Wednesday, May 25, 2011

டேபிள் டென்னிஸ் கவிதைகள் 1-0

பூமியின் குறுக்கில்
சப்தமெழுப்பாமல் நடந்து கொண்டிருப்பான்
மெல்லிய இடிக்கும் நடுங்குவான்
வெயில் முற்றிய பகலொன்றில்
பக்கத்து வீட்டுக்
குட்டிப் பூனையின்
கழுத்தை முறித்துப் போட்ட
அன்று கூட
மலரிதழின் விதைக் கண்ணிலிருந்து
அதிகாலையில் விழித்தெழுந்ததைப்
பார்த்திருக்கிறார்கள்
அதே நாளின் மாலையில்
உடல் முழுக்க காயங்களாய்
திரும்பியவனை
இறுக அணைத்துக் கொண்டேன்
லயம் பிசகாது
மேசையில் மோதும் பந்தின் சப்தம்
அவன் மார்புக் கூட்டுக்குள்ளிருந்து
கேட்டுக் கொண்டிருந்தது.




No comments:

Featured Post

test

 test