.ly/g2MGK

நர்சிம் said...

நற் குறிப்புகளுக்கு நன்றி.

இளவட்டம் said...

உலக சினிமா அறிமுக படியில் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு சிறந்த குறிப்புகள்.
கிம் டு கிக்கின் மற்ற திரைப்பட அறிமுகத்திற்கும், இரானிய திரைப்பட குறிப்புகளுக்கும்
நன்றி

Anonymous said...

இது உங்கள் கருத்து.
அதை நான் மதிக்கிறேன்

ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

கோபிநாத் said...

\\டோரண்ட் உதவியுடன் படங்களை டவுன்லோட் செய்வது ஆபத்து. மேல்வேர் வைரஸ் கண்டிப்பாக உங்கள் சிஸ்டத்தில் இறங்கி, சிஸ்டத்தில் Speedடை குறைக்கும். அதனால் நீங்கள் ரேப்பிட் ஷேர் அக்கொளண்ட் வாங்குவது உத்தமம்.. 120 திர்கம்ஸ் வரும் 3 மாதத்திற்க்கு!!\\

என்ன தல இப்படி சொல்லிட்டிங்க...!! ;(

anujanya said...

ஒரு நாளில் மூன்று படங்கள் பார்த்தால்....எப்படி பிடிக்கும். இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

அப்புறம், ஒரு வழியாக 'தனிமையின் இசை'யில் கிடார் மீண்டும் வந்துவிட்டது. மனங்கவரும் பச்சையிலிருந்து குளுமையான நீலம். ஏன் சராவை ('சாரா' அல்ல) இந்தப் பாடு படுத்துகிறீர்கள்? அல்லது அவனை எனக்கும் இந்த மாதிரி செய்து தரச் சிபாரிசு செய்யுங்கள் :)

அனுஜன்யா

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி அய்யனார்.

நேரமும் சூழலும் எப்படி வாய்க்கிறது உங்களுக்கு?

புதன்கிழமைதான் கிம் கி டுக்கின் Beautiful படம் பார்த்தேன், இதுவரையும் ஐந்து படங்கள் பார்த்திருக்கிறேன், ஐந்தையும் இடைவெளி விட்டு ஒரு சில தமிழ் மசாலாக்களுக்கு பிறகு பார்த்தேன் அவருடைய படங்களின் தாக்கத்தை உணர முடிந்தது.

நிறையத்திரைப்படங்களோடு ரௌத்ரனும், முபாரக்கும் இருக்கிறார்கள் எடுத்த வந்து பார்க்கத்தான் நேரம் கிடைக்கவில்லை.

:)

வால்பையன் said...

த போ பற்றிய என்னுடய கண்ணோட்டத்தை இங்கே பதிவிடுகிறேன்!
மற்ற படங்கள் பார்த்த பிறகு பதிவிடுகிறேன்!

00

கிராமப்புரங்களில் அதிகமாக சொந்தங்களுக்குள் தான் திருமணம் செய்து வைப்பார்கள், அது ஐந்திலிருந்து எட்டு வயது வித்தியாசம் இருக்கும். சில இடங்களில் என் தம்பிக்காகவே வளர்த்து வர்றேன்னு தாய்மாமனுக்கு மணம் முடித்து வைப்பார்கள், அவர்களுக்கு 15 திலிருந்து 20 வருடங்கள் கூட வித்தியாசம் இருக்கும், அது மாதிரியான ஒரு கதை தான் the Bow.

ஒரு குழந்தையை சிறுமியாய் இருக்கும் போதிலிருந்து வளர்க்கும் ஒரு பெரியவர், ஒரு நதியின் நடுவில் படகில் வாழ்கிறார்கள். அங்கே மீன் பிடிக்க வருபவர்கள் தருவது தான் வருமானம்!
ஒரு குறிப்பிட்ட நாளில் அவளை மணந்து கொள்ள நினைக்கிறார் பெரியவர். அதற்குள் மீன் பிடிக்க வந்த ஒருவன் மேல் காதல் கொள்கிறாள் அந்தப்பெண்! அவள் எனது உடமை என பெரியவர் அவனை விரட்ட,. அந்த பெண் இன்னும் பெற்றோர்களால் தேடப்பட்டு கொண்டிருக்கும் ஒரு தொலைந்து போன குழந்தை என மீண்டும் படகிற்கு வந்து சொல்கிறான் அந்த இளைஞன். அவனுடன் அனுப்பி வைக்கின்ற பெரியவர் அங்கேயே தற்கொலை முயற்சி செய்கிறார், அதை அறிந்த அவள் அந்த பெரியவரை மணக்க சம்மதிக்கிறாள். ஆனாலும் அந்த பெரியவர் தற்கொலை செய்து கொள்கிறார்!

00

ஆன்மா விரும்பியதை அடையாமல் விடாது என்பது போல் அவரது க்ளைமாக்ஸ் காட்சி இருந்தாலும் எனக்கு அதில் உடன்பாடு கிடையாது, இருப்பினும் உணர்வுகளின் அடுத்தகட்ட பரிணாம மாற்றமாக நம்மை நாமே சமாதானப்படுத்தி கொள்ளலாம்.


00

அய்யனார் சொன்னது போல் படத்தில் இசை ஒரு கதாபாத்திரமாகவே இருக்கிறது! நீரும் நீரை சார்ந்த சூழலும் மட்டுமே பயன்படுத்த பட்டிருக்கும், கதைக்கு தேவையானதை மட்டுமே இயக்குனரிடமிருந்து தமிழ் சினிமா கற்று கொள்ள வேண்டியது நிறைய!

Ayyanar Viswanath said...

நன்றி butterfly Surya

கலையரசன் பகிர்வுக்கு நன்றி விரைவில் அக்கவுண்ட் துவங்கிவிடுகிறேன்

நன்றி ரெளத்ரன் பகிர்வுக்கு நன்றி
விரைவில் விடுமுறைகள் வரும் :)

Ayyanar Viswanath said...

வெங்கி நிறைய தண்ணி குடிங்க :)
கதை படிச்சிட்டு சொல்ரேன்

நன்றி நர்சிம்

நன்றி இளவட்டம்

புருனே ஒண்ணும் புரியல.. வேற எங்காவது போட வேண்டிய கமெண்ட் ஆ?

உண்மைதான் கோபி

Ayyanar Viswanath said...

அனுஜன்யா
இந்த கிடார் உபயம் உரையாடலினி
கடந்த ஆறு மாதமாக இந்தப் பக்கத்தை நிர்வகிப்பது அவள்தான்.இந்தப் படமும் அவளுக்குப் பிடிக்கவில்லையென சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

தமிழன்
beautiful பார்த்ததில்லை. உங்களுக்கு நல்ல அருகாமை நண்பர்கள் வாய்த்திருக்கிறார்கள்

வால் பையன்
/அவள் அந்த பெரியவரை மணக்க சம்மதிக்கிறாள். ஆனாலும் அந்த பெரியவர் தற்கொலை செய்து கொள்கிறார்!/

பெரியவர் தனிப்படகில் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வாரே!. தற்கொலை என்றா புரிந்து கொண்டீர்கள் :)

வால்பையன் said...

பெரியவர் அம்பை வான் நோக்கி விட்டுவிட்டு நீரில் குதித்து இறந்து விடுவார், அவளுடன் உறவு கொள்வது பெரியவரின் ஆன்மா என்று அதனால் தான் குறிப்பிட்டுள்ளேன்!

பலருக்கு அந்த அம்பு குத்தியதால் வந்த ரத்தம் என்று தோன்றும், ஆனால் அவளது முகபாவங்களையும், ஆர்கசத்தின் போது அவளது முனகல்களையும் கவனியுங்கள்!

மாதவராஜ் said...

ஆச்சரியமாகவும், கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. இவ்வளவு படங்களை உங்களால் பார்க்க முடிகிறதே! ஒவ்வொன்றும் குறித்து சின்னச் சின்னக் குறிப்புகள் என்றாலும் அதனோடு பயணிக்கச் செய்கிறது. இந்தப் படங்களையெல்லாம் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி. தெரிந்து கொள்ளவாவது முடிகிறதே!!!

MSK / Saravana said...

பொறாமையோடு கேட்கிறேன், இவ்வளவு படங்களை பார்க்கும் நேரம் இருக்கிறதா உங்களுக்கு? உங்கள் ஊரில் ஒரு நாளுக்கு நாற்பது மணி நேரமா?? அல்லது ஒரு நாளுக்கு உங்கள் பணி நேரம் 5 மணி நேரம் மட்டுமா?

இருந்தாலும் அறிமுங்களுக்கு நன்றி. நானும் ஒரு நாள் பார்த்துடுவேன்.. :)

MSK / Saravana said...

@அனுஜன்யா :
//ஏன் சராவை ('சாரா' அல்ல) இந்தப் பாடு படுத்துகிறீர்கள்?//
அய்யயோ.. அவர் அப்படியெல்லாம் பண்ணல.
சாராவை நினைவு படுத்தியதற்கு நன்றி. மறுபடியும் அந்த பதிவை படிக்க போகிறேன்.


உங்களுக்கு ஒரு சூப்பரான டெம்ப்ளட் தேடி பிடிச்சி அனுப்பறேன்.. கொஞ்சம் டைம் கொடுங்க. :)

MSK / Saravana said...

தல, உரையாடலினி கருத்தே, என் கருத்தும். முகப்பு படம் அடுக்கி வைக்க பட்டிருக்கிறது. நீங்களே edit பண்ணி இருக்கீங்க. சரி இல்லை.
ஒரு சின்ன எண்ணம் : music header அல்லது guitar header என்று google, bing image search-களில் தேடி பாருங்கள். நிறைய கிடைக்கும். கொஞ்சம் alter செய்தால் நச்சுன்னு header image கிடைக்கும்.

MSK / Saravana said...

நானும் என்னிடம் இருக்கும் சிலவற்றையும் (header image) அனுப்புகிறேன்.

Venkatesh Kumaravel said...

//உங்களுக்கு ஒரு சூப்பரான டெம்ப்ளட் தேடி பிடிச்சி அனுப்பறேன்.. கொஞ்சம் டைம் கொடுங்க. :)//
இது நல்ல தொழிலாயிருக்கே!

புருனோ Bruno said...

மேலே இருக்கும்
http://www.blogger.com/profile/04442867200829043152 புரோபைல் என் கணக்கு அல்ல

ஒரு போலியின் வேலை

ஆரட்டோரியாவை சிம்பொனி என்று மோசடி செய்து ஊரை ஏமாற்றியவ்ர்களை துதிப்பவர்களிடம் இருந்து போலி புரோபைல் உருவாக்குவது போன்ற தரம்தாழ்ந்த செயல்கள் வருவது இயல்பு தானே !!

சரக்கிருக்கிறவர்கள் ஆஸ்கார் வங்குவார்கள் அல்லது பதிவு எழுதுவார்கள்

சரக்கில்லாதவர்களுக்கு போலி புரோபைலும் போலி சிம்பொனியும் துனை !!

குப்பன்.யாஹூ said...

many many thanks Ayyanaar for sharing great movies with your feeling.

Ayyanar Viswanath said...

நன்றி வால்

நன்றி மாதவராஜ்

சரவணக்குமார் இப்போது வேலை நேரம் 5 தான்.. நல்லதொரு header க்காக காத்திருப்பு :)

வெங்கி இதெல்லாம் மிகுதியான அன்பென்பதைத் தவிர வேறெதும் இல்லை :)

புருனே
போலி மிக நல்லவராக இருக்கிறாரே :)

நன்றி ராம்ஜி

Anonymous said...

hello... hapi blogging... have a nice day! just visiting here....

KARTHIK said...

கிம் கி டுக்கின் படத்துலையே எனக்கு ரொம்ப்ப புடிச்சது 3 iron,Time தான்
மஜித்தை ரசித்த அளவுக்கு அப்பாஸை ரசிக்கமுடியலங்க.இன்னும் கொஞ்சதூரம் போகனும் போல.
அம்ரோஸ் பெரோஸ் எனக்கும் ரொம்ப புடிச்சபடம்.அது பத்தின உங்க விரிவானா பதிவை நானும் எதிர் பாக்குறேன்.

கல்வெட்டு said...

அய்யனார்,
த போ பற்றிய என்னுடைய ஊகம்....

அம்பு பட்டதால் இரத்தம் வந்ததாகவோ அல்லது புணர்ச்சியால் (ஆவி,அரூப..உருவில் பெரியவர் உறவு ) இரத்தம் வந்ததகவோ நான் நினைக்கவில்லை.

அப்போதுதான் அவள் பருவமடைந்தால். அதனால்தான் அவ்வளவு இரத்தம் என்று தோன்றியது எனக்கு.

ஆனால் , அவள் காட்டிய முகபாவங்களும், இந்தவயது வரும்வரை பருவம் அடையாமல் எப்படி இருந்திருப்பாள் என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை.
**
வாயில் மீன் தூண்டிலை வைத்து ஏதாவது செய்வது இயக்குனருக்கு பிடிக்கும்போல. The isle -ம் தற்கொலை முயற்சிகளுக்கு இது பயன்படும்.

இங்கே இசைக்க.

கல்வெட்டு said...

அடிக்குறிப்பு:
இவர் படங்களில் வரும் காமம்/கதை/மேஜிக்கல் ரியலிசம் போன்ற தொண்ணூற்றுச் சொச்சம் அயிட்டங்களைவிட , இவர் காட்சிப்படுத்தும் நிலப்பரப்பே என்னை வியப்பில் ஆழ்த்தும். அப்படி ஒரு இடத்தில் ஒருஇரவு தங்கி, விடிந்த அதிகாலையில் டீயும் தம்மும் போட்டால் எப்படி இருக்கும் என்ற நினைப்புத்தன் வரும் எனக்கு. :-)

Ayyanar Viswanath said...

நன்றி hapi

கார்த்திக் 3 iron படமும் எனக்குப் பிடித்திருந்தது.அப்பாஸ்கிராஸ்தமி மிக மெதுவான இயக்குனர் தான் நீங்களும் மெதுவாய் பாருங்கள் :)

கல்வெட்டு
கிம்கிடுக்கின் மிகப்பெரிய சாத்தியமே பார்வையாளனிடத்தில் அவர் மீதிகளை விட்டுவிடுவதாகத்தான் இருக்கிறது.இதைத்தான் பன்முகத்தன்மை என்று சொல்லிக் கொல்(ள்)கிறார்கள் :)

நிலப்பரப்புகளை கையாள்வதில் எனக்குத் தெரிந்து ரஷ்ய இயக்குனரான ஆந்த்ரெ தார்க்கோயெவ்ஸ்கி மிக முக்கியமானவராகப் படுகிறார்.

கிம்கிடுக் தன்னுடைய மூன்று படங்களில் (ஸ்பிரிங்க் சம்மர்,ஐல்,தபோ) நிலப்பரப்பை முக்கியமாய் நீர்ப்பரப்பை மிக அற்புதமாய் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எனக்கு அந்தப் படகு வீட்டில் படுத்துத் தூங்க வேண்டும் போலிருந்தது :)

chezhian said...

உங்கள் வலைத்தளம் சிறப்பாக இருக்கிறது.தொடர்ந்து எழுந்துங்கள்.

செழியன்

Sivakumar said...

அண்ணாச்சி, இந்த படங்களோட லிங்க் எல்லாம் அனுப்பினா நல்லா இருக்கும். நாமலும் பாத்து பல விஷயங்கள தெரிஞ்சிக்குவோமே!

Featured Post

test

 test