Friday, January 27, 2012

சிலிர்ப்பு

அடையாளங்களை அழித்துக் கொண்டாயிற்று
சுவடுகளையும் மணற்புயல் மூடிவிட்டிருக்கலாம்
புல்வெளியோர கடற்புறாக்கள்
தாழப் பறந்த
அடர்நீல அந்நியப் பறவைகள்
தடயமில்லாமல் கடந்தன
எவரும் அறியாததைப் போலவே
எல்லாமும் நிகழ்ந்து முடிந்தன
நெடும்பாலையில்
கண நேரச் சிலிர்ப்பிற்கு
உடல் அதிர்ந்தடங்கியது.

4 comments:

சசிகலா said...

கண நேரச் சிலிர்ப்பிற்கு
உடல் அதிர்ந்தடங்கியது.
வாசித்து முடிக்கும் வேளையில் கண் முன்னே வந்து போகிறது காட்சிகள் அருமை

உயிரோடை said...

good one Ayyanar. புகைப்படமும் நல்லா இருக்கு

நந்தினி மருதம் said...

கவிதை அழகாக இருக்கிறது. கூர்மையாக இறங்குகிறது வாழ்த்துக்கள்
----------------------------------
நந்தினி மருதம்
நியூயார்க, 2012-06-30

Anonymous said...

''..நெடும்பாலையில்
கண நேரச் சிலிர்ப்பிற்கு
உடல் அதிர்ந்தடங்கியது...''
இது தான் வாழ்வு!. இதற்குள் எத்தனை ஆட்டங்கள்!.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Featured Post

test

 test